அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்-  சடலங்களை அடக்கம் செய்ய 3 புதிய இடங்கள்

அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்

அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்: கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பாறையில் மேலும் மூன்று மயானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்-19 ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் இயக்குனர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள ஓட்டமாவாடி கல்லறையில் கோவிட் சடலங்கள் புதைக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் மேலும் இரண்டு ஏக்கர் நிலம் சேர்க்கப்பட்டு விரிவு படுத்தப்பட்டது.

இதுவரை 2264 கொரோனா சடலங்கள் மட்டக்களப்பில் உள்ள ஓட்டமாவாடி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளன. அங்கு புதைக்கப்பட்டவர்களில் 2070 பேர்   முஸ்லிம்கள் என்றும் மருத்துவர் அன்வர் ஹம்தானி  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிப்பதால் காட்போட்டினால் செய்யப்பட்ட பிரேதப் பெட்டிகளிற்கு பெரும் தேவை காணப்படுவதாகவும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் 100 பெட்டிகள் வேண்டும் என்றும் இந்தவகை பிரதேப் பெட்டிகளால் சூழலிற்கு பாதிப்பில்லை எனவும் தெகிவளை மவுண்ட்லவேனியாவின் மாநகரசபை உறுப்பினர் பிரியந்தசகாபந்து தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் நாளாந்தம் 400 பேர் உயிரிழக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர், மரப்பிரேதப் பெட்டிகளிற்காக நாளாந்தம் 200 மரங்கள் வெட்டப்படுவதாகவும்   இவை சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை எரியூட்ட கட்டணம்  அறவிடப்படும்  என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பூந்தோட்டம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த எரியூட்டல் செயற்பாட்டிற்கு இதுவரை கட்டணம் அறவிடப்பட்டு வந்த நிலையில்  இனி வரும் காலங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களின் சடலங்களை  எரியூட்டுவதற்கு பணம் அறவிடப்பட மாட்டாது எனவும் ஏனைய சடலங்களை எரியூட்டுவதற்கு  7000 ரூபா அறவிடப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021