இன நல்லிணக்கத்திற்கெதிரான ஹிஸ்புல்லா, ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைப்பு – மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்

இன நல்லிணக்கத்திற்கெதிரான ஹிஸ்புல்லா, ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைப்பு – மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்

கிழக்கு மாகாண ஆளுநர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரின் பதவிகள் பறிக்கப்படு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கக்கிழமை மட்டக்களப்பு தாமரக்கேணியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இன நல்லூறவை பாதிக்கும் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களையும், தரவுகளையும் சேகரித்து மட்டக்களப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையதித்துள்ளோம். அதனடிப்படையில் இவரின் குற்றங்கள் சரியான முறையில் விசாரணை செய்யப்பட்டு அதற்கான தண்டனைகளை வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

குடந்த காலங்களில் தமிழ் – முஸ்ஸிம் மக்களிடையே இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ள காரணத்தினால், இவருடைய ஆட்சி நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றுவதற்கு உத்தியோகத்தர்கள் விரும்பவில்லை. அத்துடன் மக்களும் இவரின் சேவையை புறக்கனிக்கின்றனர்.

பலதடவைகள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்திய போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையையும் இவர் மீது அரசாங்கம் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் முஸ்ஸிம் மக்கள் தமது நல்லூறவை பேணுவதற்கு இவரின் செயற்பாடுகள் அமையவில்லை. இவரைப் போன்ற இழிவான அரசியல் வாதிகள், ஒட்டுமொத்த தமிழ் முஸ்ஸிம் மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்த ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.