டெல்லியில் ஆப்கானிஸ்தான் ஏதிலிகள் போராட்டம்

464 Views

235824671 1398929357146135 700004382530885856 n டெல்லியில் ஆப்கானிஸ்தான் ஏதிலிகள் போராட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஏதிலிகளாக வெளியேறி வருகின்றனர். அவ்வாறு அகதிகளாக வரும் மக்கள் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐ.நா. ஏதிலிகள் ஆணையம் முன் ஆப்கானிஸ்தான் அகதிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏதிலிகள் அடையாள அட்டை வழங்குதல், ஆப்கானிஸ்தான் மக்களை மூன்றாவது நாட்டில் (வேறு நாட்டில்) குடியமர்த்துதல், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்திய அரசு மற்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தினர்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply