Home Blog Page 1472

‘தடையை நீக்கினால் தடம் பிறக்கும்’ -முனைவர் ஆ. குழந்தை

பிரித்தானிய நடுவர் மன்றம் கடந்த அக்தோபர் திங்கள் தமிழீழ விடுலைப் போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலி இயக்கத்திற்கு தடை விதித்திருப்பது தவறு என்ற தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு சிங்கள பேரினவாத, பௌத்த இராணுவ அரசு தடையை நீக்கக் கூடாதென இங்கிலாந்து அரசை வலியுறுத்துகிறது.

இந்திய அரசின் ஆதரவையும் பெற முயற்சிக்கிறது. 15. 11. 2020 ஞாயிறு அன்று கனடாவில் உள்ள ஒந்தாரியோ கொள்கை ஆய்வு மையம் தடையை நீக்குவதால் வரும் கற்பனை செய்யப்பட்ட ஆபத்துகளைப்பற்றி கருத்தரங்கு நடத்தியது. அதில் பிரகாசு ஆ. ஷா, மிசுக்கா குவ்சுகா, மனிசு ஆப்ரேட், நேவில் கேவாசு ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

தடையை நீக்கவேண்டுமென்று தமிழர்கள் இணைய தளத்தின் வழியாக கையெழுத்து வேட்டை நடத்தினர். அந்த இணையதளத்தை தடைசெய்ய பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். தடையை நீக்குவதற்கு ஆதரவாக நடத்தப்படும் முகநூல், இணையதளம், துண்டறிக்கைகள் போன்ற ஊடக வழிகளை தடைசெய்வதற்கு தொடர்ந்து முயற்சி எடுக்கின்றனர். இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கம் ஓரு தீவிரவாத அமைப்பு என்று ஆதாரமற்ற தரவுகளை முன்வைக்கின்றனர்.

தங்களது தீவிரவாத செயல்களை மூடிமறைப்பதற்காக தமிழர்களையும் அவர்கள் சார்ந்த போராளி இயக்கங்களையும் தடைசெய்து, பிரித்து அடிமையாக்கி, அச்சத்தை உருவாக்கி, தாங்கள் செய்த இனஅழிப்புக்கான தடயங்களை அழித்து, புதிய வடிவமான பயங்கரவாத செயல்களை செய்கிறது. நினைவு நாளை அனுசரிக்கும் உரிமையை பறித்து, மறுத்து பாசிச பயங்கரவாத அரசாக செயல்படுகிறது.

தடைக்கு ஆதரவாக இருக்கும் அனைவரும் விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என்ற பொய்யைச் சொல்லி பரப்புரை செய்து வருகின்றனர். இலங்கையில் கோப்பாய், யாழ்ப்பாணம் காவல்துறையினர் விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும், அந்த அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதை சட்டவிரோதம் என்று யாழ் நடுவர் மன்றத்தில் 20. 11. 2020 அன்று வழக்கு தொடர்ந்தனர்.

இதை மறுத்து விடுதலைப்புலிகள் நமது உரிமைப் போராளிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள், சுதந்திர ஈகிகள் என்று உண்மை வரலாற்றை உலகறிய தொடர்ந்து பரப்பி இந்த தடையை நீக்க வேண்டும்.

தடைக்கு  தரமற்ற காரணங்கள்

71789274 facebookonmobilephone 'தடையை நீக்கினால் தடம் பிறக்கும்' -முனைவர் ஆ. குழந்தை

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் சார்ந்த உள்ளடக்கங்களை பதிவிட்டதற்காக முகநூல் பதிவுகள், கணக்குகள், முகநூல் பக்கங்களும் நீக்கப்பட்டன. அதற்கு பிபிசி தமிழ் நேரடியாக முன்வைத்த வினாக்களுக்கு பொதுப்படையான பதிலை முகநூல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கீழ்கண்டவாறு தருகிறார்: “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும் முக்கியமான பண்பாட்டு, குமுக, அரசியல் நகர்வுகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் முகநூலுக்கு வருவதை நாங்கள் மதிக்கிறோம். எனினும் வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை முகநூல் தொடர்ந்து நீக்கும்”. வெறுப்பையோ, வன்முறையையோ பரப்பும் வகையில் முகநூல் பயன்படுகிறதென எவர் கூறியதை இந்த நிறுவனம் நம்புகிறது.

சிங்கள பேரினவாத அரசும், ஆட்சியாளர்களும் செய்த வெறுப்பும், தீவிரவாத செயல்களும் பரப்பப்படுவதற்கு இந்த முகநூல் துணை போகிறது. நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை என்ற போர்வையில் தமிழர்களின் உரிமைகளைப் பறித்து, அடிமையாக்கி, கொலை, கொள்ளை செய்து வருகிறது சிங்கள பேரினவாத இராணுவ அரசு.

மாற்றுக்கருத்தை கூறுபவர்களையும், உரிமைக்காக போராடுபவர்களையும் அறம் காக்க ஆர்த்தெழுபவர்களையும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தி கொன்றொழிக்கின்றனர். அந்த அரசை தடை செய்யாமல் விடுதலைப் போராட்ட அமைப்புகளை தடைசெய்வது சர்வாதிகாரம், பாசிசம், நாசிசம் ஆகியவை வளர்வதற்கு இந்த முகநூல் நிறுவனம் துணை போகிறது. அது ஊடக அறநெறியை மீறுகிறது.

மேலும் அவர் “ஆபத்தான அமைப்புகளை தடை செய்யும்போது அவற்றின் இருப்பையும் அகற்றுவது எங்களது நோக்கமாக உள்ளது. எங்களது முறைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகளை தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்” என்று கூறினார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் ஆபத்தான இயக்கம் என்று எதை வைத்து முகநூல் நிறுவனம் முடிவு செய்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு தடைசெய்வது அடிப்படை உரிமையை பறிப்பதற்கு சமம். தடைசெய்வதே ஒரு தீவிரவாத செயலாகும். இதற்கு சிங்கள பேரினவாத அரசும் பிரித்தானிய நடுவர் மன்றம் விதித்த தடையும் காரணங்களாக இருக்கின்றன.

அரசு தடை செய்தது. அதனால் நாங்களும் தடைசெய்கிறோம் என்பது சரியான, நயன்மையான செயல் அல்ல. அடிப்படையில் எல்லோரும் முன்வைக்கும் சொல் ‘தீவிரவாதம்’. தங்களது உரிமைக்காக போராடுவதில் தீவிரம் அல்லது ஆர்வம் காட்டுவது ஆக்கபூர்வமான தீவிரவாதமாகும். இந்த ஆக்கபூர்மான தீவிரவாதத்தை உயிர் வாழ உரிமை உள்ளவர்கள், சாதனை படைக்க விரும்புவர்கள், இனம் காக்க பாடுபடுபவர்கள் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய அறநெறிச் செயல்பாடாகும்.  ஆனால் உரிமைக்காக தீவிரம் காட்டக்கூடாதென தடுப்பது அழிவுபூர்மான தீவிரவாதமாகும்.

இந்த அழிவுபூர்வமான தீவிரவாதத்தை ஆட்சியாளர்களும், பணமுதலைகளும், அதிகாரவெறி பிடித்தவர்களும் கடைபிடிக்கின்றனர். அரசும் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் உரிமைகளைப் பறிப்பதன்மூலம், வாழ்வாதாரங்களை அழிப்பதன்மூலம் ஆக்கபூர்வமான தீவிரவாதிகளை உருவாக்குகின்றனர்.

ஊடகத்தைப்போல பல்வேறு நாட்டின் அரசுகளும் சிங்கள பேரினவாத, இராணுவ அரசும் சிங்கள பேரினவாதிகளும் தரும் ஆவணங்களை வைத்துக்கொண்டு விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்திருக்கின்றன. இந்த தடையை வைத்துக்கொண்டு உறவுகளின் நினைவு நாட்களை கொண்டாட முடியவில்லை.

இலங்கை தடை விதித்ததால் இலங்கையின் நட்பு நாடுகளும் தடைவிதித்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை புரியாமல் தடை விதித்திருக்கின்றன.

தங்களின் ஆதாயத்திற்காக தடை விதித்திருக்கின்றன. சீனா இந்தியப் பெருங்கடலில் இராணுவத் தளத்தை உருவாக்கி, தெற்காசிய நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைக்கவும், மேலை நாடுகளின் ஆதிக்கத்தை தடுக்கவும், இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் இலங்கையை ஆதரிக்கிறது.

விடுதலைப்புலிகளால் ஆபத்து என்ற பொய்யான பரப்புரையை நம்பி, சில நாடுகள் தடை விதித்திருக்கின்றன. சிங்களப் பேரினவாத அரசு தரும் ஆதாரமற்ற தரவுகளை பல நாடுகள் நம்புகின்றன. ஆனால் சிங்களப் பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்கள் தரவுகளை ஏற்க மறுக்கின்றனர்.

சிங்கள பௌத்த பேரினவாத இராணுவ அரசை பாதுகாத்தல் உலக நாடுகளின் தீவிரவாதத்தை வெளிப்படுத்துகிறது. தீவிரவாதத்தை கடைபிடிப்பவர்கள் மற்றவர்களை தீவிரவாதிகள் என்று அழைப்பர். மஞ்சள் கண்ணாடி போட்டவர்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தோன்றும்.

அதுபோல தீவிரவாதிகளுக்கு பார்ப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள்தான். பகுத்தறிவோடு சிந்திக்க மறுக்கும் அரசுகள், தலைவர்கள், ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்குகின்றனர். சிங்கள பௌத்த பேரினவாத நாடாக இலங்கையை உருவாக்க பகுத்தறிவை இழந்து, மனிதத்தை அழித்து, தன்மானத்தை அடகுவைத்து, புத்தரின் போதனைகளைக் காற்றில் பறக்கவிட்டு, அழித்தலை தனது ஆயுதமாக ஏந்தி, செயல்படுகிற அரசு ஒரு பயங்கரவாத அரசாகும்.

அந்த பயங்கரவாதத்தை நியாயப்படுத்த இறையாண்மை, ஒற்றுமை, சமத்துவம் போன்ற புரியாத, புதிரான கருத்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

தடை நீக்கம் தரும் பணிகள்

ஒன்று.

தனிமனித அரசியல், பொருளாதார, பண்பாட்டு முன்னேற்றத்தை தமிழீழ முன்னேற்றமாக கருதுவது நமது அறியாமையைக் காட்டுகிறது. இனமாக, அமைப்பாக, குழுவாக முன்னேறுவதுதான் உண்மையான, ஆரோக்கியமான, நீண்டகால முன்னேற்றமாகும். தடையை நீக்குவது நம்மை அமைப்பு ரீதியாக முன்னேற்றுவதற்கு வழிவகுக்கும்.

இரண்டு.

தமது உரிமைகளை உலக அளவிலும், தமிழீழ அளவிலும் நிலைநிறுத்த இந்த தடைநீக்கம் பயன்படுகிறது. நினைவு நாளைக் கொண்டாடுதல், உரிமைகளை நிலை நிறுத்துதல், தமிழீழ விடுதலையின் நோக்கத்தை உலகறியச் செய்தல் போன்றவற்றை செயல்படுத்த உதவுகிறது. அதற்காக நமது தொல்லியல் ஆதாரங்களையும் வரலாற்று உண்மைகளையும் பாதுகாத்து உலகறிய பரப்ப வேண்டும்.

மூன்று.

தடையின் உள்நோக்கத்தை உலகறியச் செய்யவேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பின் நற்பணிகளையும், எண்ணங்களையும், நோக்கத்தையும், காரணங்களையும் ஆதாரங்களுடன் வெளி உலகிற்கு தொடர்ந்து, பல்வேறு வழிகளில், வடிவங்களில் காட்ட வேண்டும்.

நான்கு.

தடை செய்யப்பட்ட நாடுகளில் தொடர்ந்து வழக்குகளைப் போட்டு, ஆட்சியாளர்களைத் தொடர்ந்து சந்தித்து, சரியான தரவுகளைக் கொடுத்து, விளக்கமளித்து, புரியவைத்து, தடையை நீக்க நாளும் செயல்பட வேண்டும். இந்த நாடுகள் ஊடகவியலாளர்களின் சந்திப்பில் தமிழீழப் பிரச்சினைப்பற்றி தரும் மேலோட்டமான உரைகளை ஒருபோதும் நம்பாமல், தனிப்பட்ட முறையில் சந்தித்து, நாடாளுமன்றத்தின் வழியாகத் தீர்மானத்தை கொண்டுவர உழைக்க வேண்டும்.

ஐந்து.

eu ltte 'தடையை நீக்கினால் தடம் பிறக்கும்' -முனைவர் ஆ. குழந்தை

தடை செய்த நாடுகளின் அரசுகளையும், நமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் நாடுகளைச் சந்திக்கும்போது சுவிட்சர்லாந்து நடுவர் மன்றம் தந்த தீர்ப்பையும், ஐரோப்பிய ஒன்றியம் தந்த தீர்ப்பையும், இத்தாலிய நடுவர் மன்றம் தந்த தீர்ப்பையும், கத்தலோனியா நாடு கொண்டு வந்த தீர்மானத்தையும், தமிழ்நாட்டு சட்டமன்றம் கொண்டுவந்த தீர்மானத்தையும், இலங்கை வடக்கு மாகாண அவை கொண்டுவந்த தீர்மானத்தையும் தக்க விளக்கங்களுடன் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும்.

இறுதியாக, விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு என்ற மாயையையும், தவறான கருத்தியலையும் மாற்ற நாம் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கு தெருவில் நின்று கூக்குரல் எழுப்புவதோடு மட்டும் நின்று விடாமல் அறிவுத்தளத்தில் அமைப்பு ரீதியாக அணுகி, முடிவு எடுக்கும் அதிகாரமுள்ள அமைப்புகளோடும் அதிகாரிகளோடும் தொடர்பு வைத்து, உண்மையை புரிய வைக்க வேண்டும்.

சோர்ந்து விடாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து தடையை நீக்கும் செயற்பாட்டை அமைதியாக, விவேகமாக, விரைவாக செய்து முடிக்க வேண்டும்.

சுதந்திரக் குறியீடு – இந்தியாவிற்கு 111ஆவது இடம்

தனிமனித, குடிமை மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் (PERSONAL,CIVIC AND ECONOMIC FREEDOM) உலகளாவிய தரவரிளையில் இந்தியா 111வது இடத்தைப் பிடித்துள்ளது. 162 நாடுகளை ஒப்பிட்டு இந்தப் பட்டியல் வெளிப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கேடோ நிறுவனம் மற்றும் கனடாவில் உள்ள ஃப்ரேசர் நிறுவனம் 2008 முதல் 2018 வரையிலான தரவுகளைப் பயன்படுத்தி “மனித சுதந்திரக் குறியீடு 2020” (HUMAN FREEDOM INDEX 2020) எனும் இந்தத் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலக அளவில், 2008முதல் தனிமனித சுதந்திரம் குறைந்து வருவது இதில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் குறியீடானது தனிமனித குடிமை மற்றும் பொருளாதார சுதந்திரத்தை குறிக்கும் 76 அளவுகோல்களை உள்ளடக்கியது என்று கேடோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில் இந்தியா 110ஆவது இடத்தைப் பிடித்தது. பொருளாதார சுதந்திரத்தில் 105ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

மொத்தமாக 10 புள்ளிகளில் இந்தியா 6.43 புள்ளினளை பெற்றுள்ளது.

இந்தத் தரவரிசையில் நியூசிலாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

“2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில், ஹாங்காங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்பாராத தலையீட்டின் காரணமாக, எதிர்காலத்தில் அப்பகுதியின் சுதந்திர மதிப்பெண் குறைய கூடும்” என்று இந்த ஆய்வை நடத்திய ஆசிரியர்கள் அனுமானிக்கிறார்கள்.

“வெனிசுலா, சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் இந்த வரிசையில் கடைசி இடங்களை பிடித்துள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தரவரிசை பட்டியலில் சீனா 129 ஆவது இடத்திலும், வங்கதேசம் 139ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 140 ஆவது இடத்திலும் உள்ளன.

பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரோ என பல நாட்டுத் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரான்ஸ் அதிபர் இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, அதிபர் மக்ரோங், பிரன்ஸ் நாட்டின் நாடாளுமன்றத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அதே போல கடந்த திங்கள்கிழமை, பல நாடுகளின் முக்கியத் தலைவர்கள் பங்கெடுத்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான ஓ.இ.சி.டி கூட்டத்தை நடத்தியிருந்தார்.

அத்துடன் கடந்த வாரம், பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஒரு உச்சிமாநாட்டில், பிரான்ஸ் அதிபர் மக்ரோங் உடன், பல்வேறு ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், 42 வயதான அதிபர் இம்மானுவல் மக்ரோங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து  மக்ரோங், ஏழு நாட்களுக்குத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக எலிசி அரண்மனையில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அதிபர் இம்மானுவல் மக்ரோங்குடன் பல சந்திப்புக்களை நடத்தியிருந்த பல ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.

எம்.சி.சி. கொடுப்பனவுகள் இரத்தாகினாலும் உதவிகள் தொடரும் என்கிறது அமெரிக்கா

இலங்கைக்கான நிதியுதவியை நிறுத்துவது என எம்.சி.சியின் பணிப்பாளர் குழு தீர்மானித்துள்ள போதிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எம்.சி.சி. ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 48 கோடி அமெரிக்க டொலர் கொடுப்பனவை இரத்துச் செய்யஅமெரிக்கா தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த ஒப்பந்தத்தின் கீழ் பயன் பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இலங்கையின் நட்பு நாடாகதொடர்ந்தும் காணப்படும் என தெரிவித்துள்ள தூதரகம், இலங்கை கொரோனாவை எதிர் கொள்வதற்கும் நாட்டை கட்டியயழுப்புவதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு – சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 267 பேரில் 33 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகையில் நேற்று இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“உயிர்த்த ஞாயிறு தினத்தில் 8 இடங்களில் குண்டை வெடிக்கச் செய்தமை தொடர்பான பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டு, அது தொடர்பான 8 விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபரிடம் கையளித்திருக்கின்றோம். இந்தத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 267 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் 33 பேருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடுக்க இருக்கின்றோம். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் சிலர் சிறைச்சாலைகளிலும் மற்றும் சிலர் தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுதொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வது தாமதிப்பது தொடர்பில் சட்டமா அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினேன். இதன்போது அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இடம்பெற்று வருகின்றது. அதன் அறிக்கை வரும் வரைக்கும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளிப்படும் புதிய சாட்சிகளின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமாக இருப்பதால், அதனால் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும்வரை காத்திருக்க வேண்டும்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதுதொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே வழக்குத் தொடுக்க முடியும் என என்னிடம் தெரிவித்தார். அதேபோன்று இதுதொடர்பில் ஆராய 12 சட்டத்தரணிகள் சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அத்துடன் விசாரணை நடவடிக்கைகள் முறையாக இடம்பெற்றிருக்கின்றதா எனத் தேடிப்பார்க்க வேறு ஒரு குழுவையும் நான் நியமித்திருக்கின்றேன்” என்றார்.

மருதனார்மடம் கொரோனா கொத்தணி 73 ஆகியது – நேற்று ஐந்து பேருக்கு தொற்று உறுதி

மருதனார் மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் ஐந்து பேருக்குத் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சுன்னாகம் பொதுச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 110 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே ஐந்து பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் நேற்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் ஐந்து பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 108 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி ஓட்டோ தரிப்பிடத்திலுள்ள சாரதிகளிடம் கடந்த 9ஆம் திகதி மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் ஓட்டோ சாரதியாகவுமுள்ள 38 வயது குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கடந்த 11ஆம் திகதி கண்டறியப்பட்டது.அதனையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பத்தினர் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையிலுள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

மறுநாள் அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் மனைவி, இரண்டு மகள்கள், மகன், மாமியார் மற்றும் மைத்துனர் என 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், 6ஆவது நாளான நேற்று முன்தினம் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மேலும் ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டநிலையில் மருதனார்மடம் கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.

விடுதலைப் போராட்டத்தின் மையம் கிழக்கு – தென்னகன்

தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டம் என்பது என்றும் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தியதாகவே இடம்பெற்று வந்தது.

வடக்கில் இருந்து தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைகள் மேல் எழுந்தாலும், கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இன முரண்பாடுகளே தமிழர் தேசிய போராட்டம் முனைப்பு பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன.

ஒரு தடவை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரனை பிரேமதாச அழைத்து வடக்கினை தமிழீழமாக பிரகடனப்படுத்துகின்றேன், கிழக்கினை விடுங்கள் என்று கோரியபோது, எங்களுக்கு கிழக்கு மாகாணமே முக்கியமானது. அதனை தமிழீழமாக பிரகடனப்படுத்துங்கள் வடக்கில் எதையாவது செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்ததாக ஒரு தடவை விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இவ்வாறு கிழக்கின் முக்கியத்துவம் என்பது அன்று தொடக்கம் தமிழ் தேசிய போராட்டத்தில் மிக முக்கிய இடத்தினைக் கொண்டிருந்தது என்பது இன்றுள்ள இளம் தலைமுறையினருக்கு எந்தளவுக்கு தெரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளது என்பது புரியாத நிலையே இருந்து வருகின்றது.

குறிப்பாக வடகிழக்கினைப் பொறுத்தவரையில், தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தினால் நசுக்கப்படும்போது அதில் இருந்து கிளம்பிய நெருப்பு தணல்களாக பல்வேறு போராட்டங்கள் வடகிழக்கில் வெடித்தன.

உணர்வுகளை அடக்கும்போது அது அகிம்சைவழி போராட்டங்களாகவும், ஆயுதம் தாங்கிய போராட்டங்களாகவும் இரு கட்டங்களாக உருவெடுத்தன. தமிழர்களின் உணர்வு வெளிப்பாடு சர்வதேசம் வரையில் இன்று நீதி கேட்குமளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

தமிழர்கள் என்றைக்கும் வீதிக்காகவோ, கட்டடங்களுக்காகவோ அல்லது தமக்கான தொழில் வாய்ப்புக்காகவோ இந்த நாட்டில் போராடவில்லை.

இந்த நாட்டில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் தங்கள் இன மக்களும் அனுபவிக்க வேண்டும் என்றே போராடினார்கள். தங்கள் பகுதிகளைத் தாங்களே ஆள வேண்டும் என்று போராடினார்கள். தங்கள் பகுதிகளை பாதுகாத்து, தங்களது எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டும் என்று போராடினார்கள். இதனை  இன்றுள்ள சமூகம் நன்குணரும் என நம்புகின்றேன்.

காலத்திற்கு காலம் இவ்வாறான போராட்டங்களை நசுக்குவதற்கு பல்வேறு உத்திகளை சிங்கள அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

அதன் கட்டமாக கடந்த அகிம்சை ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும்போது, அதில் உள்ள முக்கிய தலைவர்கள் விலை பேசப்பட்டனர். சிலர் விலையும் போயினர். அதன் காரணமாக பல அகிம்சைப் போராட்டங்கள் செயலிழந்துபோன நிலையில், ஆயுதப் போராட்டமாக உருப்பெற்றது.

அந்த ஆயுதப் போராட்டமும் பல்வேறு துரோகங்கள் காரணமாக மௌனிக்கப்பட்ட நிலையில், அரசியல் ரீதியான போராட்டங்கள், இராஜதந்திரப் போராட்டங்களாக தமிழர்களின் போராட்டங்கள் மாற்றமடைந்துள்ளன.

தமிழர்கள் மத்தியில் உள்ள உணர்வு ரீதியான போராட்டங்களே தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தின் அத்திபாரங்களாக காணப்படும் நிலையில், அந்த உணர்வினை மேல் எழும்புவதை விரும்பாத சிங்கள அரசு பல்வேறு அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழர் அரசியல் – தமிழர் தலைவர்கள் செய்த இணக்க அரசியல் காரணமாகவும், கடந்த காலத்தில் தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட அரசியல் போட்டிகள் காரணமாகவும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வானது மங்கிச்செல்லும் நிலையினை தோற்றுவித்திருந்தது.

சிங்கள அரசினாலும் அவர்களின் கைப்பொம்மைகளினாலும் தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி என்னும் மாயையும், தொழில் வாய்ப்புகள் என்னும் மாயையும் உருவாக்கப்பட்டு தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வினை வலுவிழக்கச் செய்யும் செயற்பாடுகளை சிங்கள அரசு முன்னெடுத்து வந்தது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கினையும் சிங்கள அரசின் அபிவிருத்தி என்னும் மாயையையும் காட்டப்பட்டு தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வினை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகள் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டன.

இதன் எதிரொலியாகவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிள்ளையானும், வியாழேந்திரனும் சிங்கள அரசின் சார்பிலான உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவதற்கு கிழக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்திருந்தனர்.

இவர்கள் தமிழ் தேசியத்தின் மீது குற்றஞ் சுமத்துவதைவிட முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கினையும் அபிவிருத்தி என்னும் மாயையையும் காட்டி தொடர்ச்சியாக பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அதற்கு எதிரான பிரசாரங்கள் தமிழ் தேசிய அரசியலில் முன்னெடுக்கப்படாத நிலை காணப்பட்டதால், பெருமளவான தமிழர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர்.

தமது உணர்வுகளுக்கு அப்பால் முன்னெடுக்கப்பட்டு வந்த சிங்கள தேசியவாதத்தின் கொள்கை பரப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக தமிழர்கள் மத்தியில் புகுத்தப்பட்டதே மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு தமிழர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக தெரிவு செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தன.

சிங்கள அரசுகள் எவ்வாறுதான் தமது கொள்கைப் பரப்பினை பொய்ப் பிரசாரங்கள் மூலமாக முன்னெடுத்தாலும், அதன் முகத்திரைகள் இலகுவில் கிழித்தெறியப்படும் நிலையுருவாகியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்னும் மாயையை மாவீரர்கள் உடைத்தெறிந்துள்ளனர். கிழக்கு மாகாணம் தமிழர்கள் பூர்வீக மாகாணம் என்பதை பலமாக இந்த நாட்டுக்கு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிங்கள அரசாங்கம் கிழக்கில் தேர்தல் காலத்தில் முன்னெடுத்துவந்த பிரச்சாரங்களுக்கு நேர்மாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தமிழர் மத்தியில் மூழ்கியிருந்த அபிவிருத்தி என்னும் போலி உருவாக்கம் சிதையும் நிலையுருவாகியுள்ளது.

இந்த மண்ணின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களின் தினத்தில் அதற்கான சாவுமணியை சிங்கள அரசு அடித்துள்ளது. இன்று கிழக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் தமிழர்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளையும் தட்டிக்கேட்க முடியாத கையாலாகாத நிலையில் அபிவிருத்தி நாயகர்கள் இருக்கும்போது தமிழர்கள் மத்தியில் அவர்களுக்கு எதிரான குரல்கள் ஓங்கியொலிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கில் ஏற்பட்டுள்ள காணி அபகரிப்புகள், தொல்பொருள் செயலணிகள் குறித்து வாய்திறக்க முடியாத நிலையில், ஆளுந்தரப்பில் பவனி வரும் கிழக்கினைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கின்றது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கினை மீட்கப் போகின்றோம் என்று கூறிச் சென்றவர்களினால் கிழக்கில் இருந்து பிரித்துச் செல்லப்படும் ஒரு புல்லைக்கூட மீட்கமுடியாத வக்கற்ற நிலையில் இருப்பது தமிழர்கள் மத்தியில் பல்வேறான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்கள் மத்தியில் தெய்வங்களாக போற்றப்படும் மாவீரர்களை நினைவுகூருவதற்கும், அவர்கள் தொடர்பான நினைவினை மீட்டுவதற்கும் முற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு தமிழர்களின் உணர்வினை அடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தமிழர்களுக்கு அபிவிருத்தியும் தேவையில்லை, வேலைவாய்ப்பும் தேவையில்லை, எங்களுக்கான உணர்வே தேவையென்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது.

இதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முகப்புத்தகம் ஊடாக தமிழீழ தேசிய தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களும், மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் பலரும் கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்களாவர்.

இவ்வாறான பாதை தவறியவர்களை இந்த மாவீரர் தினம் தமிழ் தேசிய பாதையில் மீண்டும் கொண்டு வந்துள்ளது.

625.368.560.350.160.300.053.800.560.160.90 விடுதலைப் போராட்டத்தின் மையம் கிழக்கு - தென்னகன்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மத்தியில் படிப்படியாக இல்லாமல்போன தமிழ் தேசிய பாதையுடன் கூடிய உரிமைக்கான குரல்கள் மீண்டும் பலமடைய ஆரம்பித்துள்ளன.

இந்தக் குரல்கள் சரியான முறையில் வழிப்படுத்தப்பட வேண்டும். இந்த மண்ணில் ஆகுதியாகியுள்ள மாவீரர்களின் கனவுகள் மெய்பிக்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணம் தமிழ் தேசியத்தின் தூண் என்பதை கிழக்கு மக்கள் மட்டுமன்றி, வடகிழக்கில் வாழும் அனைவரும் உணர்ந்து செயற்படுவதற்கான கால சூழ்நிலையினை பயன்படுத்தி எதிர்கால முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தமிழ் தேசிய அரசியல் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமானால், கிழக்கில் தமிழ்த் தேசிய தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். இன்று கிழக்கில் தமிழர்கள் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவுள்ள நிலையில், அதனை சரியான முறையில் முன்னெடுப்பதற்கு அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஒன்றித்து பயணிக்க முன்வர வேணடும் என்பதே இன்று அனைவரது எதிர்பார்ப்பாகும்.

இலங்கையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம்

கொரோனாத்தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்களை கட்டாயத் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பொரளை மயானத்துக்கு வெளியே கிறிஸ்தவ பாதிரியார்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை அமைதி வழியில் மேற்கொண்டனர்.

அங்கிலிக்கன், கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்த பாதிரியார்களே வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,மனித உரிமை ஆர்வலர் ருகி பொ்னாண்டோ இது குறித்துக் கூறுகையில்,

“20 நாள் குழந்தை, பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக எரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இலங்கையில் கட்டாயத் தகனத்தை நிறுத்தக்கோரியும் பாதிரியார்கள் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

“கிறிஸ்தவர்களின் முதன்மையான கடமை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும் ஆகும். இதற்காகத்தான் எங்கள் கிறிஸ்தவக் கடமையைச் செய்ய இன்று காலை நாங்கள் சென்றோம்”  என்றார்.

மேலும் பேராசிரியர் மலிக் பெரேரா உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கோவிட்-19 பாதித்து இறந்தவர்களை அடக்கம் செய்வதன் மூலம் சுகாதார ஆபத்தில்லை என்று கூறியதையும் சில கிறிஸ்தவர்கள் கட்டாயத் தகனங்களை எதிர்ப்பதையும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லீம் மக்களின் சடலங்களைக் கட்டாயத் தகனம் செய்வது பேரினவாத ஒடுக்கு முறையே – பொ. ஐங்கரநேசன் கண்டனம்

முஸ்லீம் மக்களின் சடலங்களைக் கட்டாயத் தகனம் செய்வது பேரினவாத ஒடுக்கு முறையே தவிர் சுகாதார நடைமுறை அல்ல என பொ. ஐங்கரநேசன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்த முஸ்லீம் மக்களினது சடலங்களை அவர்களது மத நம்பிக்கைகளை உதாசீனம் செய்து கட்டாயத் தகனம் செய்வதும், நாட்டுக்கு வெளியே ஆளரவமற்ற தீவொன்றில் அவர்களது சடலங்களைப் புதைப்பது தொடர்பாக ஆராய்வதும் முஸ்லீம் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் பௌத்த, சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறையே தவிர சுகாதார நடைமுறை அல்ல என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முஸ்லீம் மக்களின் சடலங்களைக் கட்டாய எரியூட்டும் இலங்கை அரசாங்கத்தின் நடைமுறை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த மக்களும் தாங்கள் கடைப்பிடிக்கும் மதநம்பிக்கைகளின் அடிப்படையிலேயே தங்களின் இறுதிக் கிரியைகள் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பர். அந்த வகையில் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்ட இஸ்லாம் மார்க்கத்தை கடைப்பிடிக்கும் மக்கள் தங்களின் சடலங்கள் புதைக்கப்படுவதையே மரபாகக் கொண்டுள்ளனர்.

இஸ்லாம் மதத்தவர்கள் வால் எலும்பு என்று அழைக்கப்படும் முள்ளந்தண்டின் கடைசி எலும்பான குயிலலகு எலும்பில் இருந்தே உயிர்த்தெழல் நிகழ்வதாக நம்புகின்றனர். எரித்தால் வாலெலும்பு உடனடியாகவே சாம்பலாகி விடும் என்பதாலேயே அவர்கள் சடலத்தைப் புதைத்து வருகின்றனர்.

இந்து மதத்தவர்கள் மறு பிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள். பௌத்தர்களும் மறுபிறப்பில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். கிறிஸ்தவர்கள் இறப்பின் பின்னர் நியாயத் தீர்ப்பின் அடிப்படையிலேயே சொர்க்கமும் நரகமும் தீர்மானிக்கப்படுவதாக நம்புகிறார்கள்.

உணர்வுபூர்வமான இந்நம்பிக்கைகளை எவரும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை, பண்பாடு சார்ந்த இவ்விடயங்களை அறிவியல் ரீதியாக எவரும் ஆராய்வதில்லை. இவற்றைப் போன்றதே இஸ்லாமியர்களினது உயிர்த்தெழுதல் நம்பிக்கையுமாகும்.
முஸ்லீம் மக்களது சடலங்களை எரியூட்டுவதற்குச் சமூகத்தின் சகல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளபோதும் அரசாங்கம் தனது முடிவை மாற்றுவதாக இல்லை.

மாறாக, மாலைதீவில் மனிதக் குடியிருப்புகள் அற்ற தீவொன்றில் புதைப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவும் பௌத்த, சிங்கள பேரினவாதத்தின் ஒரு வெளிப்பாடே ஆகும். இலங்கைக் குடிமக்களாகத் தங்களை உணரும் முஸ்லீம் மக்களை இலங்கைக்கு வெளியே அடக்கம் செய்வது என்பது அவர்களை இலங்கையில் வேரிழக்கச் செய்யும் முயற்சியின் ஒரு கட்டமே ஆகும்.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களைக் கையாள்வது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் புதைப்பதை தடைசெய்வதாகக் குறிப்பிடவில்லை. எரிப்பதோ புதைப்பதோ எதுவாயினும் மக்களின் நம்பிக்கைகள் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசாங்கம் புதைத்தால் வைரசுக்கள் நீரால் பரவலடையும் என்று அறிவியலுக்கு ஒவ்வாத காரணத்தைக் காட்டி முஸ்லீம்களின் சடல விவகாரத்தைக் கையாண்டு வருகிறது.

கொரோனாவைச் சாட்டாக வைத்து முஸ்லீம் மக்கள் மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த ஒடுக்குமுறையைக் உடனடியாகவே கைவிட்டு சடலங்களை அவர்களின் விருப்பப்படியே புதைப்பதற்கு ஆவன செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2008இல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினர்: பெ.மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது இன்று வழக்கு விசாரணை

2008இல் விடுதலைப் புலகளுக்கு ஆதரவாக பேசியதாக பெ.மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை, ஈரோடு நீதிமன்றில் இன்று காலை இடம்பெற்றது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த 2008 டிசம்பர் மாதம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், நாம் தமிழர் கட்சி தலைவர் திரு. சீமான், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆகியோர் மீது அப்போதைய தி.மு.க. அரசு வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தது.

கோவை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இம்மூவரும் பின்னர் பிணையில் விடுதலை ஆனார்கள். தொடர்ந்து இவ்வழக்கு ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (17.12.2020) காலை ஈரோடு நீதிமன்றத்தில் மூவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நேர்நின்றார். நீதிபதி மணிவேல் அவர்கள் இவ்வழக்கு விசாரணையை 05.01.2021 அன்று ஒத்தி வைத்தார்.