Home Blog Page 2375

வன்னியில் 19 அரசியல் கட்சிகள் 34சுயேட்சை குழுக்கள் வேட்புமனுதாக்கலை செய்தன. 10 மனு நிராகரிப்பு!!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னிமாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று மாலைவரை 19 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயேட்சை குழுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இலங்கை தமிழரசுகட்சி,தமிழ்மக்கள் தேசிய கூட்டணி, இலங்கை சோசலிகட்சி,ஜனநாயக இடதுசாரி முண்ணனி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,,பொதுமக்கள் முன்னணி,, ஈழமக்கள் ஜனநாயக கட்சி,ஜனசெதபெரமுன,சிங்கள தீப ஜாதிகபெரமுன,தமிழர் ஜக்கியசுதந்திர்முண்ணனி,தேசிய மக்கள்சக்தி,தமிழர் சமூக ஜனநாயக கட்சி,மௌவிம ஜனதாகட்சி,ஜக்கியதேசியகட்சி,எக்சத் பெரமுன,ஜக்கிய மக்கள் சக்தி,தமிழர் விடுதலை கூட்டணி,முன்னிலை சோசலிசகட்சி,எங்கள் மக்கள்சக்தி கட்சிஓ
ஆகிய அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சை குழுக்களும்
தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

12ஆம் திகதி முதல் 19ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த நிலையில்,இன்று மதியம்12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளபட்டிருந்தமை குறிப்பிடதக்கது..

இதேவளை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கினைஸ் பாரூக்,ஆகியோர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கியமக்கள் சக்தியில் போட்டியிடுவதற்காக நேற்றயதினம் வேட்புமனுவினை தாக்கல் செய்ததுடன், விடுதலை புலிகள் மக்கள் பேரவையில் போட்டியிடும் முன்னாள் மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் சுயேட்சைகுழு சார்பாக நேற்றயதினம் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை.

நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடமுறை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

அமெரிக்க டொலரை கைவிட சங்காய் கூட்டமைப்பு தீர்மானம்

வர்த்தகத்தின் போது அமெரிக்க டொலரை தவிர்த்து தமது நாணயங்களை பயன்படுத்துவது என சங்காய் கூட்டமைப்பைச் சேர்ந்த ரஸ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்த்தான் உட்பட்ட 8 நாடுகள் தீர்மானித்துள்ளன.

இன்று (19) மொஸ்கோவில் இடம்பெறும் நிதி அமைச்சர்களின் மாநாட்டில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இந்த கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் ரஸ்யா இந்த கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் அந்த நாடுகளின் நாயணத்தை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டுவந்திருந்தது.

சீனா, இந்தியா, ரஸ்யா, பாகிஸ்தான், கரிகிஸ்தான், தஜிகிஸ்த்தான், உபகிஸ்த்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இன்று ரஸ்யாவில் சந்திக்கின்றனர்.

ஸ்ரீலங்காவில் ஊரடங்குச் சட்டம் – மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (19) காலை 8.00 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என புத்தளம் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்காக மறு அறிவித்தல் வரும் வரை புத்தளம் மற்றும் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனுக்களை 12.30 வரையே ஒப்படைக்கமுடியும்.

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் இறுதி தினம் இன்றாகும். இன்று (19) நண்பகல் 12.30 மணி வரையில் இந்த பணிகள் இடம்பெறும்.

நேற்று (18) காலை வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணி ஆரம்பமானது. முக்கிய அரசியல் கட்சிகளைப் போன்று சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை கையளிப்பதில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் தற்பொழுது அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி பிரதீப் ஜயரத்ன தெரிவித்தார்.

சுயேட்சைக்குழுக்கள் 3 வேட்பு மனுக்களை ஒப்படைத்துள்ளன. 22 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார். காலி, மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், யாழில் அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக நேற்று பகல் வரை 7 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து அரசியல் கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.

சீனாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரசின் பிறப்பிடமாக மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணம் உள்ளது.

இந்த மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இந்த வைரசால் சீனா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 80 ஆயிரம் பேரில் 67 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த மாகாணத்தையே சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில், ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 11 பேர் வைரசால் பலியானதாகவும் சுகாதாரத் துறை கூறி உள்ளது.

தேர்தலை பிற்போட வேண்டும்

ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் நீங்கும்வரை பாராளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த வைரஸ் அச்சம் நீங்கும்வரை எந்த தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஏனையவர்களும் மக்களுடைய பாதுகாப்பினை முதன்மையாக கருதி மக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளும் பரப்புரைகளை கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை கையளித்த பின்னர் அங்கு செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்ப்பில் யாழ்.தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலமையில் வேட்புமனு நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 தேர்தல் மாவட்டங்களிலே போட்டியிடுகின்றது. இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலும் நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு இன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலம் முடிவடைந்த பின்னர் சில தீர்மானங்கள் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளோம்.

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக பொது மக்களுடைய பாதுகாப்பபை முதன்மையானதாக கருதி, தேர்தலை பிற்போட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரியுள்ளோம்.

பொது மக்களுடைய பாதுகாப்புத்தான் எங்களுடைய அதி உச்ச கரிசனையாக உள்ளது. ஆனாலும் அதனுடன் சேர்ந்து சுயாதீனமான தேர்தல் நடக்க வேண்டுமானதாக இருந்தால் ஜனநாயக பண்பியல்புகல் பல நடமுறைப்படுத்தப்பட வேண்டும். சுயாதீனமாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். மக்கள் பரப்புரைக் கூட்டங்களுக்கு சென்றுவரக் கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். தேர்தலன்று மக்கள் அச்சமில்லாமல் சென்று வாக்களிப்பதற்கான சூழ்நிலை இருக்க வேண்டும். இவ்வாறான சூழல் இருந்தால்தான் சரியான, முறையான தேர்தலாக இருக்கும். ஆகவே ஆட்சியிலே உள்ள கட்சியை தவிர தேர்தலில் போட்டியிடும் ஏனைய பால கட்சிகள் தேர்தலை பிற்போடுமாறு கோரியுள்ளார்கள்.

வேட்புமனுக்கான காலம் நீடிக்கப்படாத காரணத்தினாலே நாங்கள் அமைதியாக, எவருக்கும் இடையூறு இல்லாமல், சனநெருக்கடி இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளோம்.

இதை தொடர்ந்து எமது பரப்புரைகளையும் நாங்கள் நிறுத்தி வைப்போம். பொது மக்கள் கூடுகின்ற சூழ்நிலைகளை நாங்கள் தவிப்போம். பொறுப்போடு செயற்படுகின்றோம். மற்றவர்களும் பொறுப்போது செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகிற்றோம். சூழ்நிலை சரியான நலமைக்கு திரும்புகின்ற போது நாங்கள் இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்பது எங்களது நம்பிக்கையாக உள்ளது என்றார்.

தமிழ்த் தேசத்தை அழிப்போருக்கு இத்தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்: கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசத்தை அடியோடு அழிக்கும் நோக்கில் இதுவரை காலமும் பிழையான வழிக்கு தள்ளிச் சென்றவர்களுக்கு இந்தத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது.

வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சியின் ஊடாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளோம். போர் முடிவடைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அமைத்து 10 வருடங்கள் கழிந்துள்ளன. இந்த 10 வருடங்களில் நாங்கள் தமிழ் மக்களுக்கு பல கருத்துக்களைக் கூறி வந்துள்ளோம்.

குறிப்பாக தமிழ்த் தேசத்துக்கு வரப்போதும் ஆபத்துக்கள் தொடர்பான முன்கூட்டியே சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தமிழ் தேசத்துக்கான ஆபத்துக்கள் தொடர்பில் நாங்கள் கூறிவந்த அத்தனை கருத்துக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். எம்மைப் பொறுத்தவரை புதிய தலைமைத்துவம் தமிழ்த் தேசத்துக்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

அதை கடந்த 10 வருடங்களாகச் சொல்லிவந்தோம். இதனை இன்று மக்களும் தாங்களாகவே அனுபவ ரீதியான முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வந்துள்ளார்கள். அந்த புதிய தலைமைத்துவத்தை நேர்மையாகவும், கொள்கை ரீதியாக இறுக்கமாகவும், தூய்மையாகவும் வழங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராள்ளது.

இந்தவகையில் எமது கட்சியின் வேட்பாளர்கள் தமிழ்த் தேசத்தின் 5 தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய 8 மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றார்கள். அந்த
அனைத்து மாவட்டங்களிலும் நேற்று வேட்புமனுக்
கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எம்மை பொறுத்து
வரை இந்தத் தேர்தல் புதிய ஓர் ஆரம்பமாக இருக்
கும்.

தமிழ்த் தேசம் கடந்த 10 வருடங்களாக சரியான
தலைமைத்துவம் இல்லாமல், பிழையான வழிக்கு
தள்ளப்பட்டுள்ள நிலையில் இந்தத் தேர்தலின் முடிவு
கள் அந்த பிழையான தலைமைத்துவத்துக்கு ஒரு
முற்றுப்புள்ளி வைத்து, தெளிவான, உறுதியான, தமிழ்
தேசத்தில் நலன்கள் சார்ந்து புதிய பாதை ஒன்றுக்கு
வழிவகுக்கும்.

அந்தப் புதிய பாதைக்கான தலைமையை நாங்கள் கொடுப்போம். இதற்கான முன்கூட்டிய தமிழ்
மக்களுக்கு நன்றி கூறிக் கொள்ளுகின்றோம்” என்றார்.

கொரோனா தாக்கம் இருக்கும் வரை தேர்தல் பரப்புரை இல்லை: சுமந்திரன்

ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்கவேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் நீங்கும்வரை நாடாளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் நீங்கும் வரை எந்தத் தேர்தல் பரப்புரைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஏனையவர்களும் மக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி மக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளும் பரப்புரைகளை கைவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு வைக்கையளித்த பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் யாழ். தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலமையில் வேட்புமனு கையளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.

இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலும் நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய் யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலம் முடிவடைந்த பின்னர் சில தீர்மானங்கள் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளோம்.

குறிப்பாக கொரோனாவைரஸ் பரவும் அபாயம் காரணமாகப் பொது மக்களின் பாதுகாப்பை முதன்மையானதாகக் கருதி,தேர்தலைப்பிற்போட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரியுள்ளோம். பொதுமக்களின் பாதுகாப்புத்தான் எங்கள் அதிஉச்சக் கரிசனையாக உள்ளது. ஆனாலும் அதனுடன் சேர்ந்து சுயாதீனமான தேர்தல் நடக்கவேண்டுமாக இருந்தால் ஜனநாயகப் பண்பியல்புகள் பல நடமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சுயாதீனமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும்.மக்கள் பரப்புரைக் கூட்டங்க ளுக்குச் சென்று வரக்கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். தேர்தலன்று மக்கள் அச்சமில்லாமல் சென்று வாக்களிப்பதற்கான சூழ்நிலை இருக்கவேண்டும். இவ்வாறான சூழல் இருந்தால்தான் சரியான, முறையான தேர்தலாக இருக்கும். ஆகவே ஆட்சியிலே உள்ள கட்சியைத் தவிர தேர்தலில் போட்டியிடும் ஏனைய பல கட்சிகள் தேர்தலைப் பிற்போடுமறு கோரியுள்ளன.

வேட்புமனுக் காலம் நீடிக்கப்படாத காரணத்தினால் நாங்கள் அமைதியாக, எவருக்கும் இடையூறு இல்லாமல், சனநெருக்கடி இல்லாத ஒருசூழ்நிலையை உருவாக்கி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளோம். இதை தொடர்ந்து எமது பரப்புரைகளையும் நாங்கள் நிறுத்திவைப்போம். பொதுமக்கள் கூடும் சூழ்நிலைகளை ங்கள் தவிர்ப்போம். பொறுப்போடு செயற்படுகின்றோம். மற்றவர்களும்பொறுப்போது செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகிற்றோம். சூழ்நிலைசரியான நிலைமைக்குதிரும்புகின்ற போது நாங்கள் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்பது எங்களது நம்பிக்கையாக உள்ளது” என்றார்.­

நீதியின் குரல்கள் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்; சி.வீ.விக்னேஸ்வரன்

நீதியின் குரல்கள் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் எனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் உண்மையானவர்கள் யார், நேர்மையானவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியுமென்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுத் தாக்கல் செய்திருந்தார் நீதியரசர் விக்கினேஸ்வரன்.

அவருடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர். இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“யார் உண்மையானவர்கள், யார் நேர்மையானவர்கள் என்பது எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே எமது மக்களுக்கான அவ்வாறான நீதியின் குரல்கள் நாடாளுமன்றத்தில் வெகு விரைவில் ஒலிக்கும் என்பது எனது நம்பிக்கை.

அது உலகின் ஆன்மாவைத் தொடும் என்றும் நான் நம்புகின்றேன். நிச்சயம் உலகத்தின் சிந்தனைகள் மாறும். எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பதை என் மக்களுக்கு நான் கூறுகின்றேன்” என்றார்.