Home Blog Page 1720

நாடாளுமன்ற தேர்தல்;வேட்பாளர்களாக கொலையாளிகள்,ஊழல்வாதிகள்

நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னைய உறுப்பினர்கள்

சிறீலங்காவில் எதிர்வரும் மாதம் 5 ஆம் நாள் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தில் போட்டியிடும் கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பளர்களில் பெருமளவான வேட்பாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே உள்ளனர்.

தற்போது உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 200 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். அவர்களில் படுகொலையாளிகள், நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள், ஊழல்களில் ஈடுபட்டவர்கள், சட்டவிதிகளை மதிக்காதவர்கள் என பலரும் உள்ளனர்.

தென்னிலங்கையில் புதிதாக யாரையும் களமிறக்குவதை முக்கிய கட்சிகள் தவிர்த்திருப்பது ஒருபுறம் இருக்க வடக்கு கிழக்கிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறையிருந்த மாவைக்கும் காசிக்கும் பிணை வழங்கியதால் மட்டக்களப்பில் இருந்து மாற்றப்பட்டேன்-விக்கி

ஒன்றரை வருடங்களாக சிறையிருந்த இருவருக்கு பிணை வழங்கியதன் காரணமாக என்னை மட்டக்களப்பிலிருந்து சாவகச்சேரிக்கு உடனடியாக மாற்றிவிட்டார்கள். இவற்றுக்கு காரணம் அரசியலாகும். சிறையிலிருந்த அந்த இருவரில் ஒருவர் மாவை சேனாதிராஜா,மற்றையவர் காசி ஆனந்தன் ஆவார் பிணை வழங்கியதன் காரணமாக என்னை மட்டக்களப்பிலிருந்து சாவகச்சேரிக்கு உடனடியாக மாற்றிவிட்டார்கள். இவற்றுக்கு காரணம் அரசியலாகும். சிறையிலிருந்த அந்த இருவரில் ஒருவர் மாவை சேனாதிராஜா,மற்றையவர் காசி ஆனந்தன் ஆவார். என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டமும் தேர்தல் பரப்புரை அலுவலக திற்பு விழாவும் நேற்று மாலை கிரான்குளத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைமை வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன்,

நான் மட்டக்களப்பிற்கு புதியவனல்ல.1978ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக இருந்தவன் ஆவேன்.அந்த காலகட்டத்தில் இரண்டு தமிழ்ப் போராளிகள் நெடுங்காலமாக அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதியப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த சமயம் நான் அங்கு வந்தபோது அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என்று அரசியல் ரீதியாக பலரும் வந்து எனக்குக் கூறினார்கள். நான் முதன்முதலாக மட்டக்களப்பிற்கு தான் நீதிபதியாக வந்துள்ளேன்,சட்டத்தின்படி நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என அவர்களிடம் கூறினேன்.

இரண்டு போராளிகளும் எந்த விதமான வழக்குகளும் அவர்களுக்கு எதிராக பதியப்படாமல் சுமார் ஒன்றரை வருடங்களாக சிறையில் இருந்தார்கள்.நான் அரச சட்டத்தரணிக்கு மூன்று வாரங்கள் அவகாசம் கொடுத்து உடன் அவர்களுக்கு எதிரான வழக்கை பதிவு செய்யுங்கள் அல்லது அவர்களுக்கு பிணை வழங்குங்கள் என்று கூறினேன்.

மூன்று வாரங்கள் கழிந்த பின்னர் அவர்களுக்கு எதிராக வழங்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நான் அவர்களுக்கு பிணையளித்தேன். அவர்களுக்கு பிணை வழங்கியதன் காரணமாக என்னை மட்டக்களப்பிலிருந்து சாவகச்சேரிக்கு உடனடியாக மாற்றிவிட்டார்கள். இவற்றுக்கு காரணம் அரசியலாகும். சிறையிலிருந்த அந்த இருவரில் ஒருவர் மாவை சேனாதிராஜா,மற்றையவர் காசி ஆனந்தன் ஆவார் என விக்னேஸ்வரன் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்

 

அமெரிக்க, இந்தியத் தூதரகங்களே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கின்றன ; அநுரகுமார திஸாநாயக்க

இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் விருப்பத்துக்கு ஏற்பவே நாட்டின் தலைவர்களும் அரசுகளும் உருவாக்கப்படுகின்றன என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் தேர்தலில் வாக்களித்தாலும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமும் அமெரிக்கத் தூதரகமும் எடுக்கும் முடிவுகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலின்போது எம்.சி.சி. உடன்படிக்கையை இடைநிறுத்துவதற்காக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவைத் தெரிவு செய்த பின்னர் மக்கள் அவர் எம்.சி.சி. உடன்படிக்கையை இரத்துச் செய்வார் என எதிர்பார்த்த போதிலும் இன்னமும் எம்.சி.சி. விவகாரம் குறித்த பேச்சுகள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உடன்படிக்கை குறித்து ஜனாதிபதியும் அமெரிக்கத் தூதரகமும் ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கத் தூதரகம் தற்போது உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்கு அரசுக்கு ஓகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மக்கள் அரசுகளை உருவாக்குகின்றார்கள் என்றால் மக்களின் தேவைகளை அந்த அரசுகள் நிறைவேற்ற வேண்டும். எனினும் நாடு வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதரகங்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சி செய்யப்படுகின்றது”என்றார்.

எமது வேட்பாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவம் அச்சுறுத்தல்; சமத்துவ சோசலிசக் கட்சி முறைப்பாடு

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டு சிலர் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் தமது கட்சியின் மூன்று வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டு அச்சுறுத்தியுள்ளனர் என, சமத்துவ சோசலிசக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சமத்துவ சோசலிச கட்சியின் பொதுத்செயலாளர் விஜே டயஸ் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும், அவருக்குக் கடிதம் அனுப்பி இரண்டு வாரங்களாகியும், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும், சமத்துவ சோசலிச கட்சியின் பொதுச்செயலாளர் விஜே டயஸ் கூறினார்.

ஆரம்பிக்கப்பட்டது மட்டக்களப்பில் பௌத்த மயமாக்கல்!

சிறிலங்கா அரசுத்தலைவரின் கிழக்கு தொல்பொருட்கள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசபடைகளின்
துணையுடன் பௌத்த பிக்குகளால அத்துமீறல்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று தடயங்களைக்கொண்ட குசனார்மலைக்கு பௌத்த துறவிகள் சிலர் வருகைதந்த காரணத்தினால் அங்கு முறுகல் நிலையேற்பட்டது.

இராணுவ மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்துடன் வருகைதந்த பிக்குகள் அங்கு மலையினை பார்வையிட்டதுடன் அப்பகுதி தமக்கு சொந்தமான பகுதியென்றும் தெரிவித்துச்சென்றிருக்கின்றனர்.

இதேபோன்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதிக்கும் பௌத்த பிக்கு ஒருவரும் பெருமளவான படையினரும் சென்று அங்குள்ள காணியொன்றை பார்வையிட்டுள்ளதுடன் அது தமக்கானது என அங்குள்ள மக்களிடம் தெரிவித்துள்ளர்.

வேற்றுச்சேனையில் ஒதுக்குப்புறமாகவுள்ள பகுதியொன்றினையே குறித்த பௌத்த பிக்கு இராணுவத்தினர்,பொலிஸார் சகிதம் வந்து பார்வையிட்டுச்சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.IMG 20200704 WA0079 ஆரம்பிக்கப்பட்டது மட்டக்களப்பில் பௌத்த மயமாக்கல்!

குறித்த பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க முற்பட்டபோது அங்குவந்த வெல்லாவெளி பொலிஸார் அவற்றினை தடுத்துநிறுத்தியதாகவும் குறித்த பகுதி அரச பகுதி என்பதனால் அவற்றில் எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்கவேண்டாம் என கூறிச்சென்றதாகவும் பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறு பொலிஸார் தலையிட்டதன் பின்னர் இன்று பொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் பௌத்த பிக்கு ஒருவர் அப்பகுதிக்குவந்து சென்றது தொடர்பில் வெல்லாவெளி பிரதேச மக்கள் அதிப்தி தெரிவித்துள்ளனர்.

வேற்றுச்சேனைக்கு அண்மையில் மண்டூர் கந்தசுவாமி ஆலயமும் காணப்படும் நிலையில் பௌத்த தேரர்களின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இவ்வாறான தேரர்களின் செயற்பாடுகளுக்கு சில தமிழ் அதிகாரிகளும் துணை நிற்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அண்மையில் கிழக்கு தொல்பொருட்கள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறன அத்துமீறல்கள் இடம்பெற்றுவருகின்றன.

தேர்தல் திருவிழாவில் மூழ்கிக் கிடைக்கும் தமிழ் அரசியல் வாதிகள்
இது பற்றி கண்டுகொள்ள போவதில்லை.உணர்வுள்ள தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு இதனை எதிக்காவிடின்,இந்த ஆக்கிரமிப்பை அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்கு கொண்டுவரவிடின் இங்கு தமிழரின் வரலாற்று இருப்பு என்பது இல்லாததொன்றாகிவிடும்.

சம்பத் வங்கி நிறுவப்பட்டிருப்பது சிங்கள பௌத்தர்களுக்காக மட்டுமே

சம்பத் வங்கியுடன் நெருங்கிய வியாபாரத் தொடர்புகளை பேணி வரும் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான Nimal Perera தனது twitter கணக்கில் பின்வருமாறு பகிரங்கமாக பதிந்துளார்.

“சம்பத் வங்கி நிறுவப்பட்டிருப்பது சிங்கள பௌத்தர்களுக்கு சேவை வழங்குவதற்கு மட்டுமே அது தான் உண்மை இப்படி சொல்வதால் என்னை ஒரு இனவாதியாக பார்க்க வேண்டாம் என பதிந்துளார்”106299520 1205469876463308 8277548598936190936 n சம்பத் வங்கி நிறுவப்பட்டிருப்பது சிங்கள பௌத்தர்களுக்காக மட்டுமே

பிரபல தொழிலதிபர் Nimal Perera வின் பதிவுக்கு பதிலடியாக முன்னாள் நிதி அமைச்சர்மங்கள சமரவீர கீழ்வரும் பதிவினை தனது twitterகணக்கில் பதிந்துளார்.

சம்பத் வங்கி நிறுவப்பட்டிருப்பது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சேவை வழங்க அல்ல என்பது தொடர்பில் என்னை அறிவூட்டியதற்கு Nimal Perera வுக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதுடன் சம்பத் வங்கியில் இருக்கும் எனது வங்கி கணக்கை ஜாதி மதம் குலம் பாராது நாட்டின் அனைத்து மக்கள் பிரிவுக்கு பொதுவான சேவை வழங்கும் வங்கியொன்றுக்கு மாற்றும் படி எனது காரியாலத்திற்கு நான் அறிவித் துள்ளேன் அதனால் சம்பத் வங்கிக்கு பாரிய நஷ்டம் ஏதும் ஏற்படப் போவதில்லை.

என்றாலும் மனித விழுமியங்களை பேணி வாழ்பவன் என்ற வகையில் எனக்கு இது மிக முக்கியமானதும் மேலானதுமாகும். இனவாதத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தைரியமாக முன்வைத்து செயல்படுத்தியும் காட்டியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் .

ஆயுதங்கள் கொண்டு சென்றதாக கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் விடுதலை

மட்டக்களப்பில் ஆயுதங்கள் கொண்டுசென்றதாக 2003ஆம் ஆண்டு சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த அவர்,

14-03-2003 திகதி கல்லடி பாலத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பிக்கப் வாகனம் ஒன்றை படையினர் சோதனையிட்டபோது அதில் இருந்து நாக்கு கைக்குண்டுகளும் 100 தோட்டர்களும் மீட்கப்பட்டிருந்தன.

அன்றைய காலப்பகுதி சமாதான உடன்படிக்கை காலப்பகுதி என்ற காரணத்தினால் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த இந்த வாகனம் சோனையிட முற்பட்டவேளையில் அதங்கு விடுதலைப்புலி உறுப்பினர்கள் சோதனை செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில் சர்வதேச கண்காணிப்புக்குழு முன்னிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் குறித்த வாகனம் சோதனை செய்யப்பட்டது.

இது தொடர்பில் அதில் பயணித்த எட்டு விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஆயுதங்களுடன் பயணித்த குற்றசாட்டுக்காக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் செய்யப்பட்ட பிணை மனுவின் அடிப்படையில் 2004ஆம் ஆண்டு குறித்த எட்டுப்பேரும் பிணையில் விடுக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான விழக்கு மட்டக்களப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்பட்டுவந்தது.இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர்,அரசபகுப்பாய்வு திணைக்களம் ஆகியவற்றின் அரச தரப்பு சாட்சியங்கள் பெறப்பட்டு எதிர்த்தரப்பு சாட்சியங்களும் பெறப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கின் எதிரிகளின் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எதிரிகளின் பிரத்தியேக உடமைகளில் குறித்த ஆயுதங்கள் இருக்காத நிலையிலும் ஆள் அடையாளம் தொடர்பில் அரசதரப்பில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்த தவறியதால் மேமுறையிட்டு நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லாவினால் கடந்த 22-06-2020 சகல எதிரிகளும் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.

பொது நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தம்;பிள்ளையானே காரணம்-மாநகர முதல்வர்

மட்டக்களப்பு பொது நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனே( பிள்ளையான்) காரணம் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்று மாலை புளியந்தீவு பகுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.

மட்டக்களப்பு பொது நூலகத்தின் நிர்மாணப் பணிகளை அரசியல் நோக்கத்திற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடை நிறுத்தி வைத்துள்ளதாக சிலர் பொய்யான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள். உண்மையில் இந் நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முறையற்ற செயற்பாடே காரணமாகும்.

பாரிய ஒரு வேலைத்திட்டதினை செய்வதாக இருந்தால் முதலில் தேசிய திட்டமிடல் அதிகார சபையின் அங்கீகாரத்தினை பெற வேண்டும். அதன் பின் அமைச்சரவையினதும், பாராளுமன்றத்தினதும் அனுமதிகளைப் பெற வேண்டும். இவ்வாறு பெற்ற பின்னர் தான் திரைசேரியானது அத் திட்டத்துக்குரிய நிதியினை கட்டங் கட்டமாக வழங்கும் .

ஆனால் இதை எதையும் அறியாத முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதிகள் எதையும் பெற்றுக் கொள்ளாமல், கிழக்கு மாகாண சபையில் இருந்து 180 மில்லியன் ரூபாய் பணத்தினை பெற்று இந்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்திருக்கின்றார்.

2012 ஆம் ஆண்டில் மாகாண சபையின் ஆட்சி மாறியதும்,அதில் தாம் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் நஜிப் ஏ.மஜீத்தை முதலமைச்சராக்கி விட்டு, அதே மாகாண சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினராகவும்,ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பதவி வகித்தும் அவரால் நூலகத்தின் மிகுதி வேலைக்குரிய நிதியினை ஒதுக்க முடியவில்லை. இதற்கு காரணம் தேசிய திட்டமிடல் அதிகார சபையின் அங்கீகாரம் பெறப்படாமையே ஆகும். இவற்றைப் பெறுவதற்குரிய முயற்சிகளையும் அவர் எடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து 2015-2018 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஹாபிஸ் நசீர் அஹமட் முதலமைச்சராக இருந்தார். அவரால் நூலகத்துக்கு உரிய அங்கீகாரமில்லாமையால் நிதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சியை நாம் கைப்பற்றியதும் முதல் வேலையாக இந் நூலகத்தினை கட்டி முடிக்க வேண்டும் என முயற்சிகளை எடுத்த போது மத்திய அரசின் எவ்வித அங்கீகாரங்களும் பெறப்படாமல்,ஏற்கனவே செலவளிக்கப்பட்ட 180 மில்லியங்களுக்கு உரிய செலவு விபரங்களும் காட்டப்படாமல் கிடப்பில் கிடந்ததை அறிய முடிந்தது.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களின் துணையுடன் தேசிய திட்டமிடல் அதிகார சபையின் அனுமதியும்,அமைச்சரவையில் அங்கீகாரமும் பாராளுமன்றத்தில் அதற்கு உரிய அனுமதியும் பெறப்பட்டன.

இந்த அனுமதிகளைக் கொண்டு இக் கட்டிடத்தினை முழுமையாக நிறைவு செய்ய 345 மில்லியன் ரூபாய் தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தினால் மதிப்பீடு செயப்பட்டதுடன்,பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக 169 மில்லியன் ரூபாய்களையும், கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த றோகித போகொல்லாகமவின் ஊடாக 100 மில்லியன் ரூபாய்களையும் தேசிய கட்டிடங்கள் திணைக்களத்திற்கு பெற்றுக் கொடுத்திருந்தோம். மிகுதியை மாநகர சபையின் சொந்த நிதியில் வழங்குவதென்றும் உறுதியளித்திருந்தோம்.

இதன் பின் தேசிய கட்டடங்கள் திணைக்களத்தினால் திறந்த கேள்வி கோரப்பட்டு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டன. 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பு,ஜனாதிபதி தேர்தல் தற்போது 2020 கொரோனா பிரச்சினைகளால் வேலைகள் தாமதமாகியுள்ளன.

இதை விரைவில் ஆரம்பிக்க முடியும். மத்திய அரசின் முறையான அனுமதிகளையும்,உரிய நிதி ஒதுக்கீடுகளையும் செய்து பெற்றுக் கொடுத்துள்ளமையால் இத் திட்டமானது இனி எந்த அரசாங்கம் மாறினாலும் தங்கு தடையின்றி நிறைவு செய்யப்படும். இவ்வாறுதான் இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பாரிய அபிவிருத்திகள் அனைத்தும் தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என சுட்டிக் காட்டினார்.

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவி;06 விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்கு ஏற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு கிடைத்த 7 விண்ணப்பங்களில் 6 விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தகவல் நேற்று (03) இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தின் போது பேரவை உறுப்பினர்களுக்குப் பகிரப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 15 ஆம் திகதி, பல்கலைக்கழகப் பதிவாளரால் பகிரங்கமாகக் கோரப்பட்ட விளம்பரத்துக்கமைவாக 7 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ந. தனேந்திரனுடையது.

உரிய முறைப்படி நிரப்பப்படாத காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு. மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி. வேல்நம்பி, மருத்துவ பீடாதிபதி வைத்திய நிபுணர் எஸ். ரவிராஜ், விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா, புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன் ஆகியோரின் விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவின் மதிப்பீட்டின் படி புள்ளிகளின் அடிப்படையிலான திறமைப்பட்டியலின் முதல் 5 பேரின் விபரங்கள்அறிக்கை கிடைக்கப் பெற்றதும், எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அளவில் விசேட பேரவைக் கூட்டம் ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அன்றைய தினமே பேரவை உறுப்பினர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு மூன்று பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தெரிவு செய்யப்படும் 3 பேரின் விவரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக ஜனாதிபதியின் இறுதித் தெரிவுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றி பெற்றாலும் எம்.பி. பதவி பறிபோகும்

அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அல்லது மதஸ்தலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானாலும் அவரது எம்.பி. பதவி பறிபோகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மதஸ்தலங்கள் மற்றும் புனித இடங்களில் கட்சி வேட்பாளர்களை ஊக்குவித்து பிரசாரம் மேற்கொள்வது 1981ஆம் பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 79 ஆவது பிரிவின் கீழ் கடுமையான குற்றமாகும். இதனை அழுத்தமாக கூறிக்கொள்ள விருப்புகின்றோம். இதனை மீறிச் செயற்படும் பட்சத்தில் ஒருவர் வெற்றி பெற்றாலும் அவரின் எம்.பி. பதவி பறிபோகும்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பலர் அரச வாகனங்களை பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அரச வாகனங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்துவது பாரிய குற்றமாகும் என்றார்.