வன்னியில் 19 அரசியல் கட்சிகள் 34சுயேட்சை குழுக்கள் வேட்புமனுதாக்கல்!! தெரிவித்தாட்சி அலுவலர்!!

வன்னி தெர்தல் தொகுதியில் 45 வேட்புமனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாகவும் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரச அதிபரும் தெரிவித்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னிமாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 19 அரசியல் கட்சிகளும் மற்றும் 34 சுயேட்சை குழுக்களும் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இதன்போது 6 சுயேற்சைக்குழுக்களின் வேட்புமனுவும் 2 பெரும்பாண்மை கட்சிகளான மௌவிமஜனதாபெரமுன,ஜனநாயக ஜக்கியதேசியமுன்னணி ஆகிய இரு கட்சிகளின்வேட்புமனுவும் தேர்தல் திணைக்களத்தால் நிராகரிக்கபட்டுள்ளது.

குறித்த வேட்ப்புமனுக்கள் 1981 ஆம் ஆண்டு பாராளுமன்றதேர்தல் சட்டத்திற்கமைவாக சமர்பிக்காபடாமையினால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 45 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களிற்கான கட்டுப்பணம் மீள வழங்கப்படும்.

நாட்டில் இடம்பெற்றுகொண்டிருக்கும் கொரனா வைரஸ்தாக்கத்தினால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
எனவே தேர்தல் ஆணைக்குழுவால் தீர்மானிக்கபடுகின்ற ஒரு திகதியில் இந்த தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.