காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்  

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்: ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தை  இலங்கு வைத்து  ஏவுகணைத்  தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக   தகவல்கள்  வெளியாகியுள்ளன.

எனினும் அந்த முயற்சியை அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்து ள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த தாக்குதல் குறித்து எந்த அமைப்பும் பொறுப்புக் கூறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் அந்த நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கானியர்களை வெளியேற்ற இம் மாதம் 31ஆம் திகதி வரை தலிபான்கள் கெடு விதித்துள்ளனர்.

அந்த காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அங்கு கடந்த வாரம் வியாழக்கிழமை, ஐஎஸ்ஐஎஸ் கே என்ற தீவிரவாத அமைப்பு இரட்டை தாக்குதல்களை விமான நிலையம் அருகே நடத்தியதில் 170க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஆளில்லா வீமானத் தாக்குதல் மூலம் ஐஎஸ்ஐஎஸ் கே தீவிரவாத அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரை தாம் கொன்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021