சீனாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரசின் பிறப்பிடமாக மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணம் உள்ளது.

இந்த மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இந்த வைரசால் சீனா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 80 ஆயிரம் பேரில் 67 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த மாகாணத்தையே சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில், ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 11 பேர் வைரசால் பலியானதாகவும் சுகாதாரத் துறை கூறி உள்ளது.