396 Views
ஏவுகணை சோதனை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இரட்டை மனநிலையில் நடந்து கொள்வதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, வடகொரியா செப்டம்பர் மாதம் முதல் ஏவுகணை சோதனைகளைச் செய்து வருகிறது.
இந்த நிலையில் வடகொரியாவின் இந்தச் செயலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத் துறை அதிகாரி ஜோ கூறும்போது, “ஏவுகணை சோதனைகளில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை மனநிலை நிலைப்பாட்டில் நடந்து கொள்கிறது. அமெரிக்காவுக்கும், அதன் கூட்டு நாடுகளுக்கும் ஒரு மாதிரியாகவும், வடகொரியாவுக்கு வேறு மாதிரியாகவும் ஐ.நா.சபை இந்த விவகாரத்தை அணுகுகிறது. இதற்கான விளைவுகளை ஐ.நா. சபை சந்திக்கும்” என்றார்.