Home Blog Page 2789

சிறிலங்கா படையினருக்கு சீனாவில் பயிற்சிகள்

சீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர், சிறப்புப் பயிற்சிக்காக அடுத்தவாரம் சீன, தலைநகர் பீஜிங்கிற்கு செல்லவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு, அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பாதுகாப்பு விவாகரங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.MS03202017C 1 சிறிலங்கா படையினருக்கு சீனாவில் பயிற்சிகள்

அதற்கிணங்க, பாதுகாப்பு தொடர்பில் இரண்டு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பிலான பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் கடந்த 14 ஆம் திகதி, இரண்டு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.

அதற்கமைய இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர் அடுத்தவாரம் சீனாவுக்கு சென்று விசேட பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும், சீனாவின் திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை கொண்டதாக இந்தப் பயிற்சிகள் அமைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சீன தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஆற்றலைக் கட்டியெழுப்பும் உதவிகளையும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கருவிகளையும் இதன்போது சீனா வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இலங்கை இராணுவத்தினரின் முதல் தொகுதியினருக்கான பயிற்சித் திட்டம் அடுத்தவாரம் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு, சீனா தமது இராணுவத்தினரை இலங்கைக்குள் அனுப்பாது என்றும் அதற்குப் பதிலாக இலங்கை இராணுவத்தினரின் ஆற்றலை கட்டியெழுப்பவுள்ளோம் எனவும் குறித்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போரா 12 வகை துப்பாக்கியை ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் மீகஹதென்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) இரவு 8.35 மணி அளவில் மீகஹதென்ன பொலிஸ் பிரிவுக்கு ட்பட்ட பெலவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப் பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முச்சக்கரவண்டி வரை சோதனையிட்டபோது வெளிநாட்டு துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான 4 தோட்டாக்களுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஜப்பானில் கத்திக்குத்து இரு மாணவர்கள் பலி,16 பேர் காயம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பாடசாலை மாணவியொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இதன்போது குறைந்தது 16 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில், அவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாணவர்கள் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பின்னர், தாக்குதல்தாரி தன்னைத்தானே குத்திக்கொண்டதில் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜப்பானில் மிகக்குறைந்தளவிலேயே இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதுடன், தாக்குதல்தாரியின் நோக்கம் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்

தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள்.

தமிழகத்திலிருந்து வருகை தந்த இந்து மக்கள் கட்சி மற்றும் பாரதீய ஜனதா  கட்சி நிர்வாகிகள் யாழ்ப்பாணம் சங்கிலி மன்னனின் 400 ஆவது ஆண்டு  விழாக் குழு விடுத்த அழைப் பின் பெயரில் இலங்கைக்கு பயணம் மேற்கொண் டவர்கள் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு (26)நேற்று  முல்லைத்தீவு மாவட்ட த்திற்கு சென்று பல இடங்களை பார்வையிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களான அருண் உபாதெயாய, தீட்சாக்கௌசிக் ,தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத்,மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏழு பேர் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

Arjun முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்

நேற்று (26) மாலை இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியுள்ளதுடன் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண் டுள்ளார்கள்.

 

இன நல்லிணக்கத்திற்கெதிரான ஹிஸ்புல்லா, ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைப்பு – மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்

இன நல்லிணக்கத்திற்கெதிரான ஹிஸ்புல்லா, ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைப்பு – மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்

கிழக்கு மாகாண ஆளுநர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரின் பதவிகள் பறிக்கப்படு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கக்கிழமை மட்டக்களப்பு தாமரக்கேணியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இன நல்லூறவை பாதிக்கும் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களையும், தரவுகளையும் சேகரித்து மட்டக்களப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையதித்துள்ளோம். அதனடிப்படையில் இவரின் குற்றங்கள் சரியான முறையில் விசாரணை செய்யப்பட்டு அதற்கான தண்டனைகளை வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

குடந்த காலங்களில் தமிழ் – முஸ்ஸிம் மக்களிடையே இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ள காரணத்தினால், இவருடைய ஆட்சி நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றுவதற்கு உத்தியோகத்தர்கள் விரும்பவில்லை. அத்துடன் மக்களும் இவரின் சேவையை புறக்கனிக்கின்றனர்.

பலதடவைகள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்திய போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையையும் இவர் மீது அரசாங்கம் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் முஸ்ஸிம் மக்கள் தமது நல்லூறவை பேணுவதற்கு இவரின் செயற்பாடுகள் அமையவில்லை. இவரைப் போன்ற இழிவான அரசியல் வாதிகள், ஒட்டுமொத்த தமிழ் முஸ்ஸிம் மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்த ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோடியின் வியூகத்தை பின்பற்றி தேர்தலில் வெற்றிபெற ஐ.தே.க முயற்சி

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூகத்தை பின்பற்றி வெற்றிபெறுவதற்கு ஐ.தே.க முயற்சிப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாண யக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“பிரதமர் மோடி இந்து, முஸ்லிம் மக்களை பிளவுபடுத்தியே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் மோடியின் ஆட்சியில் தொழிலற்றவர்களின் வீதம் அதிகரித்து காணப் பட்டதுடன் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். ஆனாலும் அவர் வெற்றியடைந்துள்ளார்.

இதற்கு காரணம் செல்வந்தர்களின் செல்வாக்கு மற்றும் இந்து, முஸ்லிம் மக்களிடத்தில் காணப்பட்ட பிளவே ஆகும்.

அந்தவகையில் தற்போது, பிரதமர் மோடியின் வழிமுறையை பின்பற்ற ஐ.தே.க.வும் முனைகின்றது. அதாவது சிங்கள, முஸ்லிம் மக்களிடத்தில் முரண் பாட்டை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபத்தை பெற்றுகொள்ள முயற்சிக்கின்றது.

ஆகையால் இத்தகைய செயற்பாட்டுக்கு எதிராக பொதுஜன பெரமுன மக்களை அணிதிரட்ட வேண்டும்” என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைமை நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு – வியாழேந்திரன் வெளிநடப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவிகிதமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழுவில் இணைத்தலைவராக ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் (திங்கட்கிழமை) காலை ஆரம்பமான நிலையில், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு மாறாக இணைத்தலைவர் நியமனம் நடைபெறுவதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வியாழேந்திரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

சமூக வலைத்தளங்களில் பழைய நிகழ்வுகள் சமகால சம்பவம் போல் சித்தரிக்கப்படுகின்றன – சிறிலங்கா காவல்துறை

இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது, மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விடயத்தில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு 100 மில்லியன் ரூபா தேசிய காப்புறுதி திட்டம்

தேசிய காப்புறுதி நிதியம், நாட்டிற்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கான தேசிய காப்புறுதி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து சிறீலங்கா ஒரு பாதுகாப்பு அற்ற நாடு என்ற தோற்றம் அனைத்துலக மட்டத்தில் ஏற்பட்டுள்ளதுடன் பல நாடுகள் பயண எச்சரிக்கைகளையும் தமது மக்களுக்கு விடுத்துள்ளன.

இதனால் சிறீலங்காவின் பிரதான வருமானத் துறையான சுற்றுலாத்துறை கடும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை தடுப்பதற்கு ஏதுவாக சிறீலங்கா அரசு தற்போது காப்புறுதி என்ற கவர்ச்சியான திட்டத்தை அறிவித்துள்ளது.

 

 

 

 

பொது இடங்களில் யூதர்கள் குல்லா அணிவதை தவிர்க்க ஜேர்மனிய ஆணையாளர் வேண்டுகோள்

யூதர்கள் பொது இடங்களில் தங்களுக்குரிய “கிப்பா“ எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என்று அன்ரி செமிடிசிசம் ஆணையாளர் ஃபெலிக்ஸ் க்லைன் கேட்டுக் கொண்டுள்ளார்.

யூதர்களுக்கு எதிரான குற்றங்கள், சம்பவங்கள் ஜேர்மனியில் அதிகரித்து வருவதையடுத்து, இவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இது ஜேர்மனியில் யூதர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுவதாக இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் கூறியுள்ளார்.