Home Blog Page 1721

கூட்டமைப்பில் உள்ள சிலரே அதனைப் பலவீனப்படுத்த முயற்சி: செல்வம் கடும் சீற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒரு சிலர் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துகின்ற, நம்பிக்கை அற்ற நிலைப்பாட்டை உருவாக்குகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனவே யாரை தெரிவு செய்யவேண்டும், யாரைத் தெரிவு செய்யக்கூடாது என்கின்ற தீர்மானத்தை எடுப்பது மக்களாகிய உங்கள் கைகளில் உள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நிச்சயமாகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இன்று சுமார் 400 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர்கள் சுயேச்சைக் குழுக்களிலும், அரசோடு மறைமுகமாகச் சொந்தம் கொண்டாடுகின்றவர்களும் கள மிறக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே இந்தச் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் மறைமுகமாக அரசோடு செயற்படுகின்றவர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.”

ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுறுத்தலாம்: பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பாதுகாப்பு வழங்குமாறு, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஞானசார தேரர் வழங்கிய சாட்சியம் காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனத் தெரிவித்து ஆணைக்குழுவின் தலைவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசருமான ஜனக்க டி சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் ஞானசார தேரர் மூன்றாவது முறையாகவும் சாட்சியமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் வாள்வெட்டுக் குழுக்கள் அட்டகாசம்; மோட்டார் சைக்கிள்களில் வந்தோர் மடக்கிப்பிடிப்பு

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டுப் பகுதியில் வாள்வெட்டு மோதலுக்குச் சென்றவர்களை இராணுவம் மடக்கிப் பிடித்துள்ள பரபரப்பான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.

இந்தப் பகுதியால் 7 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை இராணுவம் வழி மறித்துள்ளது. இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்

கைது செய்யப்பட்ட இருவரும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாளுடன்விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மக்கள் விரும்பும் ஒருவரே கூட்டமைப்பின் அடுத்த தலைவர்: சம்பந்தன் சொல்கின்றார்

“மக்கள் விரும்பும் ஒருவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவு செய்வோம்” என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சம்பந்தன், “தமிழ் மக்களால் நன்கு விரும்பப்படும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு வரைத் தான் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவு செய்வோம்” என்று கூறினார்.

தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிக்கிறோம்

கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பில் திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் தனது கண்டனத்தையும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் ஆரம்பப் புள்ளியான இணைந்த வடக்கு கிழக்கும் தமிழர்களின் பூர்வீகத் தொன்மையும் மிக முக்கிய அலகுகளாகும் .இந்த நிலையில், தமிழ் மக்களின் பாரம்பரிய இருப்பை சிதைக்கும் வகையில், பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருது கண்டனத்துக்கு உரியது.இந்த வகையில்  இந்த செயலணியை முற்றாக நிராகரிக்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ் மக்களின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி வேலைத்திட்டங்களை  வன்மையாகக் கண்டிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லியடியைச் சேர்ந்த அரச புலனாய்வாளர் கல்முனையில் மரணம்

அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில்  துப்பாக்கியால் சுட்டு  மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில்    இடம்பெற்றுள்ளது.
இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர்  யாழ்ப்பாணம் நெல்லியடியை  சேர்ந்த   கமல்ராஜ் (21) என்ற   அரச புலனாய்வு உத்தியோகத்தராவார்.குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக  கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

1827,ம் ஆண்டு கணிப்பீட்டில் வடக்கு கிழக்கில் எந்த ஒரு சிங்களவர்களும் இல்லை

‘1827, ம் ஆண்டு இலங்கையில் எடுக்கப்பட்ட முதலாவது சனத்தொகை் கணிப்பீட்டில் வடக்கு கிழக்கில் எந்த ஒரு சிங்களவர்களும்  இல்லை’ என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார் .

அண்மையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் வடக்குகிழக்கு தமிழ்பேசும் மக்களின் சொந்தப்பூமி இல்லை அவர்களுக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என கூறிய கருத்துக்கு பதில் கூறுகையில்;

”காவி உடையை போர்த்தி வாயால் பொய் உரைக்கும் இனவாத புத்தபிக்குகளுக்கு வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் பூர்வீகம் தெரியாமல் இருப்பது வேதனை அல்லது தெரிந்தும் அதை மறைப்பது இனவாதம்.

இலங்கை என்பது ஈழம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்து சிலோன் என அழைக்கப்பட்டதுபின்பும் இலங்கை சிலோன்(Ceylon) என்ற பெயரே இருந்தது 1948, ல் விடுதலை பெற்ற பின்னும் இவ்வாறுதான் கூறப்பட்டது.1972,ம் ஆண்டுதான் சிலோன் என்ற பெயர் ஶ்ரீலங்காக பலவலாக கூறப்பட்டுவருகிறது அதை நான் கூறவில்லை.

வடக்கு கிழக்கு்தாயகம் என்பது பல் நெடுங்காலமாக மன்னர் காலம் முதல் பூர்வீக வரலாற்று தமிழ்மக்களுடைய தாயகம் என்பது பல சரித்திர ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

1960,ம் ஆண்டுவரை வடக்கு கிழக்கில் இருந்து எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களும் மருந்துக்கு கூட தெரிவாகவில்லை இது ஞானசாரபிக்குக்கு தெரியாமல் இருப்பது வேதனைதான்.

1827, ம் ஆண்டு இலங்கையில் எடுக்கப்பட்ட முதலாவது சனத்தொகை் கணிப்பீட்டில் எந்த ஒரு சிங்களவர்களும் வடக்கு கிழக்கில் இல்லை.

அந்த காலத்தில் கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 99.62 வீதமானவர்கள் தமிழ்பேசும் மக்களே. திருகோணமலை் மாவட்டத்தில் 98.44வீதமான தமிழ்பேசும் மக்களே வாழ்ந்தனர் அப்போது அம்பாறை மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டத்துடனேயே இணைந்துருந்தது.1961,ம் ஆண்டுதான் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

1963,புள்ளிவிபரப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 96,வீதம் தமிழ்பேசும் மக்களும்,
அம்பாறையில் 80, வீதமான தமிழ்பேசும் மக்களும், திருகோணமலையில் 79, வீதமான தமிழ்பேசும் மக்களும் வாழ்ந்தனர்.

பாராளுமன்ற ஜனநாய தேர்தலில் கூட வடக்கு கிழக்கில் இருந்து எந்த ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவான சரித்திரம் இல்லை 1960, ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற இலங்கையின் நான்காவது பாராளுமன்ற தேர்தலின்போதுதான் முதன் முதலாக அம்பாறை தேர்தல் தொகுதியில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை்சேர்ந்த விஜயசிங்க விஜயபாகு என்ற சிங்களவர் பாராளுமன்ற உறுப்பினராக்தெரிவாகினார்.

1977,ம் ஆண்டுதான் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில என்ற தொகுதி உருவாக்கப்பட்டு எச்.டீ லீலாரெட்ண என்ற சிங்களவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

1994,ம் ஆண்டுதான் விகிதாசார்தேர்தல் முறையால் அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக ஆறு ஆசனங்களில் 2, முஷ்லிம்களும் 4, சிங்களவர்களும் தெரிவீனார்கள் ஆனால் 1980, ல் அம்பாறையில் மீண்டும் தமிழர் பிரதிநித்துவம் உறுதி செய்யப்படலடது.

இதுதான் வரலாறு வடக்குகிழக்கில் சிங்களவர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டார்கள் அதனால்தான் சிங்கள பிரதிநித்துவம் வடக்கு கிழக்கில் தற்போது உள்ளது.

வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு அடி்நிலம் இல்லை பல கொடி அடி்நிலம் இருந்தது இலங்கையை்மாறி்மாறி்ஆட்ணெய்த உனவாத்சிங்கள ஆட்சியாளர்களின் சூழ்சியால்தான் திட்டமிட்ட நில அபகரிப்பும் குடியேற்றங்களும் வடக்கு கிழக்கு்மாகாணத்தில் இடம்பெற்றன இதை ஞானதாரதேரர் புரியாமல் இருப்பது கவலை அளிக்குறது.

வடக்கு கிழக்கு தாயகம் தமிழ்பேசும் தாயகம் என்ற கொள்கையில் தான் தந்தை்செல்வா 1949,ம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்து ஒரு சமஷ்டி்அடிப்படையிலான்அரசியல் தீர்வுக்காக போராடினார் என்பதை காவி உடை தரித்த ஞானதார்தேரர் புரிந்து கொள்ளவேண்டும்” எனவும் மேலும் கூறினார்.

 ”மீண்டும் வெற்றி பெற உதவ வேண்டும்” சீன அதிபரிடம் கெஞ்சிய ட்ரம்ப்

உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்களின் மனித உரிமைகளை மறுக்க கூடாது. அவர்களை தடுப்புக் காவலில் வைப்பது, ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வழிவகை செய்யும் ‘உய்குர் மனித உரிமைகள் சட்டத்தில்’ கடந்த புதன்கிழமை அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார், ஆனால் அவர்களைக் கண்காணிக்க தடுப்பு முகாம்களை அமைக்க சீன அதிபருக்கு ஆதரவு அளித்தவரே ட்ரம்ப்தான் என்று முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

மேலும் 2020 அதிபர் தேர்தலில் தான் மீண்டும் வெற்றி பெற உதவ வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங்கிடம் ட்ரம்ப் கெஞ்சியதாக பெரிய குண்டைத்தூக்கிப் போட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ‘The room where it happened a white house memoir ’ என்ற தலைப்பின் கீழ் எழுதிய புத்தகத்தில் அதிபர் ட்ரம்ப்பின் தகிடுத்தத்தங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “சீனாவி உய்குர் முஸ்லிம்களை தடுப்புக் காவலில் அடைத்து வைக்க சீன அரசு முகாம்களைக் கட்டியது, இது குறித்து ட்ரம்பிடம் ஜின்பிங் தெரிவித்த போது தடுப்புக் காவல் முகாம்கள் சரியானதே என்று கூறிய ட்ரம்ப் முகாம்களை கட்ட சீனாவுக்கு ஆதரவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டுக்கு இடையே அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது 2020 அதிபர் தேர்தலின் போது தான் மீண்டும் வெற்றி பெற உதவ வேண்டும் என்று ஜின்பிங்கிடம் கெஞ்சிக் கூத்தாடினார்..

ட்ரம்ப் கூறிய சரியான வார்த்தைகளை என்னால் குறிப்பிட முடியவில்லை, காரணம் அதைக் கூற தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட லாபங்களுக்காக வெளியுறவு கொள்கைகளை வளைப்பவர் ட்ரம்ப்” என்று பகீர் குற்றச்சாட்டுகளை அவர் வைத்தார்.

இந்தப் புத்தகத்தை தடை செய்யக்கோரி அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களை அடிமைகளாக நடத்தி ஆட்சி புரிந்தவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன

அமெரிக்காவின் மினப்பொலிஸ் பிரதேச காவல்துறையினரின் கைகளில் சிக்கி ஜோர்ச் பிளாய்ட் மரணித்ததைத் தொடர்ந்து உலகில் பரவிவரும் நிறவெறி எதிர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக உலக நாடுகளில் உள்ள நகரங்களில் வைக்கப்பட்டுள்ள நிறவெறி கொள்கையை பின்னபற்றிய மற்றும் மக்களை அடிமைகளாக நடத்தியவர்களின் சிலைகளை அகற்றும் பணிகளை போராட்டக்காரர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள கூட்டமைப்பு நினைவுச்சின்னங்களை அகற்றியவர்கள் தற்போது ஐரோப்பாவை நோக்கி நகர்ந்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில் ஐரேப்பியா நாடுகளில் இடம்பெறும் சம்பவங்களை இங்கு தருகின்றோம்.

பிரித்தானியா:

எட்வேட் கோல்ஸ்ரன் – 17 ஆம் நூற்றாண்டில் அடிமைகளை பணிக்கு பிரித்தானியாவின் பிறிஸ்ரல் துறைமுகத்திற்கு கொண்டுவந்தவர். 80,000 மேற்பட்ட ஆபிரிக்க மக்களை அடிமைகளாக அழைத்துவந்திருந்தார்.

வாரம் இவரின் சிலை கடலில் தூக்கி வீசப்பட்டபோதும், தற்போது பிரித்தானியா அரசு அதனை மீட்டு தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளது.Edward colston மக்களை அடிமைகளாக நடத்தி ஆட்சி புரிந்தவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன

சிலில் றொடெஸ்- தென்ஆபிரிக்காவின் கேப் பிரேதேசத்தில் காலணித்துவ பிரதமராக பதவி வகித்தவர். வைரம் மற்றும் தங்க சுரங்கங்களில் ஆபிரிக்க மக்களை அடிமைகளாக பணிக்கு வைத்திருந்தவர். இவரின் சிலை 2015 ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் கேப் நகரில் இருந்து அகற்றப்பட்டிருந்தது.

எனினும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற அவருக்கு அங்கு வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றவேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது எழுந்துள்ளது.cecil rhodes statue oxford university 2510030 மக்களை அடிமைகளாக நடத்தி ஆட்சி புரிந்தவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன

ஹென்றி டுன்டாஸ் – 18 ஆவது நுற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்கொட்லாந்து அரசியல்வாதியாக இருந்த இவர் அடிமைச் சட்டத்தின் நீக்கத்தை எதிர்த்தவர். இதனால் ஏற்பட்ட கால இடைவெளியில் 500,000 ஆபிரிக்க மக்கள் அடிமைகளாக அத்திலாந்திக் சமுத்திரத்தை கடந்து கொண்டுவரப்பட்டனர். ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பரோவில் உள்ள இவரின் சிலை அகற்றப்படவேண்டும் எனவும், அவரின் நினைவாக கனடாவின் ரொரன்டோ நகரில் உள்ள வீதிக்கு சூட்டப்பட்ட பெயர் மாற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

றொபேட் மிலிகன் – 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வர்த்தகர் இவர். ஜமேக்காவில் இரண்டு சக்கரை ஆலைகளை நடத்தியதுடன், 500 அடிமைகளை அங்கு பணியில் அமர்த்தியிருந்தார். அவரின் சிலை இந்த வாரம் லண்டனில் அகற்றப்பட்டுள்ளது.

றொபேட் பேடன் பாவல் – சாரணர் இயக்கத்தை ஆரம்பித்த இவர் ஒரு இனவாதி என்பதுடன் ஜேர்மன் சர்வதிகாரி கிட்லருக்கு ஆதரவான கருத்தை கொண்டவர். இவரின் சிலையை அகற்றுவது தொடர்பில் அதிகாரிகள் சிந்தித்து வருவதுடன், பிரித்தானியாவின் பல நகரங்களில் உள்ள சிலைகளை மீளாய்வு செய்யவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரான்ஸ்

ஜீன் பபிரிஸ்ற் கொல்பேட் – பிரான்ஸ் அரசர் 14 ஆவது லூயிஸ் காலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் அமைச்சராக இருந்த இவர் கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக அடிமைச்சட்டத்தை வரைவதில் முன்னின்றவர். பிரான்ஸ் நகரசபை முன் உள்ள இவரின் சிலையை அகற்றுவதற்கு கடந்த வாரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி எடுத்திருந்தனர்.Jean Baptiste Colbert French மக்களை அடிமைகளாக நடத்தி ஆட்சி புரிந்தவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன

ஜேசெப் கலினி – 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரான்ஸ் நாடு ஆக்கிரமித்திருந்த மடகஸ்கார் பகுதியில் போராட்டங்களை மேற்கொண்டவர்களை மிருகத்தனமாக அடக்கிய படைத் தளபதி இவர். இவரின் சிலையை தற்போது பிரான்ஸ் காவல்துiயினர் பாதுகாத்து வருகின்றனர்.

விக்ரர் சொல்செர் – பிளொய்டின் மரணத்திற்கு முன்னரே இவரின் சிலை அகற்றப்பட்டுள்ளது. கரீபியன் தீவுகளில் இருந்த பிரான்ஸ் நாட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள அடிமைச்சட்டத்தை நீக்குவதற்கு உதவியவர் என்றபோதும் அவரின் செயற்பாடுகளில் அடிமைத்தனத்தை ஆதரித்ததற்கான சான்றுகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஸ்பெயின்

கிறிஸ்தோபர் கொலம்பஸ் – 15 ஆம் நூற்றாண்டு வாழந்த இவர் அமெரிக்காவை கண்டறிந்து குடியேற்றங்களுக்கு வழி அமைத்தவர். அவரின் சிலை அமெரிக்காவிலும், ஸ்பெயினிலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதல் முயற்சிக்கு உட்படடிருந்தது. கொலம்பஸ் நினைவு நளையும் அமெரிக்க பூர்வகுடி மக்கள் எதிர்த்து வருகின்றனர்.colambus மக்களை அடிமைகளாக நடத்தி ஆட்சி புரிந்தவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன

ஜெனரல் பிரான்சிஸ்கோ பிரான்கோ – ஸ்பெயினை 35 ஆண்டுகள் ஆட்சி செய்த சர்வாதிகாரி. இவரின் உடல் கடந்த வருடம் அரும்பொருட் காட்சிப்படுத்தலில் இருந்து அகற்றப்பட்டு சிறிய தேவாலய வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

இத்தாலி

இன்ரோ மொன்ரநெலி – வட ஆபிரிக்காவில் இத்தாலியின் ஆக்கிரமிப்பின் சின்னம். 12 வயது எதியோப்பிய சிறுமியையும் அடிமையாக வைத்திருந்தார். இவரின் சிலை அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

பெல்ஜியம்

அரசர் லிபோல்ட் இரண்டு – 1865 தொடக்கம் 1909 வரை பெல்ஜியத்தை ஆட்சி புரிந்தவர். கொங்கோ நாட்டை தனது சுய தேவைக்காக பயன்படுத்தியவர்.King Leopold II of Belgium மக்களை அடிமைகளாக நடத்தி ஆட்சி புரிந்தவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன

மிருகத்தனமான துன்புறுத்தல்களை மேற்கொண்டு 10 மில்லியன் மக்களை அங்கு படுகொலை செய்தவர். இவரின் சிலைகள் பல சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பல வர்ண மைகள் பூசப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்து

ஜான் பிரெர்ஸ்சூன் கொயின் – 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் கிழக்கிந்திய நிறுவனங்கள் மூலம் கிழக்கு இந்தியா, இந்தோனேசியா போன்ற பகுதிகளை ஆக்கிரமித்தவர். இந்தோனேசியாவின் பண்டா தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான படுகொலைகளுக்கு உத்தரவிட்டவர். தற்போது இவரின் சிலையை அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவிஅசோசியட் பிரஸ்

தமிழில்பிரபா

இலங்கையில் சித்திரவதை முகாம்கள்;கூட்டறிக்கை -ITJP மற்றும் JDS

சிறிலங்காவின் சித்திரவரைகள் தொடர்பில் வரைபடத்துடன் கூடிய ஆவணமொன்றை உ ண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) மற்றும் இலங்கையிலுள்ள பத்திரிகை யாளர்களுக்கான ஜனநாயகம் (JDS) என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன.அதில் சித்திரவதை செய்வதற்காக தீவு முழுவதிலும் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் 219  இடங்களைக் குறித்துக் காட்டுகின்றது. சித்திரவதைகள் தொடர்பில் முன்னாள் படையதிகாரி கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட பலர் இங்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

குறித்த அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கு தருகிறோம் ;

18 யூன் 2020
கூட்டு ஊடக அறிக்கை: இலங்கையின் சித்திரவதை வரைபடம்.

ஜெகானஸ்பேர்க்: 26 யூன் இல் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுவழங்குவதற்கான சர்வதேச நாளைக் குறிக்கும் முகமாக இரண்டு அமைப்புக்கள்இலங்கையினுடைய முதலாவது சித்திரவதை வரைபடத்தை தயாரித்திருக்கின்றார்கள்.

அந்த வரைபடமானது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இராணுவம்,பொலிஸ் மற்றும்துணை ஆயுதப்படைகளினால் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களை சித்திரவதை செய்வதற்காக தீவு முழுவதிலும் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் 219  இடங்களைக் குறித்துக் காட்டுகின்றது.

தீவு முழுவதிலும் இடம்பெற்றிருக்கும் சித்திரவதைகளின் முழு அளவினை தமது வரைபடம் படம் போட்டுக்காட்டவில்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) மற்றும் இலங்கையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கான ஜனநாயகம் (JDS) என்ற அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முதலாவது மற்றும் இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சியின் போது( ஜனதா விமுக்தி பெரமுன அல்லது மக்கள் விடுதலை முன்னணி) சித்திரவதை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் சாதாரணமாகவே அதிகமாக
இருந்ததையால் அவை இங்கு உள்ளடக்கப்படவில்லை. 2006 – 19 வரைப் பெயரிடப்பட்ட இந்த இடங்கள் ITJP  இனுடைய சாட்சியங்கள் சேகரிப்பு செயற்திட்டத்தில் இருந்து பெறப்பட்டவையாக இருக்கின்ற அதேவேளையில் நிச்சயமாக அவை முழுமையானவையும் இல்லை.

ஆச்சரியமளிக்கும் வகையில் எண்பதுகளின் பிற்பகுதியில் சித்திரவதை க்காகப்பயன்படுத்தப்பட்ட கட்டடங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பீடம் மற்றும் அரசால் நடத்தப்படும் லேக்கவுஸ் பத்திரிகையின் அடித்தளக் கட்டிடம் ஆகியனவும் உள்ளடங்குகின்றன.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் பெரும் எண்ணிக்கையிலான பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் என்பன
மட்டுமல்லாது தொழிற்சாலைகள்,பண்ணைகள், சினிமாக்கள், அரங்குகள் மற்றும் கோல்ஃப் விளையாடும் இடங்கள் என்பனவும் சித்திரவதை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

“1987 – 1989 காலப் பகுதியில் சிங்கள இளைஞர்களை மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்வதற்கும் கொலைகள் செய்வதற்கும் ஆயுதப்படையினரால்
பயன்படுத்தப்பட்ட இந்த இடங்களில் பல ஞாபகத்தில் இருந்து அழிந்து விட்டன” என
இனைச் சேர்ந்த பாசனா அபயவர்த்தன தெரிவித்தார்.

“ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த தார்மீக மனசாட்சி என்பது வெறுமனவே மக்கள் வழிமூலம் மட்டுமின்றி அந்த மக்கள் எவ்வாறு இறக்கின்றார்கள் மற்றும் எவ்வாறு அவர்கள் நினைவு கூரப்படுகின்றார்கள் என்பதிலுமே தோற்றம் பெறுகின்றது. உயிர் வாழ்பவர்கள் இறந்தவர்களை நினைவுகூராது விடும் போது சமூகமானது ஆபத்தான மறுப்புக்கு உட்படுவதுடன் அது மீள நிகழ்வதற்கானஆபத்தும் உள்ளது”.

1989 இல் கேணல் கோத்தபாய ராஜபக்ச மாத்தளை மாவட்டத்திற்குப் பொறுப்பான
இராணுவ இணைப்பதிகாரியாக இருந்தார். இவருடன் அவரது கஜபாகு படைப்பிரிவின் லெப்டினன்டுகளான சவேந்திர சில்வா ( இப்பொழுது இராணுத் தளபதி) , ஜகத் டயஸ்  (முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பிரதானி) மற்றும் சுமத பெரேரா ( இராணுவ அதிகாரிகளின் முன்னாள் பிரதி பிரதானி மற்றும் அண்மையின் ஒரு அமைச்சரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்) ஆகியோரும் இவருடன் இருந்தார்கள்.

ஜேவியின் காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான காணாமற்போன சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்த அரசாங்க விசாரணைக் குழுவொன்று மாத்தளை மாவட்டத்தில் குற்றஞ்சாட்டப் பட்டகுற்றவாளிகளின் பெயரைக் கொண்ட ஒரு பட்டியலை தொகுத்து தயார் செய்தது இந்தப் பெயர்களில் “மாத்தளை இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்த ராஜபக்ச. ஜி” இனுடைய பெயரும் இருந்தது. இந்தப் பட்டியல் ஒரு போதுமே வெளியிடப்படவில்லை.

இதே இராணுவ அதிகாரிகள் பின்னர் 2009 இல் இடம்பெற்ற பாரிய சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டமீறல்களுக்கு உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்படுகின்றது – சவேந்திர சில்வா ஜகத் டயஸ் போன்றவர்கள் வெளிப்படையாகவே அப்போதிருந்த இராணுவக்கட்டளை அமைப்பையும் தாண்டிச் சென்று கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கட்டளை மற்றும் அதிகாரத்தின் கீழ் 2009 இல் போரை நடத்துவதில் முக்கிய புள்ளிகளாக இருந்தார்கள். அவர்கள் 1989 இல் மாத்தளைக்கு அடுத்தாக உள்ள புத்தளத்தில் ஜேவிபி இனை நசுக்குவதில் ஈடுபட்டிருந்த கமால் குணரட்ணவுடன் இணைந்து பணியாற்றினார்கள்.

“ஜேவிபி இனது இரண்டாவது கிளர்ச்சியை நசுக்குவதில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் தண்டணையிலிருந்து முழுமையான பாதுகாப்புடன் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்ங்களிலும் தொடர்ந்தும் ஈடுபட்டார்கள் ” என (ITJP) இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். “

1989 இதிலிருந்து 2009 வரை இடம் பெற்ற மீறல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள் தொடர்பில் நீங்கள் ஒரு நேர்கோட்டை வரையலாம் ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் அரச அனுசரணையுடன் இடம்பெறுகின்றன என்பதுடன் அது அரச கொள்கையின் ஒரு முக்கிய கருவியாகவும் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் கொள்கையினை பாதுகாப்பு படைகளின் எல்லா மட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முழு அதிகாரமும் கட்டமைப்புக்களும் உள்வாங்கப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன”  எனசூக்கா தெரிவித்தார்.

மேலும் மீறல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு கடந்த காலத்தில் இடம் பெற்றவைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு எல்லா பாதிக்கப்பட்டவர்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படும் ஒரு கலாச்சாரம் இல்லாது ஒழிக்கப்படவேண்டும் ”.

வரைபட விளக்கங்களுடன் கூடிய அறிக்கை (தமிழில்)

http://www.ilakku.org/wp-content/uploads/2020/06/Press-Release-torture-map-final-in-Tamil-18.06.2020.pdf