சிறுவர் – பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லை மற்றும் மன்னாரில் போராட்டம்

112 Views

IMG 20210722 100117 சிறுவர் – பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லை மற்றும் மன்னாரில் போராட்டம்

மன்னார் மற்றும் முல்லைத்தீவில்  சிறுவர்கள் பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டன.

இதில் சிறுவர் மற்றும் பெண்கள் மீது மேற் கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது.

IMG 20210722 095706 சிறுவர் – பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லை மற்றும் மன்னாரில் போராட்டம்

“மலையக சிறுமியின் மரணம், கிளிநொச்சி பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டது போன்ற பெண்களுக்கு எதிரான கொடூர சம்பவங்களை கண்டித்தும் சம்பவத்திற்கு காரணமாக இருந்த குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply