ஆப்கானிஸ்தானில் உக்ரைன் விமானம் கடத்தல்..?

501 Views

366806 6666301 updates e1629795472112 ஆப்கானிஸ்தானில் உக்ரைன் விமானம் கடத்தல்..?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து மக்களை மீட்கச் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில்  விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானில் உள்ள உக்ரைனியர்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து மக்களை மீட்க சென்ற உக்ரைன் நாட்டு விமானம்  காபூல் விமான நிலையத்தில் இருந்து அடையாளம் தெரியாத கடத்தல் கும்பல் மூலம் துப்பாக்கி முனையில் ஈரானுக்கு கடத்தியுள்ளதாக    உக்ரைனின் துணை வெளியுறவு துறை துணை அமைச்சர் எவ்ஜெனி யெனின் தகவல் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply