ராஜபக்ச குடும்ப உறுப்பினர் பண மோசடியில் ஈடுபட்டது அம்பலம்

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸில் (PANDORA PAPERS) எனும் ஆவண கசிவின் வழியே அம்பலமாகியுள்ளது.    நிருபமா ராஜபக்ஸ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குடும்ப உறுப்பினர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதுடன், 2010 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பிரதி அமைச்சராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொதுவெளியில் பெரிதும் மதிக்கப்படும் உலக தலைவர்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என பலரும் இரகசியமாகவும் குறுக்கு வழிகளிலும் பணத்தையும் சொத்துகளையும் குவித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

அதன் படி ஜோர்டான் மன்னர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் என பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.

மேலும் இதில் 35 முன்னாள் மற்றும் தற்போதைய அரச தலைவர்கள் உள்ளிட்ட 300-க்கும் ​மேற்பட்ட பெயர்கள் அடங்கியுள்ளன.

சீஷெல்ஸ், ஹாங்காங், பிரித்தானியா, வர்ஜீனியா, சைப்ரஸ், பனாமா, துபாய், மொனாக்கோ, சுவிட்சர்லாந்து மற்றும் கேமன் தீவுகளில் உள்ள வங்கிகளில் இந்த வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஆறு அரசியல்வாதிகளின் இரகசிய கணக்குகள் தொடர்பிலும் பண்டோரா பேப்பர்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தொடர்புகளை பேணும் 7 அரசியல்வாதிகளின் கொடுக்கல் வாங்கல்களையும் பண்டோரா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், International Consortium of Investigative Journalists (ICIJ) இன் படி, நிருபாமா ராஜபக்ச இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது அதிகாரத்திற்கு வந்த இலங்கை ஜனாதிபதியின் உறவினர்.
அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆலோசகராகவும் ஹோட்டல் தொழில் துறையிலும் பணியாற்றியுள்ளார்என அவரது நிறுவனத்தின் இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மற்றுமொரு குடும்ப உறுப்பினர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து ரியல்எஸ்டேட் சம்பந்தமாக மோசடியில் ஈடுபட்டார் என இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளது.
நடேசனும் தற்போதைய நீதியமைச்சர் பசில்ராஜபக்சவும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.

நிருபாமாவும் நடேசனும் லண்டனிலும் சிட்னியிலும் ஆடம்பர தொடர்மாடிகளை தாங்கள் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தி செல்நிறுவனத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். நடேசன் இரகசிய நியாயாதிக்க எல்லைகளில் செல் நிறுவனங்களையும் அறக்கட்டளைகளையும் ஏற்படுத்தினார்.

அதனை பயன்படுத்தி அவர் இலங்கை அரசாங்கத்துடன் வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து இலாபகரமான ஆலோசனை ஒப்பந்தங்களையும் கலைப் படைப்புகளையும் பெற்றுக்கொண்டார்.
2018 இல் பசுபிக் கொம்பனிஸ் என்ற நிறுவனம் 31 ஓவியங்களையும் ஏனைய கலைப்படைப்புகளையும் சொத்துக்கள் வரிகளிற்கு உட்படாத மிகவும் பாதுகாப்பான சேமிப்பகமான ஜெனீவா பீரிபோர்ட்டிற்கு அனுப்பிவைத்தது.
நடேசனின் நெருங்கிய ஆலோசகர் ஒருவர் சிங்கப்பூரை சேர்ந்த கடல்கடந்தசேவை வழங்குநரான ஆசியாசிட்எ டிரஸ்டிற்கு அனுப்பிவைத்துள்ள இரகசியமான மின்னஞ்சல்களில் 2011 இல் நடேசனின் சொத்து 160 மில்லியன் டொலர்கள் என தெரிவித்துள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் என்பது என்ன?

‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்பது உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் ரகசியச் சொத்துகள் மற்றும் பரிவர்த்தனைகளை அம்பலப்படுத்தும் சுமார் 1.2 கோடி ஆவணங்களின் கசிவு.

இந்த ஆவணங்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பால் பெறப்பட்டது. தொடர்ந்து உலகின் மிகப்பெரிய புலனாய்வு தொடங்கியது.

117 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் எப்படி ரகசியமாகச் சொத்துகளைக் குவித்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

பிபிசி பனோரமா மற்றும் தி கார்டியன் ஆகியவை பிரிட்டனில் இந்தப் புலனாய்வை முன்னின்று நடத்தியிருக்கின்றன.

ilakku-weekly-epaper-150-october-03-2021