ஊரடங்கு சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்தும் பணியில் காவல்துறையும்  இராணுவமும்…

431 Views

IMG 1607 ஊரடங்கு சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்தும் பணியில் காவல்துறையும்  இராணுவமும்…

தீவிரம் பெற்று வரும் கொரோனா தொற்றின் வேகத்தினை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாப்பதற்காக  முன்னெடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்தும் பணியில் காவல் துறையினரும் படைத்தரப்பினரும்   ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது.

நான்காவது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையில்  காவல் துறையினர் மற்றும் படையினர் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு  இந்த சிறப்பு  சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது தேவையற்ற வகையில் நடமாடுவோர் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கான நடடிவக்ககளை  காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply