Home Blog Page 2272

 விடுதலைப்புலிகள் மீதான தடை நாம் தமிழர்கட்சி மற்றும் மே 17  இயக்கங்களுக்கு செக்மேற் – கேணல் ஹரிகரன்

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட பின்னர் இந்தியாவின் ஓய்வுபெற்ற கேணல் ஹரிஹரன் மற்றும் ரி.என்கோபாலன் போன்ற பாதுகாப்பு ஆய்வாளர்கள் இது குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

விடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இந்தத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத்தரப்பில் அறிக்கையிடப்படுகிறது.

எனினும் இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் கேணல் ஹரிஹரனின் பார்வையில் இந்தத்தடை சீமானின் நாம் தமிழர்கட்சி மற்றும் திருமுருகன் காந்தியின் மே 18 ஆகிய இயக்கங்களுக்கு செக்மேற் பாணி இலக்குவைத்தே இந்த தடை நகர்வை இந்திய அரசாங்கம் செய்தாகவும் ஹரிஹரன் கூறுகிறார். nam  விடுதலைப்புலிகள் மீதான தடை நாம் தமிழர்கட்சி மற்றும் மே 17  இயக்கங்களுக்கு செக்மேற் - கேணல் ஹரிகரன்

முள்ளிவாய்கால் பேரழிவின் 10 ஆம் ஆண்டு நிறைவுவரும் நிலையில் அதன் பின்னணியில் குறித்த இரண்டு அமைப்புக்களும் தனி ஈழம் குறித்த சுலோகங்களை மீண்டும் தீவிரப்படுத்தும் என்பதால் இப்போது இந்த தடை அறிவிக்கபட்டுள்ளதாகவும் ஹரிகரன் கூறுகிறார்.

இதனடிப்படையிலேயே தமிழகத்தில் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருவது இந்தியாவின் பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் என்ற காரணத்துடன் தடைநீடிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

tyu  விடுதலைப்புலிகள் மீதான தடை நாம் தமிழர்கட்சி மற்றும் மே 17  இயக்கங்களுக்கு செக்மேற் - கேணல் ஹரிகரன்இதேபோல இன்னொரு ஆய்வாளரான ரி. என் கோபாலன் தெரிவித்துள்ள கருத்தில் இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் இல்லை என்பது இந்தியாவுக்கு மிகத்தெளிவாகத்தெரிந்தாலும் தமிழகத்தை மையப்படுத்தியே இந்தப் புதிய தடையை கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஓஷான் ஹெவிவத்தன உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

குளியாப்பிட்டி பிரிவு காவல்துறை அதிகாரி(SP) ஓஷான் ஹெவிவத்தன உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய காவல் காவல் ஆணையம்(NPC) இந்த இடமாற்றங்களை அங்கீகரித்துள்ளது.

இதற்கமைவாக, குளியாப்பிட்டி பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி(S.P)  ஹெவிவத்தன, களுத்துறை காவல்துறை பிரிவு பிரதிப் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.  நுகேகொட பிரதேச காவல்துறை அதிகாரி S.L. சிஹேரா, குளியாப்பிட்டி காவல்துறை அதிகாரியாக (S.P) ஆக மாற்றப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலிருந்து(PSD) காவல்துறை அதிகாரி(S.P)  W.M.A.R. பெர்னான்டோ, நுகேகொட பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள், வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழர் தாயகத்தை முழுமையாக இராணுவ மயப்படுத்தும் தூரநோக்கோடு இலங்கை அரசு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முப்படைகளையும் குவித்துவருவதோடு தேடுதல்கள் என்ற போர்வையில் பொதுமக்களையும் கடுமையாக அச்சுறுத்திவருகிறது.

இதன் அடிப்படையில் அண்மைக்காலமாக பல்கலைக்கழக மாணவர்களை முடக்கும் நோக்குடன் பயங்கரவாத தடுபப்பு சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

தமிழ் மக்களின் உரிமைக்காக அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துவரும் தன்னெழுச்சிமிக்க போராட்டங்களை முடக்கவேண்டும் என்ற உள்நோக்குடனேயே இலங்கை அரசு திட்டமிட்டு மாணவர்களை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி கைது கைது செய்யப்பட்டடுள்ள தமது சக மாணவர்கள் இருவரையும் சிற்றுண்டிசாலை ஊழியரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15) காலை பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் இதில் மாணவர்களின் விடுதலையையும் உரிமையையும் வலியுறுத்தி மாணவர்கள் இலங்கை அரசிற்கு எதிராக கோசங்களை எழுப்பினார்கள்.

IMG 7837 மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு ஏற்பாட்டில் நினைவேந்தல் பணிகள் ஆரம்பம்

தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப் படையில் குறித்த அறிவிப்பினை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு வெளியிட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளி வாய்க்கால் இன அழிப்பு தினம் வருடா வருடம் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த முறை 10 ஆம் ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

mulli 1 2019 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு ஏற்பாட்டில் நினைவேந்தல் பணிகள் ஆரம்பம்இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும். அஞ்சலி நிகழ்வுக்கான ஏற் பாடுகள் அனைத்தும் இடம்பெற்று வருகிறது.

பாரிய அளவில் முன்னெடுக்க ஏற்பாடாகிய இந்த 10 ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களினால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு அமைதியான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இக்குழு அறிவித்துள்ளது.

மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்காக   நேற்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அப்பகுதி மக்களால் சிரமதானம் மேற்கொள்ளப் பட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.

mulli 2019 2 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு ஏற்பாட்டில் நினைவேந்தல் பணிகள் ஆரம்பம்

ஆட்சி மாற்றத்தை இலக்கு வைத்தே முஸ்லிம்கள் மீது தாக்குதல்

குருநாகல் குளியாப்பிட்டி நகருக்கு,  சிறிலங்கா பிரதமர் அடங்கிய குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், அலிசாகிர் மௌலானா மற்றும் ஜெ.சி.அலவத்துவல ஆகியோர் சென்றிருந்தனர்.

குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்   முஸ்லிம்கள் மீதான தாக்குதலிலன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவே இவை நடத்தப்படுகின்றன என்றும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலுக்கு குறித்த சிலரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஒன்றுகூடலில், இராஜாங்க அமைச்சர்கள், பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள், மதகுருமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீண்டும் கலவரம் ஏற்படலாம் என்பதால், பாதுகாப்பை அதிகரிக்குமாறு பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்

இந்த தாக்குதலில் வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றியதாக தெரிவிக்கப்பட்டது. இதை அங்கு சமுகமளித்திருந்த பௌத்த மதகுருமார் உறுதிப்படுத்தினர்.

இத் தாக்குதல் தொடர்பாக 6பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் இவர்களை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விடுவித்துச் சென்றுள்ளார்.

இவை பற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறுஅங்கிருந்த உரிய அதிகாரிகளுக்கு ரணில் உத்தரவிட்டார்.

பின்னர் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

சந்திரன் சுருங்குவதால், அங்கு நடுக்கம் – நாசா அமைப்பு தகவல்

சந்திரன் சுருங்கி வருவதால், அங்கு பூமியில் ஏற்படுவது போல் நிலநடுக்கம் ஏற்படுவதாக நாசா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நாசாவால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட எல்.ஆர்.ஓ என்ற விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இது அறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்களில், 12ஆயிரம் புகைப்படங்கள் சந்திரனின் வடமுனைக்கு அருகிலுள்ள பகுதியில் எடுக்கப்பட்டதாகவும் இவை ஆய்வு செய்யப்பட்ட போதே இந்தத் தகவல் பெறப்பட்டதாகவும் நாசா அமைப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்திரனில் வெப்பநிலை குறைவடைந்து வருவதாகவும் முன்னர் இருந்ததை விட 150 அடி சுருங்கியுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இதனால் மேல் பகுதியில் சுருக்கங்களும், வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க அறிவியல் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு நாசாவினால் ”ஆர்திமிஸ்” என்ற பெயரில் விண்கலம் ஒன்று அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதல்முறையாக பெண் ஒருவரை அனுப்பும் திட்டம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”ஆர்திமிஸ்” என்பது கிரேக்கர்களின் புராணத்தின்படி சந்திரனின் பெண் கடவுள் என்பது பொருள்.

முள்ளிவாய்க்கால் படுகொலை ஒரு இனப்படுகெலையாகும் – கனடா எதிர்க்கட்சித் தலைவர்

முள்ளிவாய்க்காவில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலையின் 10 ஆவது நினைவுதினம் எதிர்வரும் 18 ஆம் நாள் நினைவுகூரப்படவுள்ளது. இந்த நினைவு தினத்தில் தமிழ் மக்களுடன் இணைந்து கொள்வதற்கு நானும் விரும்புகின்றேன் என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் அன்டெரா ஹொவத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நீதிக்கும், சுதந்திரத்திற்குமாக போராடும் தமிழ் இனத்துடன் என்னை இணைத்துக்கொள்ள விரும்புகின்றேன். மே 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காவில் பல ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அப்போது போரை நிறுத்துவதற்காக தமிழ் மக்களுடன் இணைந்து நானும் கனடாவின் வீதிகளில் இறங்கி போராடியிருந்தேன். சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலையில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். புதிய ஜனநாயக் கட்சி 2016 ஆம் ஆண்டு குயின்ஸ் பார்க்கில் முதலாவது இனப்படுகொலை கூட்டத்தை மேற்கொண்டிருந்தது.

இந்த வருடம் நாம் முள்ளிவாய்க்கால் படுகொலையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தமிழினப் படுகொலை வாரம் தொடர்பான சட்டமூலத்திற்கும் நாளை (16) நாம் ஆதரவுகளை வழங்கவுள்ளோம்.

மனித உரிமைகளுக்காக போராடும் தமிழ் மக்களுடன் நாம் கைகோர்ப்போம் நீங்கள் எமது உதவிகளை எப்போதும் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளை கட்டுப்படுத்த வான்படையின் உதவியை கோரியுள்ளது சிறீலங்கா அரசு

சிறீலங்காவில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இனக்கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு தனது வான்படையை பயன்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு.

வான்படை உலங்குவானூர்திகள் மூலம் இடங்களை கண்காணித்துவரும் சிறீலங்கா வான்படையினர் கலவரம் மேற்கொள்வோரை படம் எடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிறீலங்கா வான்படை பேச்சாளர் குறுப் கப்டன் ஜிஹான் செனிவிரட்னா தெரிவித்துள்ளார்.

வான்படை உலங்குவானூர்திகள் 24 மணிநேரமும் பறப்பதாகவும், நாட்டில் பதற்றத்தை தணிப்பதே அதன் நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கலவரங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யும் நோக்கத்துடன் சிறப்பு காவல்துறை பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வன்முறைகளில் சிறீலங்கா காவல்துறையினர், இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் சிங்கள வன்முறையாளர்களுடன் இணைந்து செயற்பட்டது பல இடங்களில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு சாதனங்களில் பதிவாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சிறீலங்கா வருகின்றது சீனா இராணுவம்

சிறீலங்கா அரசின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் 2.6 பில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த உதவித் திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 100 இராணுவ ஜீப் வண்டிகளையும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ள சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேன நேற்று (14) சீனா அதிபரை சந்தித்த போது சிறீலங்கா எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சனைகளை எடுத்துக் கூறியதுடன் சிறீலங்காவின் பாதுகாப்பை பலப்படுத்த உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேசமயம் இரு நாடுகளும் படைத்துறை ஒத்துழைப்புக்களை பரிமாறிக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை ஒன்றிலும் சீனா அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் மைத்திரிபால சிறீசேன ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.

சமூகவலைத்தளங்களால் வன்முறைகள் ஏற்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்த தம்மிடம் தொழில்நுட்ப வசதிகள் இல்லை எனவும் தெரிவித்த மைத்திரி அதனை கட்டுப்படுத்த உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

சிறீலங்காவில் சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்த சீனாவின் படைத்துறை நிபுணர்களை சிறீலங்காவுக்கு அனுப்புவதற்கு சீனா அதிபர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

எனவே சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்தும் உபகரணங்கள் மற்றும் நிபுணர்களை சிறீலங்கா விரைவில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு படையினர் வழங்கிய தகவல்களைத் தொடர்ந்து கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள றிச்மன்ட் கில் பகுதியில் முஸ்லீம் இனத்தவர்கள் இருவரை கனேடிய காவல்துறையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர்.

அவர்களின் வீட்டில் இருந்து வெடிமருந்துகளும், அதனை வெடிக்க வைக்கும் டிற்டனேற்ரர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யோர்க் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மஹயர் முகமடிசல் (18) மற்றும் அவரின் தந்தையான றிசா முகமடிசல் (47) ஆகியோரை கைது செய்யப்பட்டவர்கள். கைது நடவடிக்கையின் போது அவர்களின் இடத்திற்கு அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்கான வெளியேற்றப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.