Home Blog Page 2376

தேர்தலை பிற்போட வேண்டும்

ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் நீங்கும்வரை பாராளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த வைரஸ் அச்சம் நீங்கும்வரை எந்த தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஏனையவர்களும் மக்களுடைய பாதுகாப்பினை முதன்மையாக கருதி மக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளும் பரப்புரைகளை கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை கையளித்த பின்னர் அங்கு செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்ப்பில் யாழ்.தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலமையில் வேட்புமனு நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 தேர்தல் மாவட்டங்களிலே போட்டியிடுகின்றது. இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலும் நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு இன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலம் முடிவடைந்த பின்னர் சில தீர்மானங்கள் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளோம்.

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக பொது மக்களுடைய பாதுகாப்பபை முதன்மையானதாக கருதி, தேர்தலை பிற்போட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரியுள்ளோம்.

பொது மக்களுடைய பாதுகாப்புத்தான் எங்களுடைய அதி உச்ச கரிசனையாக உள்ளது. ஆனாலும் அதனுடன் சேர்ந்து சுயாதீனமான தேர்தல் நடக்க வேண்டுமானதாக இருந்தால் ஜனநாயக பண்பியல்புகல் பல நடமுறைப்படுத்தப்பட வேண்டும். சுயாதீனமாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். மக்கள் பரப்புரைக் கூட்டங்களுக்கு சென்றுவரக் கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். தேர்தலன்று மக்கள் அச்சமில்லாமல் சென்று வாக்களிப்பதற்கான சூழ்நிலை இருக்க வேண்டும். இவ்வாறான சூழல் இருந்தால்தான் சரியான, முறையான தேர்தலாக இருக்கும். ஆகவே ஆட்சியிலே உள்ள கட்சியை தவிர தேர்தலில் போட்டியிடும் ஏனைய பால கட்சிகள் தேர்தலை பிற்போடுமாறு கோரியுள்ளார்கள்.

வேட்புமனுக்கான காலம் நீடிக்கப்படாத காரணத்தினாலே நாங்கள் அமைதியாக, எவருக்கும் இடையூறு இல்லாமல், சனநெருக்கடி இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளோம்.

இதை தொடர்ந்து எமது பரப்புரைகளையும் நாங்கள் நிறுத்தி வைப்போம். பொது மக்கள் கூடுகின்ற சூழ்நிலைகளை நாங்கள் தவிப்போம். பொறுப்போடு செயற்படுகின்றோம். மற்றவர்களும் பொறுப்போது செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகிற்றோம். சூழ்நிலை சரியான நலமைக்கு திரும்புகின்ற போது நாங்கள் இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்பது எங்களது நம்பிக்கையாக உள்ளது என்றார்.

தமிழ்த் தேசத்தை அழிப்போருக்கு இத்தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்: கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசத்தை அடியோடு அழிக்கும் நோக்கில் இதுவரை காலமும் பிழையான வழிக்கு தள்ளிச் சென்றவர்களுக்கு இந்தத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது.

வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சியின் ஊடாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளோம். போர் முடிவடைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அமைத்து 10 வருடங்கள் கழிந்துள்ளன. இந்த 10 வருடங்களில் நாங்கள் தமிழ் மக்களுக்கு பல கருத்துக்களைக் கூறி வந்துள்ளோம்.

குறிப்பாக தமிழ்த் தேசத்துக்கு வரப்போதும் ஆபத்துக்கள் தொடர்பான முன்கூட்டியே சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தமிழ் தேசத்துக்கான ஆபத்துக்கள் தொடர்பில் நாங்கள் கூறிவந்த அத்தனை கருத்துக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். எம்மைப் பொறுத்தவரை புதிய தலைமைத்துவம் தமிழ்த் தேசத்துக்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

அதை கடந்த 10 வருடங்களாகச் சொல்லிவந்தோம். இதனை இன்று மக்களும் தாங்களாகவே அனுபவ ரீதியான முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வந்துள்ளார்கள். அந்த புதிய தலைமைத்துவத்தை நேர்மையாகவும், கொள்கை ரீதியாக இறுக்கமாகவும், தூய்மையாகவும் வழங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராள்ளது.

இந்தவகையில் எமது கட்சியின் வேட்பாளர்கள் தமிழ்த் தேசத்தின் 5 தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய 8 மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றார்கள். அந்த
அனைத்து மாவட்டங்களிலும் நேற்று வேட்புமனுக்
கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எம்மை பொறுத்து
வரை இந்தத் தேர்தல் புதிய ஓர் ஆரம்பமாக இருக்
கும்.

தமிழ்த் தேசம் கடந்த 10 வருடங்களாக சரியான
தலைமைத்துவம் இல்லாமல், பிழையான வழிக்கு
தள்ளப்பட்டுள்ள நிலையில் இந்தத் தேர்தலின் முடிவு
கள் அந்த பிழையான தலைமைத்துவத்துக்கு ஒரு
முற்றுப்புள்ளி வைத்து, தெளிவான, உறுதியான, தமிழ்
தேசத்தில் நலன்கள் சார்ந்து புதிய பாதை ஒன்றுக்கு
வழிவகுக்கும்.

அந்தப் புதிய பாதைக்கான தலைமையை நாங்கள் கொடுப்போம். இதற்கான முன்கூட்டிய தமிழ்
மக்களுக்கு நன்றி கூறிக் கொள்ளுகின்றோம்” என்றார்.

கொரோனா தாக்கம் இருக்கும் வரை தேர்தல் பரப்புரை இல்லை: சுமந்திரன்

ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்கவேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் நீங்கும்வரை நாடாளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் நீங்கும் வரை எந்தத் தேர்தல் பரப்புரைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஏனையவர்களும் மக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி மக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளும் பரப்புரைகளை கைவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு வைக்கையளித்த பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் யாழ். தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலமையில் வேட்புமனு கையளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.

இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலும் நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய் யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலம் முடிவடைந்த பின்னர் சில தீர்மானங்கள் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளோம்.

குறிப்பாக கொரோனாவைரஸ் பரவும் அபாயம் காரணமாகப் பொது மக்களின் பாதுகாப்பை முதன்மையானதாகக் கருதி,தேர்தலைப்பிற்போட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரியுள்ளோம். பொதுமக்களின் பாதுகாப்புத்தான் எங்கள் அதிஉச்சக் கரிசனையாக உள்ளது. ஆனாலும் அதனுடன் சேர்ந்து சுயாதீனமான தேர்தல் நடக்கவேண்டுமாக இருந்தால் ஜனநாயகப் பண்பியல்புகள் பல நடமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சுயாதீனமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும்.மக்கள் பரப்புரைக் கூட்டங்க ளுக்குச் சென்று வரக்கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். தேர்தலன்று மக்கள் அச்சமில்லாமல் சென்று வாக்களிப்பதற்கான சூழ்நிலை இருக்கவேண்டும். இவ்வாறான சூழல் இருந்தால்தான் சரியான, முறையான தேர்தலாக இருக்கும். ஆகவே ஆட்சியிலே உள்ள கட்சியைத் தவிர தேர்தலில் போட்டியிடும் ஏனைய பல கட்சிகள் தேர்தலைப் பிற்போடுமறு கோரியுள்ளன.

வேட்புமனுக் காலம் நீடிக்கப்படாத காரணத்தினால் நாங்கள் அமைதியாக, எவருக்கும் இடையூறு இல்லாமல், சனநெருக்கடி இல்லாத ஒருசூழ்நிலையை உருவாக்கி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளோம். இதை தொடர்ந்து எமது பரப்புரைகளையும் நாங்கள் நிறுத்திவைப்போம். பொதுமக்கள் கூடும் சூழ்நிலைகளை ங்கள் தவிர்ப்போம். பொறுப்போடு செயற்படுகின்றோம். மற்றவர்களும்பொறுப்போது செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகிற்றோம். சூழ்நிலைசரியான நிலைமைக்குதிரும்புகின்ற போது நாங்கள் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்பது எங்களது நம்பிக்கையாக உள்ளது” என்றார்.­

நீதியின் குரல்கள் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்; சி.வீ.விக்னேஸ்வரன்

நீதியின் குரல்கள் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் எனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் உண்மையானவர்கள் யார், நேர்மையானவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியுமென்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுத் தாக்கல் செய்திருந்தார் நீதியரசர் விக்கினேஸ்வரன்.

அவருடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர். இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“யார் உண்மையானவர்கள், யார் நேர்மையானவர்கள் என்பது எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே எமது மக்களுக்கான அவ்வாறான நீதியின் குரல்கள் நாடாளுமன்றத்தில் வெகு விரைவில் ஒலிக்கும் என்பது எனது நம்பிக்கை.

அது உலகின் ஆன்மாவைத் தொடும் என்றும் நான் நம்புகின்றேன். நிச்சயம் உலகத்தின் சிந்தனைகள் மாறும். எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பதை என் மக்களுக்கு நான் கூறுகின்றேன்” என்றார்.

தனிமைப்படுத்திய மேற்குக்கு ;மனிதம் காட்டிய கஸ்ரோவின் கியூபா

இறந்தும் உயிர் வாழும் மாண்பு மிக்க பெரும் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ , சேகுவேரா உங்கள் தேசத்தின் சேவையை என்றும் மனதில் பூஜித்து கொள்வோம். நன்றி கியூபா நாட்டு மக்களே.உங்களின் பெருந்தன்மையை உலகம் இப்போதாவது புரிந்து கொள்ளட்டும்.

கியூபாவில் பெரும் இயற்கைப் பேரிடர் வந்து மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்!

“உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்”, எனப் பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்!

அமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை.

பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப் பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன!

அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், அய்ரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் பிடல் உருவாக்கினார்.

உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள்.

இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்!

உலக நாடுகளே!உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம்; எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள்”, என்று அறிவித்தார்.

அவ்வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 இலட்சம் மருத்துவர்களைக் கியூபா அனுப்பியுள்ளது.

இன்றைக்கு ‘கொரோனா’ வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ, அப்படி 60 ஆண்டுகளாக இந்தக் கியூபாவை அமெரிக்கா தனிமைப் படுத்தி வைத்தி இருக்கிறது!Fidel Castro2 தனிமைப்படுத்திய மேற்குக்கு ;மனிதம் காட்டிய கஸ்ரோவின் கியூபா

அவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா!

இதோ! பிரிட்டன் போன்ற நாடுகள் எவ்வளவோ கெடுதல் செய்தாலும், அந்த மக்களையும் காப்பாற்ற கியூபா தான் முன் வந்துள்ளது!

எல்லா நாடும், தனது நாட்டு எல்லையை மூடி சொந்த நாட்டு மக்களைக் கூட உள்ள விடமாட்டேன்னு சொல்லுறான்…ஆனால், கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீஷ் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி அனுப்பிய போது….
கியூபா தனது துறைமுகத்தில் அனுமதித்து…தஞ்சம் கொடுத்துள்ளது…மருத்துவம் வழங்கி அவர்களை குணப்படுத்த முன்வந்துள்ளது…

கியூபா என்னும் சின்னஞ்சிறு நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் உட்பட ராஜீய ரீதியான தடைகள் அனைத்தையும் ஏவி, மற்ற நாடுகளையும் அதற்காக நிற்பந்தித்து வரும்…உலகின் பொருளாதாரப் புலிகள் எல்லாம்… தெறிச்சு ஓடும் போது…இந்த நோயைக் கண்டு பதறாமல் நின்று எதிர்கொள்ளும் கியூபா தான் இன்றைய உலகின் ஹீரோ…!

இலங்கைபோக்குவரத்து சபை ஊழியர்களிற்கும் விடுமுறை!!

நாட்டில் கொரணா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளநிலையில் அதனை கட்டுபடுத்துவதற்காக இலங்கை அரசு பல்வேறுநடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

அந்தவகையில் பொதுப்போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கைபோக்குவரத்து சபையின் அனைத்துஊழியர்களிற்கும் நாளையும்,நாளைமறுதினமும் என இரண்டுநாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவினை இலங்கைபோக்குவரத்து சபையின் தலைமை அலுவலகம் அனைத்து சாலைகளிற்கும் வழங்கியுள்ளது.

பொதுப்போக்குவரத்தின் ஊடாக கொரணாவைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதனை கருத்தில்கொண்டே குறித்தநடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பெண்ணுக்கு இந்தியாவில் ‘சாதனைப் பெண்கள் விருது 2020’ வழங்கி கௌரவிப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் நந்தவனம் பவுண்டேசன் பல்துறைகளிலும் சாதித்துக்கொண்டிருக்கும் பெண்களை இனங்கண்டு அவர்களை கௌரவப்படுத்தும் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் சார்பாக வவுனியாவிலுள்ள திருமதி ஜீவராணி றஜிக்குமார் உட்பட இலங்கையிருந்து தெரிவு செய்யப்பட்ட ஜவருக்கு கடந்த 08.03.2020 அன்று சென்னை சாலிக்கிராமத்திலுள்ள பிரசாத் மண்டபத்தில் இடம்பெற்ற ‘சாதனைப் பெண்கள் 2020’ எனும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த இருபத்தி நான்கு பெண்கள் விருதினைப் பெற்றுக்கொண்டதுடன் இலங்கையைச் சேர்ந்த ஐந்து பெண்கள் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களின் ஜீவராணி றஜிகுமார் (வடமாகாணம்) பாத்திமா ஸிமாரா அலி (கொழும்பு), பாத்திமா றிஸ்வானா (பண்டாரவளை) , காயத்திரி யோசப் நகுலன் (மட்டக்களப்பு), புஸ்பராணி சந்தியா (கொழும்பு) ஆகிய ஐவருக்கு இவ்விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் நந்தவனம் பவுண்டேசன் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் சாதிக்பாட்சா, பொருலாளர் திருமதி பா. தென்றல், ஆகியோருடன் பிரதம அதிதிகளாக திரைப்பட இயக்குநர் அகத்தியன், இலங்கை தொழிலதிபர் ஹாசிம் உமர், யுனிவர்ஸ் நிறுவுனர் நரேந்திர விவேகானந்தா (கனடா) சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் பஜிலா ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG 523067b817b2aa3cedd315e22a68bf8a V வவுனியா பெண்ணுக்கு இந்தியாவில் 'சாதனைப் பெண்கள் விருது 2020' வழங்கி கௌரவிப்பு

IMG 6da8021a671a97c5cf3d1121eaff0ddb V வவுனியா பெண்ணுக்கு இந்தியாவில் 'சாதனைப் பெண்கள் விருது 2020' வழங்கி கௌரவிப்பு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், கந்தையா அருந்தவபாலன், சிற்பரன் தவச்செல்வம், கந்தையா ரத்னகுமார் மற்றும் மீரா அருளானந்தம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் மற்றும் சிங்கபாகு சிவகுமார் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கட்சி சார்பில் நல்லதம்பி ஸ்ரீகாந்தா மற்றும் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் சார்பில் அதன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.

சிறைக் கைதிகளை பார்வையிட தற்காலிக தடை

இலங்கையிலுள்ள சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை கைதிகளுக்கு இடையே கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கடந்த சனிக்கிழமை முதல் கைதிகளைப் பார்வையிடுவதற்கு ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் எந்த இடத்தில் எந்தப் பொருளில் எத்தனை மணி நேரம் உயிர் வாழும் ஆய்வில் புதிய தகவல்

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தரைத் தளத்திலும், காற்றிலும் பல மணிநேரங்கள் முதல் நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1.80 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நோயை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள சுயசுத்தம், கைகளை அடிக்கடி சவர்க்காரம் அல்லது சுத்திகரிப்பான் கொண்டு கழுவுதல் போன்றவை அவசியம் என்று வலியுறுத்தப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இந்தக் கட்டுரை “நியூஇங்கிலாந்து ஜேர்னல் ஒப் மெடிசன்“ இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதாக அறிகுறிகள் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களைப் போலத்தான் அவர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாகத் தான் கொரோனா வைரஸ் அதிகமாக மற்றவர்களுக்கு பரவுகின்றது.
கொரோனா வைரஸ், சார்ஸ்-சிஓவி-2 (SARS-CoV-2) ஆகியவை காற்றிலும் பரவக்கூடியது. சுத்தம் இல்லாத பகுதிகளிலும், தரைத்தளத்திலும் 3 மணிநேரம் முதல் பல நாட்கள் வரை வாழக்கூடியது.
செப்புப் பாத்திரங்கள், பொருட்களில் கொரோனா வைரஸ் 4 மணிநேரம் வரை உயிர் வாழும்.
அட்டைகள், காட்போட் போன்றவற்றில் 24 மணிநேரம் வரை உயிர் வாழும்.
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களில் 2 முதல் 3 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர் வாழும்.
இதில் சார்ஸ் சிஓவி-2 மற்றும் சார்ஸ் சிஓவி-1 ஆகிய இரு வைரஸ்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தன்மை கொண்டவை. இந்த வைரஸ்கள் அதிகமான உயிரிழப்பை உண்டாக்குபவை. இந்த இரு வைரஸ்களும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனால், கோவிட் -19 வைரஸ் அதாவது கொரோனா வைரஸ குடும்பத்தில் இருக்கும் இந்த வைரஸ் மிகப் பெரிய அளவில் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை விளக்க முடியவில்லை.

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் நாள்தோறும் ஒவ்வொரு இடத்தைத் தொடும் போதும், இருமல் செய்யும் போதும், பொருட்களைத் தொடும் போதும் மற்றவர்களுக்குப் பரப்புகிறார். இவ்வாறு பரவும் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும் என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம் என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.