இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்தி GSLV -F 10 என்ற Rocket தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலக்கை எட்டவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Rocket வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டதாக ட்விட்டரில் பதிவிட்ட இஸ்ரோ அமைப்பு, பின்னர் அது தோல்வி யடைந்ததாக அறிவித்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து இந்த Rocket இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
EOS-3 என்ற செயற்கைக் கோளை சுமந்து சென்ற அந்த Rocket-ல், குறிப்பிட்ட வட்டப் பாதைக்குச் செல்வதற்கு முன்னரே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
Rocket-ன் கிரையோஜெனிக் நிலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த Rocket-டை ஏவுவதற்கு இஸ்ரோ இதற்கு முன் இரண்டு முறை திட்டமிட்டது. ஆனால் காலநிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.