Home Blog Page 2271

சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்த இயக்குநர் மு.களஞ்சியம் கைது

சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்து பேசியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இயக்குநர் சோழன் மு. களஞ்சியம் அவர்களை, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளது.

தமிழர் நலன் பேரியக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சோழன் மு.களஞ்சியம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாம் தமிழர் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கூட்டத்தில் சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்து பேசியிருந்தார்.

இக்கூட்டத்தில் குறித்த ஒரு அரசியல் கட்சியை தாக்கிப் பேசியதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் களஞ்சியம் மீது 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய காவல்துறை முயற்சித்தது.

ஆனால் முன் பிணை கேட்டு மு. களஞ்சியம் அவர்கள் தரப்பில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

21 பைகள் அடங்கிய அமோனியா நைட்ரேட்டை காவல்துறையினர் கைப்பற்றினர்

அஸ்கிரிய காவல்துறை பிரிவில்  ஓரிடத்தில் மறைத்து வைக்கப்பட்ட அமோனியம் நைத்திரேட் அடங்கிய 21 பொதிகளை கண்டி காவல்துறையினர் கைப்பற்றினர்.

விசாரணையின் போது, இவை தென்னை மரங்களுக்கு உரமாக பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் ஒரு சிரேஸ்ட இராணுவ அதிகாரி தெரிவிக்கையில், வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களில் அமோனியா நைத்ரேட் ஒன்றாகும்  என்று கூறினார். கண்டி காவல்துறை தலைமையகத்தின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பொதிகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் ஒரு காவல்துறை குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

தமிழ்த் திரைப்படங்களை தமிழினப்படுகொலை நாளில் வெளியிடாமல் தள்ளிவைப்பதே உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! – கருணாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை

மே18 தமிழினப்படுகொலையின் நினைவுநாள். உலகெங்கும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை இந்நாளில்  வெளியிடாமல் தள்ளிவைப்பதே  உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் – தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

மே 18 இன அழிப்பின் நினைநாள்! சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய கோரத்தாண்டவ தமிழ் இனப்படுகொலை நாள்! 10 ஆண்டுகள் கடந்தும் மனக்காயம் ஆறாத நாளாக மே 18 நம் மனத்தில் வலியை நினைவுப்படுத்துகிறது.

கடந்த பத்தாண்டுகளாக மே மாதத்தை தாயகத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகெங்கும் வாழும் புலம்பெயர் உறவுகளும் மே 18 ஆம் நாளை துக்கநாளாக கடைபிடிக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த செய்தி!

இந்த மே மாதம் தமிழர்களுக்கான சோகமாதம்! இம்மாதத்தில் கேளிக்கை விழாக்களோ, தங்களது இல்லத்தில் மகிழ்வான நிகழ்வுகளோ யாவரும் நடாத்துவதில்லை. இந்நிலையை நாம் உணர்ந்து கொண்டு கடைபிடிப்பது இன்னுயிர் ஈந்த தமிழீழ தமிழர்களுக்கு நாம் செய்யும் நினைவேந்தல் ஆகும்.

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் தமிழ்த்திரைப்படங்கள் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை வெளிப்படும். அதாவது மே 17.05.2019 – 18.5.2019 ஆகிய நாட்களில் வெளிவருகிற நிலை உள்ளது. மே 18 ஒட்டிய இவ்வாரங்களில் தமிழ்த்திரைப்படங்கள் வெளியிடக்கூடாது என்று உலகெங்கும் வாழும் தமிழர் உணர்வாளர்கள் பலர் கோரிக்கை வைக்கின்றனர். அது உணர்வுபூர்வமானது மட்டுமன்றி ஞாயமானதும் ஆகும்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் ரிலீசாகி வெற்றிப் பெறுகிற நிலையில் இம்மேமாத வாரங்களில் ரிலீசாகும் தமிழ்த்திரைப்படங்களை தள்ளிவைப்பதே தமிழீழத்திற்காக உயிர்நீத்த இலட்சக்கணக்கான தமிழர் உறவுகளுக்கு நாம் செலுத்து அஞ்சலியாகும்.

நான் சார்ந்திருக்கிற தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு மட்டுமின்றி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இக்கோரிக்கையை வேண்டுகோளாக வைக்கி றேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் -ஒன்டராறியோ சட்டமன்றத்தில் விவாதம்

கடந்த மாதம் 30ம் நாள் ஒன்டராறியோ, கனடா சட்டமன்றத்தில் திரு. விஜய் தணிகாசலம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்’ தொடர்பான சட்டமூலம் Bill 104இன் மீதான இரண்டாம் கட்ட வாசிப்பு நேற்று (16) இடம்பெற்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து ஒன்டராறியோ சட்டமன்றத்தில் திரு. விஜய் தணிகாசலம் உட்பட சிலர் ஆற்றிய உரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலமானது, தற்போது மேல் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கு மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா என்பது பற்றிய பொதுக் கலந்துரையாடல் இடம்பெற்று, மூன்றாவது முறை வாக்களிப்புக்கு விடப்பட்டு வெற்றி பெறுமிடத்து சட்டமாக்கப்படும்  எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபரை விடுவிக்குமாறு ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார் – இராணுவத் தளபதி

அண்மையில் தெஹிவளை பகுதியில் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர் ஒருவர் தொடர்பாக வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தன்னை மூன்றுமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக நேற்று இடப்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சிறிலங்கா இராணுவத் தளபதி தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

முதல் இரண்டு அழைப்பிகளின் போது தான் அதுபற்றிய விபரங்களை அறிந்து தெரிவிப்பதாகப் பதிலளித்ததாகவும்,மூன்றாம் முறை அமைச்சர் தொடர்புகொண்டபோது ஒன்றரை வருடங்களின் பின் தொடர்புகொள்ளுமாறு தான் தெரிவித்ததாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார். இராணுவத்திற்கு பயங்கரவாத சந்தேகநபர் ஒருவரை வருட காலம் தடுத்துவைத்திருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,இராணுவத்தளபதிக்கு அழுத்தம் குடுத்தார் என வெளியான தகவல்கள் பற்றிக் கேட்டபோது,அதனை நிராகரித்த அவர் ‘அதனை நான் அழுத்தம் என்று கூறமுடியாது ,அதனை ஒரு வேண்டுகோள் என்றே கூறல்வேண்டும்’ என்கிறார்.

சிறீலங்காவில் வன்முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதுடன், சட்டத்தின் மூலம் எல்லா வன்முறையாளர்களும் ஒரே முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒரு தெளிவான தலைமைத்துவமும், வன்முறைகளை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் முக்கியமானது. அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள் வன்முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் தான் இனங்களுக்கு இடையில் ஒர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் வன்முறைகளை துண்டுவதை ஊடகங்களும், பொதுமக்களும் தவிர்க்க வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளது.

வவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு

வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப் பட்ட, கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 817 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்

இன்று காலை வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்துக்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காலையில் இருந்து பிற்பகல் 4 மணி வரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுகளுக்கு ஊடகவியலாளர் சுமந்தன் நீர் ஆகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். தொடர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த இடத்திலேயே உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்
அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு நாளையதினம் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் வழங்கப்பட இருக்கின்ற மகஜரை ஊடகங்களுக்கு வெளியிட்டனர் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தமிழ் பெற்றோர்கள் நாங்கள் கீழே கையொப்பமிட்டுள் ளோம். இன்று தமிழர்களின் இலங்கை இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிறைவு தமிழர்களின் நெஞ்சங்கள் வெடித்த நாள் . முள்ளிவாய்க்காலில் நாங்கள் இன்று உண்ணா விரதம் இருக்கிறோம். 145,000 இற்கும் மேற்படட தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் இரக்கம் காட்டாமல் படுகொலை செய்யப்பட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் பற்றிய உண்மையைச் சொல்வதில் ஸ்ரீலங்கா உறுதியாக இல்லை , காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என இலங்கை அறிவித்துள்ளது. இன்னும் 25,000 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களை கொலை செய்யும் அல்லது கொடுமைப்படுத்தும் ஒவ்வொரு சிங்கள குற்றவாளிகளையும், ஸ்ரீலங்கா ஒருபோதும் தண்டித்ததில்லை தண்டிக்கப்போவதுமில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்க இலங்கைக்கு அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு கூட இனி காத்திருக்க முடியாது.

யுத்தம் முடிவடைந்ததில் இருந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 மே மாதம் 145,000 அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்களவர்களை தமிழர்கள் வெறுமனே நம்ப முடியாது. இலங்கை இராணுவம் இன்னமும் தமிழர்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் பண்ணைகளை ஆக்கிரமித்து வருகிறது. மேலும் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் அடிமை முகாம்களை இலங்கையில் நடாத்துகின்றது. ஸ்ரீலங்காவின் கொடூரமான பயங்கரவாத சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தால் இன்னும் பல தமிழர்கள் கடத்தப்பட்டு கொண்டேயுள்ளனர் .

ஆகையால், இப்போது ஒரு நல்ல நேரம் , சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) கொண்டு செல்வதற்கும், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்கவும். இதை நீங்கள் செய்ய வேண்டிய நேரம் இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் யுத்த வெற்றி தினம் கொண்டாடுவோம், நீங்கள் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுசரிக்கலாம் – சிறிலங்கா இராணுவத் தளபதி

தமிழர்களால் நினைவுகொள்ளப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகளை தடுப்பதற்கு படைத்துறை எந்த நடவடியையும் மேற்கொள்ளாது என சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் ராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் , இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடத்துவது சரியானதா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த மகேஷ் சேனாநாயக்க,அவசரகால சட்டமும், நினைவு தின அனுசரிப்பும் இருவேறு விடயங்கள் எனவும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் மட்டு.வில் புதைக்கப்பட்டுள்ளனர் – மோகன்

காத்தான்குடியிலுள்ள பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சடலங்கள் பல மட்டக்களப்பில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான சாட்சியங்கள் தங்களிடம் உள்ளதாகவும், மேற்படி இடங்களை தங்களால் அடையாளப்படுத்த முடியும் எனவும், இவை பற்றி கிழக்கு மாகாண இராணுவத் தளபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.

தமிழ் உணர்வாளர்களின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் குறிப்பிடும் போது, கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 35 பேரின் சடலங்கள் மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றன. இவை மட்டக்களப்பு நகர்ப்புறத்தை அண்டிய பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியமான பிரபலங்கள் அரசியல் காரணங்களுக்காகவும், தொழில் போட்டி காரணமாகவும் காணாமல் போயுள்ளனர். எனவே உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள் இருப்பதாக பலரும் தெரிவித்திருந்தனர். இது பற்றி மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஆனால் இவ்விடயங்கள் அந்த நேரத்தில் கண்டுகொள்ளப்படவில்லை.

இஸ்லாமிய அரசியல்வாதிகளின் நடவடிக்கையையும், இஸ்லாமியப் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளையும் பார்க்கும் போது, இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதி வருகின்றது என்றும், தெரிவித்திருந்தார்.

கிழக்கின் எல்லையாக கருதப்படும் புனானையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கின்றனர், தெற்குப் பகுதியில் புல்லுமலையில் தண்ணீர் தொட்டி அமைக்கின்றனர்.  இந்த விடயங்கள் பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.

முற்றுமுழுதாக அராபியக் கலாசாரத்தை வெளிப்படுத்துகின்ற பல்கலைக்கழகத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். என்றும் அந்த நேர்காணலில் மோகன் தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

அநாமதேய கடிதத்தால் நல்லூர் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பு

நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பபட்ட அனாமதேய கடிதத்தால் ஆலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாள் ஒன்றில் பேனாவால் எழுதப்பட்டு, ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மேற்படி கடிதத்தில், எனது கணவரும், இன்னும் சிலரும் சேர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளனர் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், ஆலயத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.