ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது

ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தின் அமெரிக்கா குறித்த கற்கை நிலையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆசியாவில் அமெரிக்கா மாத்திரம் தற்போது  வலிமையான சக்தியில்லை  என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அறிக்கை சீனாவின் ஏவுகணைகளால் ஓரிரு மணித்தியலாங்களில் அமெரிக்காவின் தளங்களை  அழிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

இந்தோபசுவிக்கிற்கான அமெரிக்காவின்  பாதுகாப்பு தந்திரோபாயம் கடும் குழப்பநிலையிலுள்ளது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சீனாவிடமிருந்து தனது சகாக்களை பாதுகாப்பதில் நெருக்கடியை சந்திக்கலாம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் சக நாடுகளான அவுஸ்திரேலியா ஜப்பான் போன்றவை தங்கள் படையணிகளை மீள கட்டியெழுப்பவேண்டும் , அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்தவேண்டும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அதன் சகாக்களைவ விட சீனா ஏவுகணை விடயத்தில் மிகவும் பலம் பொருந்தியதாக மாறி வருகின்றது என  குறிப்பிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.