தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிக்கிறோம்

கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பில் திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் தனது கண்டனத்தையும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் ஆரம்பப் புள்ளியான இணைந்த வடக்கு கிழக்கும் தமிழர்களின் பூர்வீகத் தொன்மையும் மிக முக்கிய அலகுகளாகும் .இந்த நிலையில், தமிழ் மக்களின் பாரம்பரிய இருப்பை சிதைக்கும் வகையில், பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருது கண்டனத்துக்கு உரியது.இந்த வகையில்  இந்த செயலணியை முற்றாக நிராகரிக்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ் மக்களின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி வேலைத்திட்டங்களை  வன்மையாகக் கண்டிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.