சிறுவர் மீதான வன்முறை அதிகரிப்பு – 9 சிறுவர் நீதிமன்றங்களை அமைக்க தீர்மானம்

national child protection authority சிறுவர் மீதான வன்முறை அதிகரிப்பு - 9 சிறுவர் நீதிமன்றங்களை அமைக்க தீர்மானம்

இலங்கையில் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் ஒன்பது சிறுவர் நீதிமன்றங்களை நிறுவ தீர்மானிக்கப் பட்டுள்ளது.

அண்மைய காலமாக இலங்கையில் சிறுவர் வன்முறைகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாடு, பாலர் மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் அமைச்சு அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய சிறுவர் நீதிமன்றங்களை அமைக்கத் தீர்மானித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா தெரிவிக்கையில்,

“சிறுவர்களின் உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை விரைவு படுத்துவதே இதன் நோக்கம்.

இது தொடர்பில் நீதி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப் பட்டன. மேலும் அனைத்து மாகாணங் களுக்கும் சிறுவர் நீதிமன்றங்களை நிறுவ முடிவு செய்யப் பட்டுள்ளது. நீதிமன்றங்களை நிறுவ தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் தாமதமாகி விட்டன. தற்போது முழு நாட்டிற்கும் இரண்டு சிறுவர் நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளன.

ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய தரவுகள் சேகரிக்கும் மையங்களை நிறுவ தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் ஒன்றிணைந்து ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது”  என  மேலும் தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021