இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

158 Views

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில்  ஒரே நாளில் 42,909 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. மேலும் 380 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

உலகளவில் கொரோனா தொற்றால் 217,217,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,515,093 பேர் உயிரிழந்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 42,909 பேருக்கு கொரோனா தொற்ற ஏற்பட்டுள்ளதோடு 380 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

புதிய கொரோனா பாதிப்பில் பெரும்பாலானவை கேரள மாநிலத்திலேயே கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 29,836 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 75 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் இது வரையில்  3,26,95,030  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், 4,38,210 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அதே நேரம்  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 63.43 கோடியாக உள்ளது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply