Home Blog Page 2374

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை

இலங்கையில், தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை, மீள அவர்களது நாடுகளுக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் சுமார் 38,000 வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கின்றனர் எனவும் அவர்களை, அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான நட வடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வுள்ளன எனவும் அரசு அறிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

கல்லடியில் மூன்று வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசம்

மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்துள்ளன.

ஹாட்வெயார் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அருகில் இருந்த இரண்டு வர்த்த நிலையங்கள் எரிந்துள்ளன.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்று தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் கலகமடக்கு பகுதியில் சேவையில் ஈடுபடுத்தும் நீர் அடிக்கும் வாகனமும் தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது.IMG 0172 கல்லடியில் மூன்று வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசம்

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வ தி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் நேரடியாக சென்று தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

குறித்த தீ பரவல் தொடர்பில் எதுவித காரணமும் தெரியாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.IMG 0244 கல்லடியில் மூன்று வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசம்

குறித்த தீயினால் மூன்று வர்த்தக நிலையங்களும் முற்றாக எரிந்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

பூசா கடற்படை முகாமிலும் கொரோனா சிகிச்சை பிரிவு

பூசா கடற்படை முகாமில் கொரோனா விசேட சிகிச்சை பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 136பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் வெலிகந்த வைத்தியசாலையிலும் கொரோனா விசேட சிகிச்சைப் பிரிவொன்று நிறுவப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளனவர்களுக்கு தடையின்றி சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான சகல வசதிகளும் இந்தப் பிரிவில் நிறுவப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை அங்கொட தொற்று நோய்ப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சை வழங்க போதிய வசதிகள் இல்லாதவிடத்து வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் விசேட பிரிவு நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

வன்னியில் 19 அரசியல் கட்சிகள் 34சுயேட்சை குழுக்கள் வேட்புமனுதாக்கல்!! தெரிவித்தாட்சி அலுவலர்!!

வன்னி தெர்தல் தொகுதியில் 45 வேட்புமனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாகவும் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரச அதிபரும் தெரிவித்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னிமாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 19 அரசியல் கட்சிகளும் மற்றும் 34 சுயேட்சை குழுக்களும் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இதன்போது 6 சுயேற்சைக்குழுக்களின் வேட்புமனுவும் 2 பெரும்பாண்மை கட்சிகளான மௌவிமஜனதாபெரமுன,ஜனநாயக ஜக்கியதேசியமுன்னணி ஆகிய இரு கட்சிகளின்வேட்புமனுவும் தேர்தல் திணைக்களத்தால் நிராகரிக்கபட்டுள்ளது.

குறித்த வேட்ப்புமனுக்கள் 1981 ஆம் ஆண்டு பாராளுமன்றதேர்தல் சட்டத்திற்கமைவாக சமர்பிக்காபடாமையினால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 45 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களிற்கான கட்டுப்பணம் மீள வழங்கப்படும்.

நாட்டில் இடம்பெற்றுகொண்டிருக்கும் கொரனா வைரஸ்தாக்கத்தினால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
எனவே தேர்தல் ஆணைக்குழுவால் தீர்மானிக்கபடுகின்ற ஒரு திகதியில் இந்த தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை சீனா வழங்கியது

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை வழங்கும் ஒப்பந்தத்தில் சீன அபிவிருத்தி வங்கி கையொப்பமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கை சார்பில் திறைசேரிச் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல மற்றும் சீன அபிவிருத்தி வங்கி சார்பில் துணை இயக்குநர் வாங் வீ ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

சீன அபிவிருத்தி வங்கி இந்த வசதியை சலுகை விதிமுறைகளிலும், சலுகை வட்டி விகிதத்திலும் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில தமிழ்க் கட்சிகள் வேட்புமனுக்களை இன்று (19) தாக்கல் செய்துள்ளன.

யாழ். செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக முதன்மை வேட்பாளரான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன், எம்.ஏ.சுமந்தரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், இமானுவேல் ஆர்னோல்ட், சசிகலா ரவிராஜ் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பாக, முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக முதன்மை வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் செல்வராசா கஜேந்திரன், வாசுகி ஆகியோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதன் தலைமையில் சங்கரப்பிள்ளை பத்மராஜா, கந்தையா தியாகலிங்கம், பரணிரூபசிங்கம் வரதராஜசிங்கம் உள்ளிட்டோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அத்துடன் சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அத்துடன் வன்னித் தேர்தல் தொகுதியிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், வினோநோகராதலிங்கம், செ.மயூரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதன்மை வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமயிலான வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் ஐந்து பேரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மூன்று பேரும், புளொட் சார்பில் ஒருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கத்தினை தலைமை வேட்பாளர்களாகக் கொண்டு எட்டு உறுப்பினர்கள் மட்டக்களப்பில் பேட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பில் பிள்ளையான் தோற்று விடுவார் என்கிறார் கருணா

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தோல்வி பெறுவது நிச்சயம் என விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்தும் பிள்ளையான் நிராகரித்து விட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மதுபானசாலை உரிமையாளர்களையும், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களையுமே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இவர்கள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள்?

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த மூன்று மாத காலமாக தமிழ் பேசும் மக்களை புறந்தள்ளியுள்ளது. அவர்களின் பிரச்சினைகளை நானே நேரில் சென்று தீர்த்து வருகின்றேன். இதனாலேயே நான் போட்டியிட நேர்ந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் இரண்டு ஆசனங்களைப் பெற்று வெற்றியடைவோம். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் புறந்தள்ளி விடுவார்கள் என்பதை நான் உறுதியாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.

வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த திகதியில் நடத்தப்பட மாட்டாது

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிப்பெண், சிறுவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட ஸ்ரீலங்கா இராணுவம்!

யாழ். நகர்கோவில் கிழக்கு பகுதியில் இராணுவத்தினர் இளைஞன் ஒருவனை கைது செய்ய முயற்சித்த போது அவர் தப்பி சென்ற நிலையில் பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த தை பொங்கல் தினத்தன்று இதே பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் தர்க்கம் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டதுடன் பிரதான சந்தேகநபர் என ஒரு இளைஞனை இராணுவம் தேடிவந்தது. ஆனாலும் நீதிமன்றில் அவ்வாறு எவரையும் தேடவில்லை என பொலிஸார் கூறியிருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினமும் ப.ஐங்கரன் என்ற இளைஞனை நாகர்கோவில் கிழக்கு கடற்கரையில் வைத்து கைது செய்ய இராணுவ புலனாய்வு பிரிவு முயற்சித்த போது அவர் கடலில் குதித்து நீந்தி தப்பியுள்ளார்.

இதனையடுத்து கரையில் நின்றவர்கள் மீதும், தப்பி சென்ற இளைஞனின் சகோதரிகள் மீதும் இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான இரு பெண்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் என கூறப்படுகிறது.

மேலும் சிறுவன் ஒருவன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை தப்பிச் சென்ற ஐங்கரன் என்ற நபரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளதுடன், இராணுவ சீருடை மற்றும் சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்தவர்கள் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.