சிறீலங்கா அரசின் தொலைக்காட்சி நிறுவனத்தை பாதுகாப்பு அமைச்சு கைப்பற்றியது

சிறீலங்கா அரசின் றூபவாகினி தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தை ஊடகத்துறை அமைச்சகத்திடம் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் பெறுப்பில் எடுத்துக்கதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (09) வெளியிடப்பட்டுள்ளது. சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனாவே செயற்படுவதால் தற்போது பிரதான தேசிய ஊடகம் அவர் வசம் சென்றுள்ளது.

இதற்கான அறிவித்தலை அரச தலைவர் செயலகம் விடுத்துள்ளது. முன்னர் இது ஊடகத்துறை அமைச்சர் றுவான் விஜயவர்த்தனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேசிய ஊடகமான றுபவாகினி தென்னிலங்கையில் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு மிகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கவல்லது. எனவே அது ரணில் விக்கிரமசிங்காவின் பக்கம் செல்லாது தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.