Home Blog Page 1722

விரைந்து பௌத்த சிங்கள மயமாக்கப்படும் புல்மோட்டை

புல்மோட்டை எனும் சிறு நகரம் திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மையான தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இருக்கும் ஒரு நகரமாகும் இந்த நகரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது.

30 சதுர கிலோமீட்டர் பரப்பிலான யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த பகுதியில்
1. 10 பௌத்த விகாரைகள்
2. 2 சிங்கள குடியேற்றங்கள்
3. 4 நிரந்தர கடற்படை முகாம்கள்
4. 2 நிரந்தர ராணுவ முகாம்கள் உருவாக்க பட்டு இருக்கிறது..

2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிற்கு பின்னர் B 60 வீதி அடங்கலாக தமிழ் பேசும் மக்கள் வாழும் இவ் பகுதி எங்கும் சிங்கள குடியேற்றங்களின் விரிவாக்கம், நிரந்தர இராணுவ முகாம்கள் , பௌத்த விகாரைகள் எனபுல்மோட்டை பகுதியை சிங்களமயமாக்குவதற்கான ஒரு பரந்த முயற்சி இப்பகுதியில் உள்ள அரிசிமலை என்கிற இடத்தில தங்கி இருக்கும் Thilakawansa Nayaka எனும் புத்த பிக்குவின் ஏற்பாட்டில் நடை பெற்று வருகிறது.

இந்த பிக்கு தலைமையிலான குழுவினர் புல்மோட்டை , அரிசிமலை தென்னன்மரவாடி என குச்சவெளி பிரதேச செயலக பகுதிகளில் சிங்கள குடியேற்றம் மற்றும் பௌத்த விகாரைகளை தொடர்ச்சியாக நிறுவ முயற்சித்து வருகின்றனர் . அண்மையில் கோட்டாபய ராஜபக்சே நியமித்த கிழக்கு மாகாணத்திற்க்கான தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியிலும் இவர் ஒரு அங்கத்தவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக அரிசிமலை எனும் தமிழ் பேசும் மக்களின் மீனவ கிராமத்தில் பௌத்த வளாகம் ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் . அத்துடன் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் விகாரைக்கு Asiri Kanda Purana Rajamaha பெயரிட்டு இருப்பதோடு 500 ஏக்கர் நிலமும் விகாரைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதுமட்டுமல்லாது இப் பகுதியை சூழ எல்லா இடங்களிலும் புத்தர் சிலைகளையும் சிறிய கோவில்களையும் நிறுவி வருகிறார்கள். இதில் அரிசிமலை கடற்கரையின் தென்மேற்கே உள்ள காட்டு பகுதியில் கூட புத்த கோவில் ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் .

அங்கு புத்த பிக்குகளுக்கான தியான மண்டபங்கள் , வாழ்விடங்கள் உட்பட பல அமைக்கப்பட்டு இருக்கின்றன,. அத்துடன் இப்பகுதி எங்கும் புத்த துறவிகளுக்கானது என்றும் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு இருக்கிறது.

அதே போல திருகோணமலையின் தென்னைமரவாடியில் இருந்து புல்மோட்டை செல்லும் வீதியில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இரண்டு தமிழ் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை ) மற்றும் ஏறமாடு(10 ஆம் கட்டை ) சிங்கள குடியேற்ற திட்டங்கள் உருவாக்க பட்டு இருக்கிறது .ஏற்கனவே சிங்கள குடியேற்ற வாசிகள் தற்காலிக குடியேற்றங்களை உருவாக்கி குடியேறி உள்ள நிலையில் பௌத்த பிக்குகளின் ஆதரவில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடன் வீடமைப்பு அதிகார சபையால் நிரந்தர வீடமைப்பு திட்டம் உருவாக்க பட்டு இருக்கிறது .

இந்த வீடமைப்பு திட்டத்திற்கு குச்சவெளி பிரதேச செயலகத்தின் எந்த வித அனுமதியும் பெறப்படவில்லை .காணி பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியும் இதற்க்கு பெறப்படவில்லை . இவ் குடியேற்ற திட்டம் ஒன்றுக்கு சாந்தபுர என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

அத்துடன் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னன்மரவடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட தன் பிற்பாடு கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வழிபட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அப் பகுதியிலும் புத்தர் சிலைகள் , பௌத்த விகாரைகள் , தியான மண்டபங்கள் என பாரியளவிலான பௌத்த மயமாக்கல் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

நன்றி- இனமொன்றின் குரல்

நீதி வேண்டி நடைபெற்று வரும் போராட்டங்கள் சமூகச் சீர்திருத்தம் ஏற்படத் தூண்டுகோலாக அமையும்

ஜோர்ஜ் ஃப்ளாய்ட் இறப்புக்கு நீதி வேண்டி நடைபெற்று வரும் போராட்டங்கள் அமெரிக்காவில் சமூகச் சீர்திருத்தம் ஏற்படத் தூண்டுகோலாக அமையும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இனவெறிக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டங்கள் குறித்து கடந்த புதன்கிழமை அன்று தனது கருத்தைஒபாமாவெளியிட்டிருந்தார்.

”நீங்கள் முக்கியமானவர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் வாழ்க்கை முக்கியமானது.

உங்கள் கனவுகள் முக்கியமானவை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களை அறிகிறேன். அமெரிக்கா அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவது தொடர்பான கொள்கைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மேலும்,பெரும் மாற்றத்தைக் கோரும் வரலாற்று நிகழ்வுகள் கடந்த வாரம் நம் நாட்டில் அரங்கேறின. மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தச் சூழல் சமூகத்தில் பெரும் தாக்கம் செலுத்த வேண்டும். நகர மேயர்களும் அதிகாரங்கள் தொடர்பான கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்”.

இவ்வாறு ஒபாமா பேசினார்.

இந்தப் போராட்டத்தை ட்ரம்ப் கையாளும் விதம் குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த திங்கள்கிழமை அன்று போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தன் கோபத்தை ஒபாமா வெளிப்படுத்தினார்.

பொதுத்தேர்தல் மேலும் காலதாமதமாகலாம்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் மேலும் காலதாமதமாகலாம் எனவும் அது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது அதற்கு பின்னர் பிற்போடப்படலாம் எனவும் சிறீலங்கா தேர்தல் திணைக்களத்தை மேற்கோள்காட்டி கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலை மிக விரைவாக நடத்தும்படி சிறீலங்கா அரச தலைவரின் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துவருகின்ற போதும், தற்போதுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் விதிமுறைகளை கடைப்பிடித்து தேர்தலை நடத்துவது என்பது அதிக காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை (8) தேர்தல் திணைக்களம் இது தொடர்பில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதில் தேர்தல் நடைபெறும் நாள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காணாமலாக்கப்பட்ட மகளைத் தேடி அலைந்த தந்தை மரணம் ; வவுனியாவில் நேற்று சோகம்

வவுனியா வைத்து கடத்தப்பட்ட தனது மகனைத் தேடிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் நேற்றுக் காலை மரணமடைந் துள்ளார். வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச் சாமி நல்லதம்பி (வயது-71) என்ற தந்தையே நேற்று தனது வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து இறந்துள்ளார்.

வவுனியாவில் வீதி அபிவிருத்தித் திணைக் களத்துக்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இவரது மகனை 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோர் கடத்திச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட் டத்திலும் கலந்துகொண்டு காணாமல்போன உறவுகளுக்காகக் குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சென்ற முல்லைத்தீவு வர்த்தகரைக் காணவில்லை ; மனைவி பொலிஸில் முறைப்பாடு

மல்லாவி பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாலசுந்தரராஜா பிரபாகரன் (வயது-50) என்பவரை காணவில்லை என அவரின் மனைவி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் வவுனிக்குளம் பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரபா என அழைக்கப்படும் பாலசுந்தரராஜா பிரபாகரன் என்ற வர்த்தகர் கடந்த புதன்கிழமை மல்லாவியிலிருந்து வவுனியாவுக்கு செல்வதாகத் தெரிவித்து சென்ற நிலையில் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.

தேர்தலின் பின் பௌத்த – சிங்கள பெரும்பான்மை அரசை நாம் நிறுவுவோம்; ஞானசார தேரர் உறுதி

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த – சிங்களவர்களின் பூமிதான். அதாவது ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த – சிங்கள நாடு. தமிழர்கள் இதை உணர்ந்துகொள்ளவேண்டும். அதைவிடுத்துப் புலம்பிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை” என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

“வடக்கு, கிழக்கை நாம் பாதுகாக்க வேண்டுமெனில் இங்கு இராணுவத்தைத்தான் நிலைநிறுத்த வேண்டும். அவர்களின் நேரடிக் கண்காணிப்பில்தான் அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெறும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது ;

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை நாம் வரவேற்கின்றோம். பெரும்பான்மை பௌத்த – சிங்களவர்களின் வாக்குகளினாலேயே அவர் நாட்டின் தலைவாராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவரின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. நீதியின் வழியிலும், அரசமைப்பை மதித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்படுகின்றார். இதை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தனிப் பௌத்த – சிங்களத் தலைவரை நாம் தெரிவு செய்தது போல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிப் பௌத்த – சிங்கள பெரும்பான்மை அரசை நாம் நிறுவுவோம். எனவே, தமிழர்கள் விரும்பினால் எமது கொள்கைகளை ஏற்று எம்முடன் இணைந்து பயணிக்கலாம்” என்றார்.

இலங்கை வந்த அமெரிக்க தூதரக அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டார் ; தூதரகம் அறிவிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை நிராகரித்து நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அரசுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தியுள்ளது. இந்தப் பெண் அதிகாரி டுபாயிலிருந்து நேற்று முன் தினம் அதிகாலை இலங்கைக்கு வந்திருந்தார்.

இதன்போது விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அவர் மறுத்தமை குறித்து தகவல் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்! – சீமான் பேரழைப்பு

பேரன்புக்கொண்டு நான் பெரிதும் நேசிக்கின்ற என் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ஈழத் தாயகத்தில் நம் இனம் அழித்தொழிக்கப்பட்டதில் இருந்து அந்த அநீதிக்கான நீதியைப் பெற பன்னாட்டுச் சமூகத்திடம் நாம் தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.

நமக்கென்று உலக அரங்கில் ஆதரவு கரம் நீட்டவோ குரல் எழுப்பவோ ஒருவரும் இல்லாத நிலையில் தனித்து விடப்பட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். இச்சூழலில் ஆஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் (Hugh McDermott) அவர்கள் நமக்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார்.

அண்மையில் அங்கு நடைபெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என்ற கருத்தை உறுதிபட தெரிவித்துள்ளார் . உலகின் பல நாடுகளில் பல்வேறு தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூட இனப்படுகொலை என்று பதிவுசெய்ய பயப்படுகிற சூழலில் வெறும் போர்க்குற்றம் என்று பூசி மொழுகுகிற இக்காலக்கட்டத்தில் அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்று தமிழர் அல்லாத ஒருவரினுடைய குரல் உலக அரங்கில் ஒலிப்பது என்பது நமது போராட்டத்திற்கு மிகவும் வலுச்சேர்க்க கூடிய ஒன்றாகும்.

ஆனால் அவருக்கு ஆஸ்திரேலியா மண்ணில் வாழ்கிற சிங்களர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாழும் சிங்களர்களும் எதிர்ப்பு தெரிவித்து, அவர் பொய் சொல்வதாகவும் அவரது கருத்தை ஏற்க கூடாது என்றும் ஆஸ்திரேலியா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். எனவே தொடர்ந்து நமக்காக குரல் எழுப்பி வரும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் அவர்களுக்கு எதிராக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய கருத்தைப் பதிவுசெய்து வருகிறார்கள்.

ஒன்றே கால் கோடி சிங்களர்கள் 10000க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் என்றால் பதிமூன்று கோடி தமிழர்கள் எத்தனை இலட்சம் கையெழுத்துகளைப் பெற முடியும் என்பதை சிந்திக்க வேண்டும், பாதிப்புக்கு உள்ளாக்கியவர்கள் ஒன்றிணைந்து நிற்கிற போது பாதிக்கப்பட்ட மக்கள் நாம் எவ்வளவு பேரெழுச்சியாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதை உங்களுக்கு நான் கூறி உணர்த்த வேண்டிய தேவையில்லை.

ஆனால் இச்சூழலில் 5000க்கும் குறைவான ஆதரவு கையெழுத்துகளே பெறப்பட்டுள்ளது என்பது வருத்தமளிக்கிறது. இக்காணொளியைப் பார்க்கின்ற என் உடன் பிறந்தார்கள், என் உயிருக்கும் மேலான உறவுகள் நீங்கள் அனைவரும் ஹக் மெக்டெர்மோட் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் நோக்கோடு உலகம் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று கையெழுத்திட்டு பேராதரவைத் தரவேண்டும்.

கீழுயேள்ள இணைப்பு (link)இல் சென்று அவருக்காக கையொப்பமிடுங்கள். https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community

ஈழத் தாயகத்தில் நிகழ்த்தப்பட்டது இனப் படுகொலை தான் என்ற நம்முடைய கருத்தை உலக அரங்கில் ஒலிக்கச் செய்ய இவருக்கு ஆதரவு கொடுப்பதில் தான் மற்றவர்களும் வலுசேர்க்க வருவார்கள். அதனால் ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் தயவுகூர்ந்து இதை ஒரு பெரும் பொறுப்பாக பிறவிக் கடனாக எடுத்துக்கொண்டு இதில் கவனமெடுத்து அவருக்கு ஆதரவாக கையெழுத்திட வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.

ஆஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் அவர்களுக்கு ஆதரவாக இக்கையெழுத்துப் பரப்புரையை முன்னெடுத்து இருக்கின்ற என் அன்பிற்கினிய தம்பிகள் அண்ணாதுரை, லாரன்ஸ், இஸ்மாயில் மீரான், பொன்ராஜ், விஜயகுமார், முருகன் ஆகியோருக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துகள். இது ஒவ்வொருவரின் கடமை. நாம் அனைவரும் இதில் கவனம் செலுத்தி பல கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்.

நன்றி! வணக்கம்!

இலங்கை வரும் இராஜதந்திரிகளுக்கு கடும் நிபந்தனை ; அமெரிக்க சர்ச்சையையடுத்து அதிரடி

இலங்கை வரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான புதிய – கடுமையான விதிமுறைகள் வெளிவிவகாரத்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் கொரோனா பரிசோதனையை தவிர்த்தார் என்று எழுப்பப்பட்ட சர்ச்சையை அடுத்தே இந்த புதிய விதிமுறைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டுக்கு வருகை தரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 72 மணித்தியாலங்களுக்கு முன் அவர்கள் புறப்பட்ட நாட்டில் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என புதிய விதிமுறை கூறுகின்றது.

குறித்த பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க தவறும் அனைத்து இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிசோதனைகளுக்கு முகம் கொடுக்காத குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் மீது தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அவர்கள் 14 நாள்கள் அவர்களின் தங்குமிடத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அதுகுறித்து குறித்த தூதரகத்தினால் முழுவதுமாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்கள் மீண்டும் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவெளவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நீதிகேட்பதை நேர்வழியாக்கிய தூயநெஞ்சினன் பாயிரமாகினான்! -புலவர் சிவநாதன்

ஈழத்தாயக எழுச்சியின் வித்தென
இளமைவாழ்வினை ஈந்த மறவனை
வாழவேண்டிய அகவையிற் தன்னுயிர்
விழுதெறிந்தெங்கள் விழிநின்ற வீரனை
சூழநின்றிடும் சூரரின் கொடுமையைச்
சுழற்றி வீசிடும் சுடரென விரிந்தஓர்
காளையை எங்கள் பொன்சிவ குமாரனை
ஆழநிஞ்சினில் ஆராதனை செயும்
நாளிதென்பது யாவருமறிந்ததே!

தாய்மடிதனில் விலங்குடன் உறங்கிய
தமிழினந்தனைத் தட்டியெழுப்பிய
சேய் இவனெனச் செப்பிடல் குற்றமோ?
தீகிளம்பிய திசையெலாம் தமிழரின்
தேசமல்லவோ எரிந்து கிடந்தது?
வாய்திறந்தவர் நாவினைத் துண்டித்த
நாசமல்லவோ நாட்டினில் நிலவிற்று?
பேய்வலம்வரும் பூமியை மாற்றிடப்
போர்தொடுத்திடும் பாதையை நம்பினான்!

தூயநெஞ்சுடன் துணிவுடன் இளைஞர்கள்
தாயகம்தனைக் காத்திடப் புறப்படல்
நியாயமென்றிவன் நெஞ்சினிற் கொண்டொரு
நீதிகேட்பதை நேர்வழியாக்கினான்!
காயமாவி தன்கல்வி தகைமைகள்
காற்றில் வீசியே காவியமாகிய
ஆயிரம் பல ஆயிரம் வீரரை
அணிவகுத்திட வைத்ததியாகியை
பாயிரம் எனப் பாடியவன் புகழ்
பணிந்து நம்பணி யாமும் தொடர்வமே!