இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபரை விடுவிக்குமாறு ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார் – இராணுவத் தளபதி

அண்மையில் தெஹிவளை பகுதியில் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர் ஒருவர் தொடர்பாக வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தன்னை மூன்றுமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக நேற்று இடப்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சிறிலங்கா இராணுவத் தளபதி தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

முதல் இரண்டு அழைப்பிகளின் போது தான் அதுபற்றிய விபரங்களை அறிந்து தெரிவிப்பதாகப் பதிலளித்ததாகவும்,மூன்றாம் முறை அமைச்சர் தொடர்புகொண்டபோது ஒன்றரை வருடங்களின் பின் தொடர்புகொள்ளுமாறு தான் தெரிவித்ததாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார். இராணுவத்திற்கு பயங்கரவாத சந்தேகநபர் ஒருவரை வருட காலம் தடுத்துவைத்திருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,இராணுவத்தளபதிக்கு அழுத்தம் குடுத்தார் என வெளியான தகவல்கள் பற்றிக் கேட்டபோது,அதனை நிராகரித்த அவர் ‘அதனை நான் அழுத்தம் என்று கூறமுடியாது ,அதனை ஒரு வேண்டுகோள் என்றே கூறல்வேண்டும்’ என்கிறார்.