Home Blog Page 3040

விமானப்படை  அதிகாரி பலி; பரசூட்டில் இருந்து குதித்த போது சம்பவம்

சிறிலங்கா இராணுவ சிறப்புப் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர், பரசூட்டில் இருந்து குதித்த போது, நிலத்தில் வீழ்ந்து மரணமானார்.

அம்பாறை சிறிலங்கா விமானப்படைத் தளத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா விமானப்படை விமானத்தில் இருந்து, பரசூட் மூலம் குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே, எதிர்பாராத விதமாக நிலத்தில் வீழ்ந்து மரணமானார்.

சுமார் 7000 அடி உயரத்தில் இருந்து குதித்த வொரன்ட் ஒவ்பிசரின், பரசூட் சரியாக விரியாததால், அவர் நிலத்தில் வீ்ழ்ந்தாக, தகவல்கள் தெரிவிக் கின்றன.

 

அமெரிக்கவின்  நிகழ்ச்சிநிரல் படியே தாக்குதல் நடைபெற்றது.விமல் வீரவன்ச

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஹொக்கந்தர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

தற்கொலைதாரி சஹ்ரான் திடீரென உருவாகியமைக்கு என்ன காரணம்? அவருக்கு அதுவரை எந்தவொரு கோரிக்கையும் இருக்கவில்லை. தாக்குதலு க்கான உரிமையை ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஏற்ற போதிலும் அவர்கள் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

சஹ்ரான் போன்ற தீவிரவாதிகள் 2015 ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்காக வேலை செய்தனர். சஹ்ரான் உள்ளிட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர செயற்பட்டதாக சாய்ந்த மருது மக்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கூறினர்.

2017 ஆம் ஆண்டில் குண்டு தயாரிப்பிற்கான பொருட்களை நாட்டுக்கு கொண்டு வந்ததுடன் அப்போது அவர்களுக்கு எதிராக பொலிஸார் செயற்படவில்லை, அவசர தருணங்களில் ஆட்சியை காப்பாற்றும் சக்தியாக சஹ்ரானை பாவித் தனர்.

சஹ்ரான் பின்னால் மேற்குலக நாடுகள் இருந்தன. அவர்களே ரணில் விக்ரமசிங்க என்ற பொம்மையை பிரதமராக்கினர். அவர்கள் அதனூடாக நாட்டை கைப்பற்ற முனைகின்றனர். நாட்டில் உள்ள பல இடங்களை கையகப் படுத்தும் நோக்கில் அமெரிக்கா விசேட காணிச்சட்டத்தை கொண்டுவர உதவியதாகவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

 

ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது

ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தின் அமெரிக்கா குறித்த கற்கை நிலையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆசியாவில் அமெரிக்கா மாத்திரம் தற்போது  வலிமையான சக்தியில்லை  என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அறிக்கை சீனாவின் ஏவுகணைகளால் ஓரிரு மணித்தியலாங்களில் அமெரிக்காவின் தளங்களை  அழிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

இந்தோபசுவிக்கிற்கான அமெரிக்காவின்  பாதுகாப்பு தந்திரோபாயம் கடும் குழப்பநிலையிலுள்ளது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சீனாவிடமிருந்து தனது சகாக்களை பாதுகாப்பதில் நெருக்கடியை சந்திக்கலாம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் சக நாடுகளான அவுஸ்திரேலியா ஜப்பான் போன்றவை தங்கள் படையணிகளை மீள கட்டியெழுப்பவேண்டும் , அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்தவேண்டும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அதன் சகாக்களைவ விட சீனா ஏவுகணை விடயத்தில் மிகவும் பலம் பொருந்தியதாக மாறி வருகின்றது என  குறிப்பிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பற் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த சேவையை மீள ஆரம்பித்த போதும், அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் நிறுத்தப்பட்டிருந்தது,

எனினும் இதனை மீள நடைமுறைப்படுத்தப்படுத்துவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி போன்று பொருட்களின் பரிமாற்றத்திற்கும் அத்தியவசியமானதாக அமையும். அத்துடன் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தி அடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுடன் நேரிடையான தொடர்புகளை மேற்கொள்வதற்கு அண்மைக்காலமாக இந்தியா முயன்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய திட்டங்கள் சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கடும் கண்டனம்

சிறிலங்கா இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக்கூடும் என்று கடும் கண்டனம்   தெரிவித்துள்ளார்.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பசெலெட் இன்று அறிக்கை ஒன்றை வெளியி ட்டுள்ளார்.

“போரின் போது, அவரும், அவரது படைகளும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதான தீவிரமான குற்றச் சாட்டுகள் இருந்தபோதிலும், லெப். ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து நான் மிகவும் குழப்ப மடைந்துள்ளேன்.

இவர் முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டது, கவலை தரும் நிலைமை என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், 2019 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தார்.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

அவரது படைப்பிரிவு, அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக, ஐ.நா விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட் டப்பட்டுள்ளது.

நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் போது, சிறிலங்கா அளித்த வாக்குறுதிகள் விடயத்தில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத் தை ஏற்படுத்தும்

இது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன், குறிப்பாக, பாதிக்கப் பட்டவர்களையும், போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும், மிக மோசமாக பாதிக்கும்.இது பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.அத்துடன், ஐ.நா அமைதிகாப்பு முயற்சிகளில் சிறிலங்கா தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

இத் தேர்தல் சிங்கள தேசத்துக்கான தேர்தலாக இருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தின் மீது திணிக்கப்படுகின்ற ஒன்றாகவே இத் தேர்தல் காணப்படுகின்றது

சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை மட்டும் நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை. இனப்படுகொலைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசினையே(state) நாம் பார்க்கின்றோம். இனப்படுகொலை அரசின் முகமாக ஆட்சிபுரிந்தவர்கள் அனைவருமே இனப்படுகொலையாளிகளாக உள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத்தீவில் சிறிலங்கா அதிபருக்கான தேர்தல் களம் பரப்பரப் படைந்துள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பியபோது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கான தேர்தல் என்பது சிங்கள தேசத்துக்கான தேர்தலாகவே இருக்கின்றது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தின் மீது திணிக்கப்படுகின்ற ஒன்றாகவே இத் தேர்தல் காணப்படுகின்றது. இப்பார்வைநிலையில் தான் தமிழர் தேசத்தின் இறைமையினை வென்றடைவதற்கான தந்திரோபாயங்களின் அடிப்படையில் சிறிலங்காவின் ஒவ்வொரு தேர்தல்களையும் நாம் அணுகி வருகின்றோம்.

உடனடி சலுகை அரசியலுக்கு அகப்பட்டு முடிவுகளை எடுக்காமல், நீண்ட காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு நன்மை தருகின்ற முடிவுகளை நோக்கியே நமது நிலைப்பாடுகள் அமைகின்றன எனவும் இவ் விடையத்தில் இறுதி நிலைப்பாட்டினை உரிய நேரத்தில் எமது அரசவை விவாதித்து முடிவெடுக்கும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இராணுவ தளபதியின் நியமனம் சுமந்திரனுக்கும் கவலையாம்

போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் வெளியிட் டுள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழர்களை அவமதிப்பதாகும்.இது எங்களுக்கு அதிர்ச்சியை தருகிறது என்றுள்ளது.

சவீந்திர சில்வா மீது பயணத்தடை வேண்டும் – அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான நடவடிக்கை அமைப்பு

சிறீலங்கா அரசு சில்வாவின் நியமனத்தை நிறுத்த வேண்டும் இல்லை எனில் சிறீலங்காவின் கூட்டணி நாடுகள் சில்வாவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடைகளை ஏற்படுத்த வேண்டும்.அவருக்கு நுளைவு அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும் என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான நடவடிக்கை அமைப்பு இன்று (19) வெளியிட்டுள்ள அதன்அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா அவர்கள் லெப். ஜெனரல் சவீந்திர சில்வாவை சிறீலங்கா இராணுவத் தளபதியாக நியமனம் செய்தது என்பது சிறீலங்காவின் பெயரை அதிகளவில் களங்கப்படுத்தும் செயல். இது அவர்மீதுள்ள போர்க்குற்றச் சாட்டுக்கள்மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் நிலையை இல்லாது செய்துவிடும்.

கடந்த ஜனவரி மாதம் நாம் 137 பக்க ஆவணம் ஒன்றை அவருக்கு எதிராக வெளியிட்டிருந்தோம் அதில் அவர் செய்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளன. அதில் உள்ளசான்றுகள் அவரைத் தண்டிக்கப் போதுமானவை.

ஆனால் சிறீலங்கா அரசு அதனை மதிக்காது அவருக்கு பதவி உயர்வு வழங்கியிருந்தது.

2009 ஆம் ஆண்டுமனித உரிமைகளை மதிக்காது பல நூறு தமிழ் மக்களை இராணுவத்தாக்குதல் மூலம் சில்வா படுகொலை செய்திருந்ததாக அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமானநடவடிக்கை அமைப்பின் பணிப்பாளர்ஜஸ்மின் சூக்கா தெரிவித்திருந்தார்.

1980 களில் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஜே.வி.பி கலவரத்தின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் அன்றைய கஜபா படையணியின் தளபதியுமான கோத்தபாயா ராஜபக்சாவின் கீழ்பணியாற்றிய சவீந்திர சில்வா ஏராளமான சிங்கள இளைஞர்களை படுகொலை செய்திருந்தார்.

ஆனால் அவர் தண்டிக்கப்படவில்லை.ஆனால் இவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் சிறீலங்காவில் படுகொலைக் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கும் என ஜஸ்மின் மேலும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த நியமனம் சிறீலங்காஇராணுவத்திற்கும் அமெரிக்கபடையினருக்கும் இடையில் உள்ள பயிற்சி நடவடிக்கைகளை பாதிப்பதுடன் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் தகமையையும் சிறீலங்கா இழக்கும்.

சிறீலங்கா அரசு சில்வாவின் நியமனத்தை நிறுத்த வேண்டும் இல்லை எனில் சிறீலங்காவின் கூட்டணி நாடுகள் சில்வாவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடைகளை ஏற்படுத்த வேண்டும்.அவருக்கு நுளைவு அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிறிலங்கா இராணுவத்தினரால் கைது

கிளிநொச்சி-பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே சிறிலங்கா இராணுவத்தினர் இவரை இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன், பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மருத்துவர் சின்னையா சிவரூபன் (வயது – 41) சாவகச் சேரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவேந்திர சில்வா நியமனம் – அமெரிக்கா ஆழ்ந்த கவலை

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப் பட்டுள்ளது குறித்து, ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவையாகும்.இந்த நியமனம் சிறிலங்காவின் அனைத்துலக நற்பெயர் மற்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது” என்று கூறப்பட்டுள்ளது.