மகிந்தாவிடம் யப்பானும் நட்புக்கரம் நீட்டுகின்றது

யப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகள் நிர்வாகசபையின் உறுப்பினருமான யாசூசி அகாசி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் சிறீலங்கா அரச தலைவருமான மகிந்தா ராஜபக்சாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று (19) இடம்பெற்ற இந்த சந்திப்பை முன்னாள் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் ஒழுங்குபடுத்தியிருந்தார். இந்த சந்திப்பில் கேகலிய றம்புக்வெல மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் கர்சா விஜயவர்த்தனா ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

மகிந்தாவின் சகோதரர் கோத்தபாய அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து மேற்குலகின் இராஜதந்திரிகள் மகிந்தாவை தொடர்ச்சியாக சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான உடன்படிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு உலகநாடுகளால் இழைக்கப்பட்ட அநீதிகளில் அகாசி முக்கிய பங்கு வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.