415 Views
மக்களைப் பற்றி சிந்திக்க தற்போதைய அரசாங்கத்திற்கு தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்- “கொரோனா முகாமைத்துவத்தில் இந்த அரசாங்கம் தோல்வி யடைந்துள்ளது. கொரோனாவைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் கோமாளித் தனமாக நடந்து கொள்கிறது.
மேலும் துறை சார்ந்த சுகாதாரத் தரப்பினரிடம் பொறுப்பை ஒப்படைக்காமல், இனவழிப்பை மேற் கொண்ட இராணுவத்திடம் ஒப்படைத்து பொறுப்பற்ற விதமாக நடந்து கொள்கிறது” என்றார்.