சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பல்லேகம ஹேமரதன தேரரின் பதவி தற்காலிகமாக பறிப்பு

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை பல்லேகம ஹேமரதன தேரரின் தற்போதைய அட்டமஸ்தானாதிபதி என்று அழைக்கப்படும் எட்டு புண்ணிய தலங்களின் பிரதானி பதவியை தற்காலிக இடைநிறுத்தப்படுவதாக மல்வத்து மகா விகாரை இன்று (30) அறிவித்துள்ளது.

மகாநாயக்க தேரர்களினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கர் ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பல்லேகம ஹேமரதன தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் அவருக்கு எதிராக சிங்கள மக்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்புகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 8 புண்ணிய தலங்களின் பிரதானி என்ற பதவி தற்போது அவரிடம் இருந்து தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளது.