சுதந்திரக் குறியீடு – இந்தியாவிற்கு 111ஆவது இடம்

தனிமனித, குடிமை மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் (PERSONAL,CIVIC AND ECONOMIC FREEDOM) உலகளாவிய தரவரிளையில் இந்தியா 111வது இடத்தைப் பிடித்துள்ளது. 162 நாடுகளை ஒப்பிட்டு இந்தப் பட்டியல் வெளிப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கேடோ நிறுவனம் மற்றும் கனடாவில் உள்ள ஃப்ரேசர் நிறுவனம் 2008 முதல் 2018 வரையிலான தரவுகளைப் பயன்படுத்தி “மனித சுதந்திரக் குறியீடு 2020” (HUMAN FREEDOM INDEX 2020) எனும் இந்தத் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலக அளவில், 2008முதல் தனிமனித சுதந்திரம் குறைந்து வருவது இதில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் குறியீடானது தனிமனித குடிமை மற்றும் பொருளாதார சுதந்திரத்தை குறிக்கும் 76 அளவுகோல்களை உள்ளடக்கியது என்று கேடோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில் இந்தியா 110ஆவது இடத்தைப் பிடித்தது. பொருளாதார சுதந்திரத்தில் 105ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

மொத்தமாக 10 புள்ளிகளில் இந்தியா 6.43 புள்ளினளை பெற்றுள்ளது.

இந்தத் தரவரிசையில் நியூசிலாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

“2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில், ஹாங்காங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்பாராத தலையீட்டின் காரணமாக, எதிர்காலத்தில் அப்பகுதியின் சுதந்திர மதிப்பெண் குறைய கூடும்” என்று இந்த ஆய்வை நடத்திய ஆசிரியர்கள் அனுமானிக்கிறார்கள்.

“வெனிசுலா, சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் இந்த வரிசையில் கடைசி இடங்களை பிடித்துள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தரவரிசை பட்டியலில் சீனா 129 ஆவது இடத்திலும், வங்கதேசம் 139ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 140 ஆவது இடத்திலும் உள்ளன.