Home Blog Page 3010

மனித உரிமைகளை மதியுங்கள்- இந்திய அரசிற்கு ஐ.நா. கோரிக்கை

காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை சபை கேட்டுக் கொண்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. அவையின் உயர் அதிகாரி மிட்செல் பேச்லெட் கூறும் போது, “அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேட்டில் பல இலட்சக்கணக்கான மக்களின் பெயர் விடுபட்டுள்ளது. காஷ்மீரில் தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு மக்கள் பரிதவிப்பான நிலையில் உள்ளனர்.

ஏற்கனவே மேற்கண்ட இரண்டு இடங்களிலும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய இடங்களில் தற்போது நிலவிவரும் சூழல் என்னை மிகவும் கவலை கொள்ள வைக்கின்றது. காஷ்மீரில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, மக்கள் அமைதியாக கூடுவது தடை செய்யப்பட்டு உள்ளுர் அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒன்றல்ல. மக்களுக்கு அடிப்படையான வசதிகள் வழங்கப்பட வேண்டும் காஷ்மீர் தொடர்பான முடிவுகளில் அம்மாநில மக்களும் பங்கு கொள்வதற்கு வழிசெய்ய வேண்டும்.

அஸ்ஸாமில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம் யாரும் நாடற்ற அகதிகளாகி விடாதவாறு இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்ற கோரிக்கைகள் இந்திய அரசிற்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஐ.நா சபையின் முன்னே எழுகதமிழ் : அணிதிரள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு !

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எழுச்சி நிகழ்வாக தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ‘எழுகதமிழ்’ எழுச்சி நிகழ்வுக்கு சமாந்திரமாக அமெரிக்காவிலும் ‘எழுகதமிழ்’ எழுச்சி நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

எதிர்வரும் செப்ரெம்பர் 16ம் நாள் யாழப்பாணம் முற்றவெளியில் தாயக மக்களின் எழுகதமிழ் இடம்பெற இருக்க, நியு யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு முன்னே, புலம்பெயர் தமிழர்களின் எழுகதமிழ் இடம்பெற இருக்கின்றது.

இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இடம்பெற இருக்கின்ற இந்த எழுச்சி நிகழ்வில் அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும்.
– தமிழர்களின் அரசியற் தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும்.
– இலங்கைத்தீவில் தமிழர் தாயகப்பகுதியில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை உள்ளடக்கியுள்ள நியு யோர்க் எழுகதமிழ், தமிழர் தாயகத்தில் முன்வைக்கப்படுகின்ற ஆறு அம்ச கோரிக்கைகளையும், அனைத்துலக சமூகம் நோக்கி முன்வைக்கவுள்ளது.

1. எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்கு நிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

3. தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.

4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெற வேண்டும்

5. வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.

6. இடம்பெயர்ந்த எம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் தமிழர் தாயகத்தில் முன்வைக்கப்படுகின்றன.

நியுயோர்கில் இடம்பெறுகின்ற எழுகதமிழ் நிகழ்வில் கனடாவில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாகவும், இது தொடர்பிலான தகவல்களை கனடா நா.தமிழீழ பணிமனையின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும – மு .திருநாவுக்கரசு.

தமிழ் தேசியத்தின் குரலை உள்நாட்டிலும் உலக அரங்கிலும் உரத்து ஓங்கச் செய்யவும் அவர்களின் இருப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தவும் “”எழுக தமிழ்”” பேரணி வெற்றிகரமானதாக அமைய வேண்டியது அவசியம். இப்பேரணி பிசுபிசுத்துப் போனால் அது தமிழின எதிரிகளுக்கு பெரும் வாய்ப்பாகவும், ஈழத் தமிழினம் இருந்த அடையாளமே இல்லாது அழிந்து போவதற்கான ஒரு முன்னறிவிப்பாகம் அமைந்துவிடும். ஆதலால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அரசியல் போட்டிகள், கட்சி வேகங்கள் என்பனவற்றையெல்லாம் கடந்து இந்த ” எழுக தமிழ்ப் ”’ பேரணியை வெற்றிகரமானதாக ஆக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனினது கடமையும் பொறுப்புமாகும்.

“”நான் பெரிது நீ பெரிது”” என்று போட்டி போட்டுக் கொண்டிருக்காமல் “” எனக்கா உனக்கா முதல் பங்கு”” என்று சண்டையிட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் தேசிய இருப்பை நிலைநாட்ட வல்ல அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஆதரிக்கவும் பலப்படுத்தவும் வேண்டும்.

“”மன்னாதி மன்னர் எங்கே
மாமணித் துரோனர் எங்கே
என்னுடன் தம்பி எங்கே
இலக்கணகுமாரன் எங்கே
கர்ணனும் தேரும் எங்கே
கரைகொளாச் சேனை எங்கே”
என்று பதினெட்டாம் நாள் போர் முடிவில் துரியோதனன் கதறிய நிலையில் ஈழத் தமிழர்கள் இன்று நிற்கின்றோம்.

2009ஆம் ஆண்டு உலகில் காணப்பட்ட சுமாராக 700 கோடி மக்களின் கண்களின் முன் கேட்பாரின்றி அநாதரவான நிலையில் சுமாராக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.

eluka thamil தமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும - மு .திருநாவுக்கரசு.1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் மூத்த பெரும் தமிழ் தலைவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று தமிழ் தாயின் தலைப் பேறுகளான புதல்வர்களும் புதல்விகளும் கூடவே தமிழ்மக்களும் போர்க்களம் புகுந்தனர்.

“”கரிபால்டி அழைக்கின்றார் இளைஞர்களே எழுங்கள்”” என்று 1977ஆம் ஆண்டு தேர்தல் மேடைகளில் முழங்கிய பிரச்சாரப் பீரங்கிகள் இன்று தமிழ் மக்கள மக்களின் முன்னணி தலைவர்களாய் தேரோடும் வீதியிலே சிங்கள இராணுவத்தின் அரவணைப்போடு அகலக் கைவீசிப் பவனி வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் இரத்தத்தில் தோணிகள் ஓட்டி விளையாடி தலைவர்களாய் முள்ளிவாய்க்கால் எலும்புக்கூடுகள் நமக்கு மாளிகை கட்டி மகிழ்ந்து வாழும் தலைவர்களாய் இன்றைய முன்னணி தமிழ் தலைவர்கள் காணப்படுகிறார்கள்.

“” கரிபால்டி அழைக்கிறார் இளைஞர்களே எழுதுக”” என்றும் “” வங்கத்துச் சிங்கங்கள் எழுக “” என்றும் 1970களின் மத்தியில் பேசிய மேடைப் பேச்சு வீரத் தமிழ் தலைவர்களின் வீராவேசப் பேச்சின் பின்னணியில் இளைஞர்களும் யுவதிகளும் உடல் – பொருள் -ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து போராட புறப்பட்டனர்.

“”சம உடமைத் தன்னாட்சி தமிழீழ விடுதலைக்காக எனது உள்ளம், உயிர், உடல், உடமை அனைத்தையும் ஈர்ந்து உறுதியோடு போறாடுவேன் “” என்று . சத்தியம் செய்து போர்க்களம் புகுந்து ஆகுதியான இளைஞர் யுவதிகளின் அர்ப்பணிப்புகளும் வரலாறும் கண்முன் விரிந்து கிடக்கின்றது.

அப்படியே ஆகுதியான அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நலன் விரும்பிகளையும் கணமுன் கண்ட பின்பும் ஓடுகாலி அரசியலுக்கு குறைவின்றி தமிழ் மக்களின் வரலாறு துயரகரமாய் நீண்டு செல்கிறது.

வன விலங்கியல் வாழ்வில் தலையாய வேட்டை விலங்குகள் , மிச்சம் உண்ணி வேட்டை விலங்குகள் , காட்டிக்கொடுக்கும் மற்றும் ஒற்றர் வேலை செய்யும் பறவைகள் என பலமாக வகைப்படுத்துவர்.

உதாரணமாக சிங்கம் மற்றும் புலியினங்கள் என்பன தலையாய வெட்டை விலங்குகள் ஆகும். இவை வேட்டையாடிய மிச்சங்களை உண்ணும் மிச்சமுண்ணி விலங்குகளாக கழுதைப் புலிகள் , ஓநாய்கள் , காட்டு நாய்கள், நரிகள் என்பன காணப்படுகின்றன.

கழுகுகள் ,வல்லூறுகள், பருந்துகள் மற்றும் இவற்றையொத்த பறவையினங்கள் என்பன வேட்டையாடப்பட்ட பிராணிகளை இறந்துபோன பிராணிகளை எனைய பிராணிகளுக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் தகவல் வழங்கவல்ல பிராணிகளாக காணப்படுகின்றன.

மிச்சமுண்ணி விலங்குகள்விட்ட சிதலங்களை கழுகுகளும் , வல்லூறு களும் , பருந்துகளும் கொத்தி உண்ணும். இந்த மிச்சமுண்ணிநீ பறவைகள்விட்ட துகள்களை வண்டுகளும் ,பூச்சிகளும் உண்ணும்.

இத்தகைய காட்டு விலங்கு வாழ்விலிருந்து நாட்டு அரசியல் அதிகம் வேறுபட்டதல்ல. ஈழத் தமிழினம் மேற்படி தலையாய வேட்டை விலங்கு அரசியல் மிச்சம் உண்ணி விலங்கு அரசியல் காட்டிக்கொடுக்கும் பறவையின அரசியலெனப் பல்வேறு மூர்க்கமான அரசியல் வலைப்பின்னலுள் சிக்குண்டு தவிக்கின்றார்கள்.

இத்தகைய சூழலில் ஈழத் தமிழ் தாயின் புதல்வர்கள் முன்னும் புதல்விகள் முன்னும் விரிந்துகிடக்கும் பணிகள் மிகவும் கடினமானவை. தமிழ் மக்களின் எதிர்காலம் மிகவும் பலமானவர்கள்.

மேற்படி காட்டு விலங்கு வகை தலைவர்களின் அரசியலிலிருந்து தமிழ் மக்களை தற்காத்து முன்னேறுவதற்கும், தமிழ்மக்களுக்கான இறுதி இலக்கை அடைவதற்கும் , அதிக புத்திசாலித்தனமும், அதிக அர்ப்பணிப்பும் , அனைவரையும் அரவணைக்கும் பிரந்த மனப்பாங்கும், யதார்த்த பூர்வமான உலகக் கண்ணோட்டமும் , சாதுரியமான வெளியுறவுக்கொள்கையும் அவசியம்.

இதற்கான சரியான புதிய பாதை கொண்ட ஒரு மாற்று தலைமைத்துவம் இன்றி தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க முடியாது.

துணை அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் பின்பு தமிழ் மக்கள் நீதிக்காகவும் சமாதானபூர்வமான அரசியல் திமுக்காகவும் சர்வதேச அரசுகளிடம் சிங்களத் தலைவர்களிடமும் தமிழ் தலைவர்களிடமும் நம்பிக்கை வைத்து காத்து நின்றனர்.

ஆனால் மேற்படி உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புகளினால் நம்பிக்கை ஊட்டப்பட்ட , வாக்குறுதி அளிக்கப்பட்ட நல்லாட்சி அரசின் பெறுபேறுகள் என்பன இனப்படுகொலையாளிகளைப் பாதுகாப்பதிலும் , இனப்படுகொலை அரசை காப்பாற்றுவதிலும் ஒருபுறம் வெற்றி பெற்றதுடன் மறுபுறம் தமிழ் தமிழ் மக்கள் வேண்டி நின்ற நீதியான நியாயமான அரசியல் தீர்வை நிராகரித்துள்ளதுடன் தமிழ் மண்ணை சிங்களக் குடியேற்றங்களால் மேலும் ஆக்கிரமிப்பதிலும், தமிழ் மண்ணை பெரிதும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்துவதிலும் முன்னேறியுள்ளது.

இத்தகைய சூழலில் தமிழ் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சிங்கள ஆட்சியாளர்களின் உற்ற நண்பர்களாக இருக்கும் நிலையில் , அவர்களின் கூடைக்குள் இவர்களும் ஒரு பகுதியாக இணைந்துகொண்ட நிலையில் தமிழ் மக்கள் தன்னெழுச்சி கொண்டு ஒரு புதிய பாதையில் , ஜனநாயக வழியில் போராட வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளவர்களாய் காணப்படுகின்றனர்.

மேற்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் திசைமாறிய அரசியலுக்குப் பதிலாக ஒரு புதிய மாற்று அரசியல் தலைமையை உருவாக்க மாற்றுத் தலைமை பேசும் தமிழ் அரசியல் தலைவர்கள் புறப்பட்டனர் அதன்பொருட்டு தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு மக்கள் போராட்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனாலும் அது தனக்குள் மோதிக்கொள்ள நிலைமையில் வீரியமிக்க காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை மறுசீரமைப்பு புதிய உத்வேகத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியதைத் தவிர வேறு வழி எதுவும் தமிழ் மக்களுக்கு கிடையாது. ஆதலால் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கிய அனைத்து மாற்று அரசியல் சக்திகளும் தங்கம் கிடையான பேதங்களை முற்றிலும் மறந்து பிரதான எதிரி உடனடி எதிரி உடனடிப் பிரச்சினைகள் என்பனவற்றிற்கு முகங்கொடுத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது வரலாற்று கட்டளையாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அபூர்வமாக தமிழ் மக்களுக்கான தலைவிதியை முன்னெடுத்து உழைக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். இந்நிலையில் எழுத தமிழ் நிகழ்வை மிக வெற்றிகரமாக முன்னெடுக்க அனைத்து தமிழ் மக்களும் பெரிதும் பாடுபடவேண்டும்.

ஈழத்தமிழ் தேசியவாதத்தை மில் கட்டமைப்பு செய்ய வேண்டும் அதற்காக பண்பாட்டு பணிகள் மூலமாகவும் அடைக்கலமும் முன்னெடுப்புகளை ஆக வேண்டிய அவசர காலம் இது. இந்நிலையில் எழுக தமிழ் பேரணியை அனைத்து உட்பேதங்களையும் கடந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

கட்சி வேறுபாட்டு பட்டிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் வெள்ளாடுகள் தங்களை மடக்கி வைத்துள்ள ஓநாய்களை தாண்டி , பட்டி வேலிகளையும் தாண்டி எழுக தமிழ் பேரணியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பை கொண்டவர்களாக உள்ளனர்.

மாற்றுத் தலைமையை பற்றி பேசுகின்ற அனைவரும் அத்தகைய அனைத்து கட்சியினரும் முதலில் ஒன்றுபட்டு மக்கள் முன் தமது ஐக்கியத்தை காட்சிப்படுத்துவார்களேயானால் வேறு பட்டிகளுக்ககுள் இருக்கும் வெள்ளாடுகள் அனைத்தும் வேலிகளை தாண்டிவந்து எழுக தமிழ் பேரணியை தாமாக பலப்படுத்தும். அது ஈழத்தமிழ் தேசியவாதத்தை பலப்படுத்தும். அதுவே இப்போது தமிழ் மக்களுக்கு வேண்டியதாகும். இது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழ் மக்களின் குரலையும் பேரம் பேசுவதற்கான அரசியல் பலத்தையும் தமிழ் மக்களுக்கும் மாற்று அரசியல் பேசும் அரசியல் தலைவர்களுக்கும் அளித்தும்.

உள்நாட்டு வெளிநாட்டு அரசில் சக்திகளாலும் தமிழ் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டு, கைவிடப்பட்டு அனாதரவாக
காணப்படும் தமிழ் மக்களுக்கு தற்போது எழுக தமிழ் பேரணி
மூலமான தமிழ் தேசிய எழுச்சியை முன் நிறுத்துவதை தவிர வேறு மார்க்கம் எதுவும் கிடையவே கிடையாது

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டமானது 04.09.2019 அன்று Belgium ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக Luxembourg, Germany நாடுகளையும் 500Km கடந்து , இன்று 09.09.2019 அன்று Germany நாட்டில் Saarbrücken மாநகரசபையில் முதல்வருடனும் , பத்திரிகை நிருபருடனும் ஏற்பட்ட சந்திப்பின் பின் France நாட்டின் எல்லைக்குள் எழுச்சியோடு நுழையப்பட்டது.

தொடர்ச்சியாக Sarreguemines மாநகரசபையில் இரு பத்திரிகை ஊடகங்களும் மற்றும் ஒரு தொலைக்காட்சி ஊடகம் முதல்வரும் மனிதநேய ஈருருளிப் பயணாளர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

அத்தோடு Mosaïque, Républicaine Lorraine ,dna போன்ற ஊடகங்களுடன் நடைபெற்ற கருத்துப் பகிர்வில் மனிதநேய ஈருருளிப் பயணாளர்கள் எம் தாயகத்தில் தமிழீழ மக்கள் மீது தொடர்ச்சியாக ஒரு இனச்சுத்திகரிப்பை செய்து கொண்டிருக்கும் சிங்கள அரசிடம் இருந்து எம் மக்கள் விடுதலை பெற வேண்டும் எனவும் , தாயகத்தில் 2009 ஆம் ஆண்டு அன்று கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வேண்டும் முகமாக அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை என்பதையும் வலியுறுத்தி எமது இதர முக்கிய கோரிக்கை அடங்கிய மனுவும் கையளிக்கப் பட்டது.

UN walk 2 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்எமது அறவழிப்போராட்டத்திற்கு French ஊடகங்கள் மற்றும் காவல்துறையின் கண்காணிப்பில் எமக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பும் இன்று நடைபெற்ற பயணத்தில் பெரும் உற்சாகத்தையும் அறவழிப்போராட்டத்தின் மீதும் பெரும் நம்பிக்கையினைக் கொடுத்தது.

நிறைவாக Sarre union மாநகரசபை சந்திப்பின் பின் Phalsbourg மாநகரத்தில் இயற்கையின் அரவணைப்பில் மாவீரர் துணைநிற்க இனிதே நிறைவடைந்தது. நாளை காலை Phalsbourg , Sverne மாநகரசபை சந்திப்பின் பின் Starsbourg மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் பிற்பகல் 3.00 மணி அளவில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் 16.09.2019 அன்று ஐ. நா முன்றலில் நடைபெற இருக்கின்ற முக்கிய கவனயீர்ப்புப் பேரணி நோக்கி விரைகின்றது.

UN walk1 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்

மனிதர்கள் நிலவில் ஓட்டப்போகும் வாகனம்

நிலவிற்கு முதன்முதலில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அதன் கரடுமுரடான மேற்பரப்பில் பிரத்தியேக வாகனம் ஒன்றில் சிரமத்துடன் பயணம் செய்தனர்.

“அடுத்த முறை நிலவிற்கோ செவ்வாய்க் கிரகத்திற்கோ நாம் செல்லும் போது நமது வாகனங்களும் கொஞ்சம் அதைப் போலவே தான் இருக்கும்.

அந்த வாகனம் 6 சக்கரங்களுடன், எல்லாமே தனித்தனியாக திரும்பக்கூடியவையாக இருக்கும். நிலவின் தரைப்பரப்பில் விரைவில் தவழும் புதிய வாகனத்திற்கு, நாசா தயாரித்துள்ள முன்மாதிரி வடிவமைப்பு இது.

நாங்கள் அடுத்த வாகனத்தை வடிவமைத்து வருகின்றோம். அடுத்த வாகனம் 2023இல் மேலே செல்லும். அது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அது அப்பலோ போல் இருக்கும் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி வாகன தலைமைப் பொறியியலாளர் லூசியென் ஜக்கின் தெரிவித்தார்.

வாகனத்தை செலுத்துவதை முடிந்தவரை பாதுகாப்பானதாக ஆக்குவதற்கு, பளுவை தாங்கும் திறன் எல்லா நேரங்களிலும், அனைத்து சக்கரங்கள் மீதும் சம அளவில் பகிர்ந்திருக்கும். அதாவது சற்று கடினமான தரைப்பரப்பிலும் வாகனம் செல்ல முடியும்.

எதிர்கால விண்வெளி பயணங்களில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களைப் பரிசோதிப்பதற்காக, ஏற்கெனவே இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரே சமயத்தில் 4 விண்வெளி வீரர்கள் 2 வாகனங்களை, 2 வாரங்களுக்கு வெளியில் எடுத்துச் செல்கிறார்கள். அதிலேயே வாழ்வது, பணியாற்றுவது, அவர்களுக்குத் தேவைப்படும் உணவின் அளவு, அவர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை அறிய இது உதவுகின்றது.

Moon vehi 2 மனிதர்கள் நிலவில் ஓட்டப்போகும் வாகனம்நிலவின் தூசி மிகவும் கடினமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும் என்பதால் நிலவின் தரைப்பரப்பில் வாகனத்தின் இயக்கம் மெதுவாக, சீரான வேகம் கொண்டாக இருக்கும். அது உண்மையில் கடினமான சூழல் அமைப்பாக இருக்கும்.”

”அப்பலோவில் இருந்து நாங்கள் உறுதியாகத் தெரிந்து கொண்ட விடயங்கள் அவை ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து கீழே போட்டு காலால் மிதித்து நொறுக்கினால் அது எப்படி கூர்மையான துண்டுகளாக இருக்குமோ, அதைப் போல நிலவின் பரப்பு இருக்கும். ஏனெனில் அங்கு கூர்மையை மழுங்கச் செய்யும் வகையில் அரிப்பு ஏற்படுவதற்கு காற்று இல்லை” என்று லூசியென் ஜன்கின் கூறுகின்றார்.

“அதனால் தான் வாகனங்களின் வெளிப்புறத்தில், விண்வெளி வீரர் உடையுடன் சூட்-கோட்களும் சேர்க்கின்றோம். எனவே இதன் பின்னால், அதன் முனையில் இருந்து வாகனத்திற்குச் செல்வதற்கான கதவு இருக்கும். எனவே வாகனத்தின் கதவை நீங்கள் திறந்தால் உங்களுடைய உடையின் பின்பகுதியில் இருப்பீர்கள். அதில் இணைத்துக் கொள்ளலாம்.

எனவே, இப்போது உங்களுடைய விண்வெளி உடையும், உங்கள் கபினும் அழுத்தம் ஏற்பட்டதாக இருக்கும். அதை நீங்கள் சீல் செய்து கபின் கதவை மூடிவிடுவீர்கள். நான் இங்கேயே தொடர்ந்து இருக்கும் போது நீங்கள் விண்வெளி உடையில் செல்வீர்கள். நாங்கள் கபினில் அழுத்தத்தைக் குறைக்க வேண்டியதில்லை.“ என்று அவர் மேலும் கூறினார்.

 

 

இலங்கை விவகாரம் தொடர்பில் வாய்திறவாத மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது.

இந்த கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் உரையாற்றியிருந்தார்.

அவர் தனது உரையில் பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்தபோதும் இலங்கை விவகாரங்கள் குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இலங்கை இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அண்மையில் கவலை வெளியிட்டிருந்தார்.

எனினும் இந்த விடயம் குறித்தும் நேற்றைய உரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் என்பன குறித்து இந்த அமர்வில் கரிசனை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன்’ ;வாரிவழங்கப்படும் வாக்குறுதிகள்

ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்

காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அமைச்சர் சஜித் பிரேமதாச முற்றவெளியில் நடைபெறும் என்ரபிரைஸ் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச கண்காட்சியையும் பார்வையிட்டார். இதன் போது அங்கு வந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒருவரின் தாயார் சஜித் பிரேமதாசவுடன் பேசுவதற்காக அவரை நெருங்க முற்பட்டிருந்தார்.

இருந்த போதும் அவருடைய பாதுகாப்பு பிரிவினர் அந்த தாயாரை தடுத்து நிறுத்தி விட்டனர்.

இதன் போது அங்கு நின்ற யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டிடம் உரையாடிய குறித்த தாய் தான் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சஜித் பிரேமதாசவிடம் ஒரு நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.

முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் ஏற்பாட்டில் அந்த தாய் அங்கு வைத்தே சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

இதன் போது அந்த தாயார் சஜித் பிரேமதாசாவை பார்த்து நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிகின்றோம்.

நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவினை தரவேண்டும்.

இதனை யாழ்.மாநகர முதல்வர் சஜித் பிரேமதாசவிற்கு சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச காணாமல் போனோர் விடயத்தில் நான் கரிசனையுடன் செயற்படுவேன். காணாமல் போனார் பற்றிய அலுவலகம் அதன் செய்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.

ஒரு முறை எமக்கு வாய்ப்­ப­ளித்து பாருங்கள் ஜனா­தி­ப­திகள் வச­மி­ருந்த மக்­களின் சொத்­துக்­க­ளை மக்கள் மய­மாக்­கிக் ­காட்­டு­கின்றோம் – அநு­ர­கு­மார திசா­நா­யக

இந்த ஒரு முறை எமக்கு வாய்ப்­ப­ளித்து பாருங்கள் ஜன­நா­யக மாற்­றத்­தையும், அதேபோல் ஜனா­தி­ப­திகள் வச­மி­ருந்த மக்­களின் சொத்­துக்­க­ளையும்  மக்கள் மய­மாக்­கிக்­காட்­டு­கின்றோம் என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார்.

வெறு­மனே ஆட்­சி­யா­ளர்கள் தமது தலை­களை மாற்­றிக்­கொண்டு வழ­மை­யான ஊழல்வாத அர­சி­யலை செய்ய இனியும் இட­ம­ளிக்­க­க்கூ­டாது. இந்த ஜனா­தி­பதி தேர்­தலில்  மக்­களின் பலத்­தைக்­கொண்டு அடுத்த பொதுத் தேர்­தலில் அர­சியல் மாற்றம் ஒன்­றினை செய்­வதே எமது இலக்­காகும்  எனவும் அவர்  தெரி­வித்தார்

தேசிய மக்கள் சக்­தியின் அனு­ரா­த­புரம்  மக்கள் சந்­திப்பில்  நேற்று முன்­தினம் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் இங்கு மேலும் உரை­யாற்­று­கையில்

இன்று ஜனா­தி­பதி தேர்தல் ஒன்­றுக்­காக நாம் இயங்கி வரு­கின்றோம். இந்த தேர்தல் இந்த நாட்­டுக்­கான ஆட்­சி­யாளர் ஒரு­வ­ரையும் அர­சாங்கம் ஒன்­றி­னையும் உரு­வாக்கும் முக்­கிய தேர்­த­லாகும். ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்­பன  மிகவும் எதிர்­பார்ப்பு மிக்க தேர்­தல்­க­ளாகும். இதில் மக்கள் எதிர்­பார்ப்­புடன் ஆட்­சி­யா­ளர்­களை நிய­மித்து குறு­கிய காலத்தில் அர­சாங்­கத்­தையும் ஆட்­சி­யா­ளர்­க­ளையும் விமர்­சிக்க ஆரம்­பித்து விடு­வார்கள்.

இந்த விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டுக்­களில் மாத்­திரம் ஆட்­சியை மாற்­றி­விட முடி­யாது. மாறாக மக்கள் சரி­யான மாற்றம் ஒன்­றினை உரு­வாக்க வேண்டும். மாற்­றத்தை உரு­வாக்கும் அதி­காரம் மக்­க­ளி­டமே உள்­ளது. ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை மக்­களின் அதி­கா­ரத்தை ஒரு குழு­வி­ன­ருக்கு வழங்­கு­கின்­றனர். இம்­முறை இந்த அதி­கா­ரத்தை யார் கைகளில் கொடுக்க வேண்டும் என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

இன்று எமக்கு எவ்­வா­றான ஆட்சி வேண்டும் என்­பதை சிந்­திக்க வேண்டும். இந்த நாட்டில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சியில் இருந்து மீளும்  ஆட்­சி­யொன்று வேண்டும். ஆகவே இத்  தருணம் மிகவும் முக்­கி­ய­மான தரு­ண­மாகும். இது­வரை கால­மாக மக்கள் உரு­வாக்­கிய ஆட்­சிகள் பல­வீ­ன­மான ஆட்சி என்­பது தொடர்ச்­சி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஜன­நா­ய­கத்தை உரு­வாக்க கொண்­டு­வ­ரப்­பட்ட ஆட்­சி­யா­ளர்கள் முதலில் ஜன­நா­ய­கத்­தையே மீறி­னார்கள்.

அதேபோல் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப வந்­த­தாக கூரி­ய­வர்கள் செய்­த­தெல்லாம் கள­வு­களும் கொல்­லை­க­ளு­மே­யாகும். ஜன­நா­யகம் என கூறி­ய­வர்கள் மூல­மாக வெள்­ளைவேன் கடத்தல், கொலைகள், குற்­றங்கள் அதி­க­ரித்­த­தையும் கடன்­களை வாங்கி நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை நாச­மாக்­கி­ய­துமே நில­வின. இவ்­வாறு ஆட்­சியில் இருந்­த­வர்கள்  மாறி மாறி தமது நாச­கார வேலை­யி­னையே செய்­தனர்.

ஒரு ஆட்­சி­யாளர் மீது நம்­பிக்கை வைத்து அவரை தெரிவு செய்­வதும் பின்னர் அவர் ஊழல் வாதி­யென அவரை மாற்­று­வ­து­மாக இதே சக்­க­ரமே சுழன்­று­கொண்­டுள்­ளது. இனி­யா­வது மக்கள் இதில் இருந்து விடு­பட வேண்டும். இந்த சுழற்­சியை இந்த தேர்­த­லி­லா­வது நிறுத்­த­வேண்டும். இனியும் இந்த இரண்டு பிர­தான அணி­யையும் நம்பி வாக்­க­ளிக்க முடியும் என மக்கள் நினை­கின்­றீர்­களா? இனியும் இவர்­களில் எவ­ரையும் மக்­களால் நம்ப முடி­யாது.

இனியும் இவர்­களால் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. தனி நபர்­களை கொண்டு இந்த நாட்டை பலப்­ப­டுத்த முடி­யாது. ஒரு நாட்­டினை கட்­டி­யெ­ழு­பு­வது என்­பது மாயா­ஜால வேலை அல்ல. இந்த நாட்­டினை நேசிக்கும் நபர்கள் மூல­மா­கவே இந்த நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். மக்­க­ளுக்கு ஏற்­படும் கஷ்­டங்­களை தமக்கு ஏற்­படும் கஷ்­ட­மாக  நினைத்து வேலை செய்யும் நபர்­களே இந்த நாட்­டினை முன்­னோக்கி கொண்­டு­செல்ல முடியும்.

ஆனால் இந்த ஆட்­சி­யா­ளர்கள் அவ்­வாறு மக்கள் குறித்து  சிந்­திக்கும் ஆட்­சி­யா­ளர்கள் அல்ல. இவர்கள் தமது சுக­போக வாழ்க்­கையை மட்­டுமே சிந்­தித்து ஆட்சி செய்­கின்­றனர். ஆகவே மக்­க­ளுக்­கான அணி இன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய மக்கள் சக்­தி­யுடன் மக்கள் இணைய வேண்­டிய தருணம் வந்­துள்­ளது. இப்­போது எமக்­குள்ள நோக்கம் இந்த தேர்­தலை அடிப்­ப­டை­யாக கொண்டு அடுத்த பொதுத் தேர்­தலில் ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும் என்­ப­தே­யாகும். தனி நபரை மாற்றி எந்த நன்­மையும் கிடைக்­கப்­போ­வ­தில்லை.

ஆகவே அடுத்த பொதுத் தேர்­தலில் ஆட்சி மாற்றம் ஒன்­றினை உரு­வாக்­கு­வதே எமது பிர­தான நோக்­க­மாகும். இந்த தேர்­தலில் மக்­களின் எதி­ரிக்கும் மக்­களின் நண்­ப­னுக்கும் இடை­யி­லான போட்­டியே இடம்­பெ­று­கின்­றது. இதில் பெரிய எதிரி யார் சின்ன எதிரி யார் என்ற காரணம் எல்லாம் எடு­ப­டாது. மாற்று அணியில் உள்­ளவர் எதி­ரிகள்.  அவர்­க­ளுக்கு எதி­ராக நாம் கள­மி­றங்­கி­யுள்ளோம். இதில் மக்கள் யாரை ஆத­ரிப்­பது என்­பதை  மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

நாட்டில் அனைத்து பகு­தி­க­ளிலும் மாளி­கைகள் அமைக்­கப்­பட்டு ஜனா­தி­ப­திக்­கான தங்­கு­மிடம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு வரு­டத்தில் இரண்டு ராத்­தி­ரிகள் கூட தங்­காத  மாளி­கை­களும் இவற்றில் உள்­ளன. ஆனால் அவற்றை  பரா­ம­ரிக்க கோடிக்­க­ணக்கில் செல­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எமக்கு ஒரு முறை ஆட்­சியை கைய­ளி­யுங்கள் இந்த அனைத்து சொத்­துக்­க­ளையும்  மக்கள் மயப்­ப­டுத்­திக்­காட்­டு­கின்றோம். மக்­க­ளுக்­கான சரி­யான சேவையை எவ்­வாறு செய்­வது என்­பதை நாம் செய்து கட்­டு­கின்றோம்.

எமது எதிர்­கால சமூ­கத்­துக்­கான சரி­யான இராச்­சியம் ஒன்­றினை நாம் உரு­வாக்­கிக்­காட்­டு­கின்றோம். இன்று அரச நிறு­வ­னங்கள் அனைத்­துமே நட்­டத்தில் இயங்­கு­கின்­றன. மக்கள் பெயரை கூறிக்­கொண்டு ஆட்­சி­யா­ளர்கள் கடன்­களை பெற்று செல்­கின்­றனர். இதில் ஒன்றை  கூறிக்­கொள்ள விரு­பு­கின்றேன், எமது ஆட்­சியில் சாராய விற்­ப­னை­யாளர் எவ­ருக்கும் அர­சியல் செய்ய இட­ம­ளிக்க மாட்டோம். சாராயம் விற்­ப­வர்கள் சாராய விற்­ப­னையை மட்டும் செய்­யட்டும் அர­சியல் செய்ய முடி­யாது.

இன்று இந்த நாட்டில் கொள்­க­லன்கள் அளவில் குடு போதைப்­பொருள் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றது. ஒரு அமைச்சர் இன்னொருவரை நேரடியாக குற்றம் சுமத்துகின்றார். ஆனால் இதனை தடுக்க எடுத்த நடவடிக்கை ஒன்றும் இல்லை. ஆகவே முதலில் இந்த அரசியல் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும். இங்கிருந்தே எமது அத்திவாரத்தை போடா வேண்டும். அதற்கே நாம் முன்வந்துள்ளோம். வீழ்ச்சி கண்டுள்ள சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப எம்மாலான சகல நடவடிக்கையும் முன்னெடுப்போம். இனியும் இந்த நாசகார ஆட்சியை முன்கொண்டு செல்ல இடமளிக்க கூடாது. இப்போதில் இருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆரோக்கியமான இராச்சியம் ஒன்றினை உருவாக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

லெபனான் எல்லையை கடந்து வந்த இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா நேற்று  குறிப்பிட்டுள்ளது. ரம்யி கிராமத்தை நோக்கி வந்த இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்றை முறையான ஆயுதங்களுடன் ஷியா அமைப்பின் போராளிகள் எதிர்கொண்டதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆளில்லா விமானம் ஹிஸ்புல்லாவின் கைவசம் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

எனினும் வழக்கமான நடவடிக்கையின்போது தெற்கு லெபனானில் தமது ஆளில்லா விமானம் ஒன்று விழுந்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. அதற்கான காரணத்தை குறிப்பிடாத இஸ்ரேலிய இராணுவம் அது ஒரு சாதாரண ஆளில்லா விமானம் என்று தெரிவித்தது.

கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி இரு தரப்புக்கும் இடையில் பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக சிரிய உள்நாட்டு யுத்தத்தில் பங்கேற்றிருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் இரு போராளிகள் இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த மாதம் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த பதற்றம் அதிகரித்தது.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு இடையிலான புதிய யுத்தம் ஒன்று பிராந்தியம் எங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

இரு தரப்புக்கும் இடையில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற 33 நாள் யுத்தத்தில் பொதுமக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 1,200 லெபனானியர்கள் மற்றும் படையினரை பெரும்பான்மையாகக் கொண்ட 160 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலில் வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கடும் சவாலை எதிர்கொண்டிருக்கும் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மோதல் ஒன்றை தவிர்ப்பதில் அவதானத்துடன் உள்ளார்.

‘விடுதலைப் புலிகள் தொடர்பான எந்த வார்த்தையையும் நான் பிரயோகிக்கவில்லை’ முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தன்னால் வெளிப்படுத்தப்பட்ட கருத்து திரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இவ்வாறான முரண்பாடுகள் தொடர்வதற்கு சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் ஊடகங்களில் வெளியாகின்ற சில செய்திகளுமே காரணமாக அமைவதாகவும் முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த முரளிதரன், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்த நாள் தனக்கு மகிழ்ச்சியான தினம் எனத் தெரிவித்திருந்தமை தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன.

குறித்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும்போதே முத்தையா முரளிதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“2009 – 2019 இற்கு இடைப்பட்ட யுத்தம் அற்ற சூழல் தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2019 இல் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. எனவே என்னுடைய வாக்கு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒருவருக்கே வழங்கப்படும் என்பதையே தெரிவித்திருந்தேன்.

யுத்தம் மகிழ்ச்சியான விடயம் அல்ல என்பதைதான் தெரிவித்திருந்தேன். ஆனால், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை தொடர்பான எந்த வார்த்தையையும் பிரயோகிக்கவில்லை.

இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருந்தேன். சிறுபான்மை கட்சிகள் தொடர்பான கேள்விக்கு, கட்சி ரீதியான – மத ரீதியான அரசியல் கட்சிகளின் செய்ற்பாடுகள் நாட்டில் பிரிவினைகளை ஏற்படுத்துகின்றது என்ற வகையில் அவை அகற்றப்பட வேண்டும் என்ற விடயத்தையும் கூறியிருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக வெளிப்படையாக யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று முரளிதரன் தெரிவிக்கின்றபோதிலும் கோட்டபாய ராஜபக்ஷ ஆதரவு கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றி, யுத்ததை முடிவுக்கு கொண்டு வரப்பபட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவித்திருப்பதன் மூலம் முரளிதரனின் எதிர்பார்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.