விடுதலைப் புலி பெண் போராளியின் படத்தால் கோத்தபயாவிற்கு வந்துள்ள புதிய சர்ச்சை

இலங்கையில் விடுதலைப் புலிகளின் சின்னத்தையோ, புலிகளின் சின்னம் உள்ள கொடியையோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களையோ வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.  கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்தநாளைக் கொண்டாட முயற்சி செய்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் பொது நிகழ்வொன்றில் அதுவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபயா ராஜபக்ஸ கலந்து கொண்டிருந்த நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட புகைப்படமொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டொன்றில் விடுதலைப் புலிகளின் சின்னத்துடனான தொப்பியை அணிந்துள்ள விடுதலைப் புலிகளின் பெண் போராளியின் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயமானது அரசியல் அவதானிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இலங்கை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெவ்வேறு சட்டங்களா என அரசியல் அவதானிகள் வினவியுள்ளனர்.

இதனிடையே தேர்தல் காலம் என்பதால் இந்தப் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.