Home Blog Page 3039

பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன கப்பல் 90 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரும்பி வந்தது

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக திரும்பி வந்துள்ளது.

1925ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) என்ற கப்பல்.

சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாகவே இந்தக் கப்பல் ஹவானாவை சென்றடைய முடியும்.

ஆனால் புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) கப்பல் காணாமல் போனது. அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை. இந்நிலையில் குறித்த கப்பல் தற்போது திரும்பி வந்துள்ளது.

ஆனால் திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

1925ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி எஸ்.எஸ் கொடபக்சி (S.S. Cotopaxi) கப்பல் சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாக செல்ல ஆரம்பித்தது.

பெர்முடாவில் இருந்து மியாமி, பின் புளோரிடாவிலிருந்து புவேர்ட்டோ, ர்க்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle).

மர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான புளோரிடாவை கடந்து தான் எஸ்.எஸ் கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்.

ஆனால் அந்தக் கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ்.கொடபக்சி காணாமல் போனது. அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை.

எஸ்.எஸ்.கொடபக்சி கப்பல் மட்டுமின்றி, இந்தக் கப்பலில் 2340 தொன் எடையுள்ள நிலக்கரியுடன் கப்டன் டபிள்யூ. ஜே. மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்தவிதமான தகவலும் இல்லை.

சமீபத்தில் கியூபா கடலோர காவல் படையினர், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதை கண்டுள்ளனர்.

அதை தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததைத் தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போது தான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்.எஸ். கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன மிகப் பெரிய கப்பலான எஸ்.எஸ். கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாய் பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது.

திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் பல அண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது என்றும் தகவல்கள் வெளியாகின.

கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் எஸ்.எஸ்.கொடபக்சி கப்டனின் லொக் புக் (Log Book) எனப்படும் குறிப்பு எழுதும் புத்தகம் கிடைத்துள்ளது. ஆனால் அதில் கடந்த 90 ஆண்டுகளாய் எஸ்.எஸ் கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

கியூபா அரசாங்கம் எஸ்.எஸ். கொடபக்சி கப்பல் காணாமல் போனது ஏன்? மற்றும் திரும்பி கிடைக்கப் பெற்றது எப்படி? என்பது பற்றிய விசாரணையைத் தொடங்கியுள்ளன.

 

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தாவைச் சந்திக்கும் துணை இராணுவக் குழுக்கள்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபயா ராஜபக்ஸவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா 19.08 அன்று சந்தித்தார்.

முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் என கருதப்படும் விடயங்களை பட்டியலிட்டு மகஜர் ஒன்றும் கோத்தபயாவிடம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் திருப்தி ஏற்பட்டதாகவும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கோத்தபயா ஆர்வம் காட்டி விருப்பம் தெரிவித்ததாகவும் இதை தான் வரவேற்பதாகவும் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எந்தவொரு ஆட்சி வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைப்பதே எமது ஆழமான இலட்சியமாகும்.

எனவே எவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆட்சி அதிகாரத்தில் உட்காரப் போகின்ற கோத்தபயா ராஜபக்ஸவை எதுவித அரசியல் பலமுமின்றி அந்த அரசியல் பலத்தை மக்கள் இனிவரும் காலத்தில் வழங்குவர் என்ற நம்பிக்கையோடு எமது நல்லிணக்க உறவுகளோடு மட்டும் கோத்தபயா ராஜபக்ஸவுடன் பரஸ்பரம் உரையாடியிருந்தோம்.

இலங்கைத் தீவின் சகல இன மக்களும் ஏற்றுக் கொண்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி, அதை மேலும் பலப்படுத்தி செல்வதால், எமது தேசத்தின் அபிவிருத்தி மேலும் சிறந்து விளங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸ மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (19.08) அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனிடையே, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸ மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் போர்க் குற்றத்தில் கோத்தபயா மட்டும் ஈடுபடவில்லை. போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறி வருகின்றது.

ஆனால் ஏதோ கோத்தபயா மட்டும் தான் போர்க் குற்றத்தில் ஈடபட்டதாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான குற்றச்சாட்டேயாகும்.

எனவே தமிழ் மக்கள் இவற்றை மறந்து மன்னித்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் வரதராஜப்பெருமாளும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகும் தமிழர்

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி தொடக்கம் செயற்படும்படியாக பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெறுகின்றார்.

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி லெஸ்டர் பல்கலைக்கழகம் 167 ஆம் இடத்தில் உள்ளது. பிரித்தானியாவில் 25 ஆம் இடத்தில் உள்ளது.

பேராசிரியர் கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகிக் கல்வியைப் பெற்றவர் ஆவர்.

1966 இல் சுண்டிக்குளியில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தந்தை கனகராஜா யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் தாய் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் இருந்தவர்கள் ஆவர்.

லெஸ்ரர் பல்கலைக்கழக இணையத்தளத்தைப் பார்வையிட…
https://le.ac.uk/n…/2019/august/20-new-vice-chancellor-named

இதேவேளை சென் ஜோன்ஸ் கல்லூரியில் 1985 ஆம் ஆண்டின் உயர்தரப் பிரிவில் கற்ற பேராசிரியர் றமா திருநாமச்சந்திரன் பிரித்தானியாவின் Canterbury Christ Church University இல் துணைவேந்தராக உள்ளார் என்பதுவும் குறி்ப்பிடத்தக்கது.

கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது.

விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

– 30-08-2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை, Dundas Square சதுக்கத்தில் துண்டுப்பிரசுர விழப்பு பரப்புரை செய்யப்படவுள்ளன.

– பின்னர் மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை, Milliken Mills Community Centre, North Hall, 7600 Kennedy Rd, (between Denison and 14th Ave) Markham, ON L3R 9S5 இடத்தில் கருத்தாடல் நிகழ்வு ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.

– மறுநாள் 31-08-2019 சனிகிழமையன்று Markham – Steels சந்தியில் விழிப்பு பரப்புரை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தமிழர் தாயகத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. கனடா உட்பட அமெரிக்கா பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் என பல்வேறு புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்துள்ளது.

உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் சிறிலங்கா இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியை வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கனடாவில் முன்னெடுக்கப்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் விழிப்பு நிகழ்வுகளில் அனைவரையும் பங்கெடுத்து நீதியினை வென்றடைய அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் :http://youarenotforgotten.org/

தொடர்புகளுக்கு: +1 (647) 783-3466

+1 (416) 766-9544

+1(647) 262-5587

+1416-830-4305

சவேந்திர சில்வாவின் நியமனம் நீதி விசாரணைகளை பாதிக்கும் – கனடா

சிறீலங்கா அரசு லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் என கனடா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கனேடியத் தூதரகம் இன்று (20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சில்வாவின் நியமனம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிப்பதுடன் சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவேண்டிய நீதி விசாரணைகளையும் பாதிக்கும். எனவே கனடா அரசு ஆழ்ந்த கவலையடைந்துள்ளது.

சில்வா மீது மனித உரிமை மீறல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. போரின் போது அவர் பெருமளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை சிறீலங்கா மீறியுள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமனம் செய்தது தமக்கு மிகப்பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நியமனமானது ஐக்கிய நாடுகள் சiயின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சிறீலங்கா வழங்கிய உறுதிமொழி குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. போர்க்குற்ற நீதி விசாரணைகளை மேற்கொள்வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கு சிறீலங்கா உடன்பட்டிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசேல் பசெலட் தெரிவித்த கருத்தையே ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளது. அதாவது சில்வா மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளதாக பசெலட் தெரிவித்திருந்தார்.

இந்த நியமனமானது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிப்பதுடன், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தவறான செய்திகளை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

மகனை தேடியலைந்த தந்தையொருவர் உயிரிழந்தார்

வவுனியாவில் தனது 26வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டம் மேற்கொண்ட தந்தை ஒருவர் நேற்று இரவு சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று‌ அதிகாலை உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தமது மகனைத் தேடி சுழற்சி முறையிலான தொடர்போராட்டம் இன்றுடன் 913 ஆவது நாளை எட்டியுள்ளது இந்நிலையில் தனது மகன் அச்சுதன் வயது 26 கடந்த 2009ஆம் ஆண்டு ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரிடம் கையை உயர்த்தி ஒப்படைக்கப்பட்ட தனது மகனை மீட்கும் போராட்டத்தில் இணைந்திருந்த வேலாயுதம் செல்வராசா 56வயது மகிழங்குளம் ஓமந்தை இடத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு நேற்று இரவு 10மணியளவில் வைத்தியசாலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக‌ அனுமதிக்கப்பட்டிருந்தவர் இன்று உயிரிழந்துள்ளார். இவருடைய மனைவி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதேவேளை வவுனியா போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இவருடன் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு மாவட்டத்தில் போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகள் இன்றுவரையிலும் 39பேர் தமது பிள்ளைகளைத் தேடிய போராட்டத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமையின் நிலை என்ன? – அமெரிக்கா பதில்

தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்தபோதும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதிவில் அது குறிப்பிடப்படவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தமது பதிவேடுகள் ஒரு சில மாதங்களுக்கு முன்னைய தகவல்களையே கொண்டிருக்கும் என சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (19) கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது ஆவணங்கள் ஒரு சில மாதங்களின் முன் உள்ள தகவல்களைக் கொண்டதாகவே வெளியிடப்படும், எனவே புதிய தகவல்கள் எதிர்வரும் ஆவணங்களில் காணப்படும்.

குடியுரிமையை துறப்பதற்கு சில வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், அதனை கைவிடுவது சாத்தியமானதே. ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரின் தகவல் தொடர்பில் என்னால் பதிலளிக்க முடியாது. அது எமது நாட்டின் சட்டங்களுக்கு முரனானது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமனம் பெற்றது கவலைதரும் விடயம், இது எமது நாட்டின் நிலைப்பாடு. ஆனால் ஒரு நாட்டிற்கு ஆணையிடுவதற்கும், கவலை தெரிவிப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அமெரிக்காவின் அரசியல் மற்றும் முடிவுகளை பகிர்ந்துகொள்வதே எனது கடமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்தாவிடம் யப்பானும் நட்புக்கரம் நீட்டுகின்றது

யப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகள் நிர்வாகசபையின் உறுப்பினருமான யாசூசி அகாசி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் சிறீலங்கா அரச தலைவருமான மகிந்தா ராஜபக்சாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று (19) இடம்பெற்ற இந்த சந்திப்பை முன்னாள் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் ஒழுங்குபடுத்தியிருந்தார். இந்த சந்திப்பில் கேகலிய றம்புக்வெல மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் கர்சா விஜயவர்த்தனா ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

மகிந்தாவின் சகோதரர் கோத்தபாய அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து மேற்குலகின் இராஜதந்திரிகள் மகிந்தாவை தொடர்ச்சியாக சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான உடன்படிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு உலகநாடுகளால் இழைக்கப்பட்ட அநீதிகளில் அகாசி முக்கிய பங்கு வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவ தளபதி நியமனம் தொடர்பில் நெருக்கடி – ஊடக சந்திப்பை நிறுத்தியது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பாக இன்று நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அனைத்துலக சமூகமும் உள்ளூர் செயற் பாட்டாளர்களும், அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா இராணு வத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு வரும் 29, 30ஆம் நாள்களில், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற வுள்ளது,இந்தக் கருத்தரங்கு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை அடுத்து, உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் இந்த நியமனம் குறித்து கவலை வெளியிட்டுள்ள நிலையில், இன்றைய ஊடக சந்திப்பை சிறிலங்கா இராணுவம் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.