ஈரானில் பாகிஸ்தான் குடியேறிகள் கைது

64 Views

1995486 afghanrefugees 1560920696 ஈரானில் பாகிஸ்தான் குடியேறிகள் கைது

ஈரானில் பல பகுதிகளில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 180 பாகிஸ்தானிய குடியேறிகளை பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள Taftan எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஈரான் அதிகாரிகள் ஒப்படைத் திருக்கின்றனர்.

இந்த குடியேறிகள் பாகிஸ்தானிலிருந்து சட்ட விரோதமான பாதைகள் வழியாக ஈரானுக்குள் நுழைந்தவர்கள் ஆவர். இதே போல், கடந்த ஜூன் மாதம் 92 குடியேறிகளும், மே மாதத்தில் 63 குடியேறிகளும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு சட்ட விரோதமாக எல்லையை கடக்கும் குடியேறிகளின் செயல்களை தடுக்க ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply