ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கவே கூடாது: அதிபர் ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கவே கூடாது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, மற்ற அனைத்தையும் விட இந்த விஷயமே மிகவும் முக்கியமானது,” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலும் கூறுகையில், தான் சமீபத்தில் மிகச் சிறந்த ஒரு செய்தியைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஈரானுடனான சூழல் மேம்பட்டு வருவதாகத் தெரிவதாக அவர் கூறினார்.

அந்தச் சிறந்த செய்தி   ​​”அது குறித்து நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்; அனைத்தும் நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன். இவற்றில் பல விஷயங்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஒப்பந்தம் புதன்கிழமைக்குள் எட்டப்படாவிட்டால், ஈரானுடனான போர்நிறுத்தத்தை இரத்து செய்துவிடுவோம் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார்.