ஆட்சி மாற்றத்தை இலக்கு வைத்தே முஸ்லிம்கள் மீது தாக்குதல்

குருநாகல் குளியாப்பிட்டி நகருக்கு,  சிறிலங்கா பிரதமர் அடங்கிய குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், அலிசாகிர் மௌலானா மற்றும் ஜெ.சி.அலவத்துவல ஆகியோர் சென்றிருந்தனர்.

குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்   முஸ்லிம்கள் மீதான தாக்குதலிலன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவே இவை நடத்தப்படுகின்றன என்றும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலுக்கு குறித்த சிலரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஒன்றுகூடலில், இராஜாங்க அமைச்சர்கள், பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள், மதகுருமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீண்டும் கலவரம் ஏற்படலாம் என்பதால், பாதுகாப்பை அதிகரிக்குமாறு பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்

இந்த தாக்குதலில் வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றியதாக தெரிவிக்கப்பட்டது. இதை அங்கு சமுகமளித்திருந்த பௌத்த மதகுருமார் உறுதிப்படுத்தினர்.

இத் தாக்குதல் தொடர்பாக 6பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் இவர்களை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விடுவித்துச் சென்றுள்ளார்.

இவை பற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறுஅங்கிருந்த உரிய அதிகாரிகளுக்கு ரணில் உத்தரவிட்டார்.

பின்னர் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.