சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்த இயக்குநர் மு.களஞ்சியம் கைது

சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்து பேசியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இயக்குநர் சோழன் மு. களஞ்சியம் அவர்களை, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளது.

தமிழர் நலன் பேரியக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சோழன் மு.களஞ்சியம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாம் தமிழர் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கூட்டத்தில் சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்து பேசியிருந்தார்.

இக்கூட்டத்தில் குறித்த ஒரு அரசியல் கட்சியை தாக்கிப் பேசியதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் களஞ்சியம் மீது 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய காவல்துறை முயற்சித்தது.

ஆனால் முன் பிணை கேட்டு மு. களஞ்சியம் அவர்கள் தரப்பில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.