வவுனியாவிற்கு 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்கிறார் திலீபன் எம்.பி

350 Views

FB IMG 1607046538819 1 1 வவுனியாவிற்கு 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்கிறார் திலீபன் எம்.பி

வவுனியாவிற்கு எதிர்வரும் வாரம் 80ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என சுகாதார அமைச்சர் தெரிவித்ததாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன்  தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டம் இடம் பெற்றது.

இதன் போது வவுனியா மாவட்டத்திற்கு 1000 தடுப்பூசிகள் தான் இதுவரை வழங்கப் பட்டுள்ளது, வட மாகாணத்தில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட மாவட்டமான வவுனியாவிற்கு அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசிகளை தாருங்கள் என்று என்னால் கேட்கப் பட்டது.

இதற்கு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி 26ம் திகதி எமது நாட்டுக்கு வர இருக்கின்ற தடுப்பூசிகளில் 80 ஆயிரம் தடுப்பூசிகளை தருவதாக உறுதி யளித்துள்ளார்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply