Home Blog Page 2788

அவுஸ்திரேலிய தூதுவர் – சம்பந்தன் சந்திப்பு

சிறிலங்காவிற்கான அவுஸ்திரேலியத் தூதுவர் டேவிட் ஹோலிக்கும். தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (28) பிற்பகலே இச்சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது என்ன விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன என்று தெரிவிக்கப்படவில்லை.

எவரெஸ்ட் மலையில் அதிக மக்கள் கூட்டம்

உலகம் முழுவதும் மக்களிடையே மலையேற்றம் மேற்கொள்வது பிரபலமடைந்து வருவதால், சமீப காலமாக எவரெஸ்டிலும் கூட்டம் நிறைந்திருப்பதாக அறிய முடிகின்றது.

மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா எடுத்துள்ள புகைப்படத்தில் காணப்படும் கூட்டம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. இப்புகைப்படம் எவரெஸ்ட்டை அடைவதற்கு மலையேற்ற வீரர்கள் சந்திக்கும் சவால்களை காட்டுகின்றது.

மலையேற்றம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பான பருவம் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்திற்கு மலையில் கூட்டம் அதிகம் காணப்படாது. ஆனால் அந்த குறிப்பிட்ட பருவம் முடிவடைவதற்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் போது அதிகமான கூட்டம் இருக்கும், ஏனெனில் பலர் ஒன்றாக சேர்ந்து மலையேற்றம் செய்யும் வகையில் திட்டமிடுவதாலேயே இவ்வாறான நெரிசல் ஏற்படுகின்றது.

1992ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 7 தடவைகள் எவரெஸ் உச்சியை அடைந்த டுஜிமோவிட்ஸ் தெரிவிக்கையில், இவ்வாறு நெரிசல் இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

ஏறும் போது உள்ள ஆபத்தை விட இறங்கும் போது இவர்கள் பிராணவாயு பற்றாமையை எதிர்நோக்குகின்றனர். இதனால் இவர்கள் பாதிக்கப்படுவதாக அவர் கூறுகின்றார்.

 

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை தேவையா? – ஆராய்வதற்கு சிறப்புக் குழு

1991ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்தையடுத்து, இந்தக் கொலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு வந்தது.

இந்தத் தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை நீடிக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைவாக, இந்த ஆண்டும் விடுதலைப் புலிகளை தடை செய்யும் உத்தரவை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதே வேளை இந்தத் தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு அவசியம் உள்ளதா என்பது பற்றி ஆராய்வதற்கு இந்திய மத்திய அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையிலான குழுவினர் இத்தடை குறித்து ஆராய உள்ளனர்.

 

 

 

 

 

 

கன்னியா வெந்நீர் ஊற்றையும் பறிகொடுக்க முடியாது என்கிறார் ஆனந்தன் எம்.பி

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு சின்னங்களை கையகப்படுத்துவதை சிங்களப் பேரினவாதம் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே கன்னியாவிலும் தமிழர் ஒருவருக்கு சொந்தமான பூர்வீக பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான  சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மன்னன் இராவணனால், கன்னியா வெந்நீர் ஊற்று அமைக்கப்பட்டது என்ற  வரலாற்றுப் பதிவுகளின்படி அப்பகுதி தமிழர்களின் பாரம்பரியத்துடன் இரண்டறக்கலந்த மிக முக்கியமான பிரதேசமாக கொள்ளப்பட்டு வருகின்றது.

வராலாற்று சிறப்பு மிக்க இப்பகுதியை திட்டமிட்டு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடையாளமாக மாற்றுவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தின் ஆசியுடன்  முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது இது ஒருபோதும் நாட்டின் நல்லிணக்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுக்காது என்பதை ஆட்சியாளர்களளும் அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையோரும் உணர்ந்து கொள்வது அவசியம். எந்தெவொரு மத்த்திற்கும் எந்தவொரு மதவாதிக்கும் ஏனைய மதங்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கும் அந்த மத சின்னங்களை அழிப்பதற்கும் அதிகாராம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். குறிப்பாக, இந்த வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களால் இப்பகுதியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்வருகின்றன.

இவைகளை தடுத்து நிறுத்துவதற்கு அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்பட்டு வருகின்றபோதிலும்;, அதற்கு நிரந்தர தீர்வுகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது கண்டனத்திற்குரியதாகும். இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்களும் இன்று ஆட்சியில் இருப்பவர்களும் தமிழ் மக்களின் மீது சிங்கள பேரினவாதம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முற்பட்டதே இந்த நாடு கடந்த முப்பது ஆண்டுகளாக மிகப்பெரிய அவலங்களுக்கும் சீர்கேடுகளுக்கும் காரணம் என்பதை ஏற்று கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதை உளமார உணர்ந்தவர்களாக ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தென்படவி;ல்லை. இந் நிலை மாற்றபடவேண்டும்.

இந்நிலையில் தற்போது, குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு அப்பகுதியை கையகப்படுத்தப்படும் செயற்பாடொன்று முழு மூச்சில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களும் தொல்பொருள் திணைக்களமும்  காணியின் உரிமையாளரும் பிள்ளையார் ஆலய அறங்காவலருமான திருமதி.க.கோகிலறமணியிடம் இருந்து அக்காணியை பறிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.22பேர்ச் அளவுடைய இக்காணியை கோகிலறமணியின் பேரனுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் இக்காணியை கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்களே தேரர்கள் முன்னெடுத்திருந்தனர். எனினும்  உரிமையாளரான கோகிலறமணி அதற்கு சம்மதித்திருக்கவில்லை.

இந்நிலையில், அக் காணியைக் கையகப்படுத்துவதற்கு முனையும் தேரர்களின் செயற்பாட்டிற்கு  இசைவாக, அரசாங்கமும் வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருக்கின்றது. இதன்மூலம் வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தமயமாக்கலை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு துணைபோகின்றது என்பது உறுதியாகின்றது.

வடக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்கள, பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான முறையான செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அதேநேரம் அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கும் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என அடையாளம் காட்டி வரும் கூட்டமைப்பில் உள்ள தற்போதைய பிரதிநிதிகளும் தயாராக இல்லை.
ஆரம்பத்தில் தமிழர்களுக்கு தீர்வினைத்தரும் புதிய அரசியலமைப்பு வருகின்றது ஆகவே அரசாங்கத்தினை எதிர்க்க கூடாது என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருந்து வந்தது. தற்போது அரசாங்கம் தமிழ் மக்கள் சார்ந்து எதனையும் செய்வதாக இல்லை என்று நன்கறிந்த பின்னரும் அதே நிலைமையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

தற்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோட்டையான திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய பகுதிகள் எல்லாம் சிங்கள பௌத்தமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. அதில் சைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க கின்னியா பகுதியும் பறிபோகும் அபாயத்தில் இருக்கின்றது.இதேபான்று முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் நீதி மன்ற தீர்ப்பையும் மீறி புத்த சிலையும் கண்காணிப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் சிங்கள பொளத்த ஆக்கிரமிப்புக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு, இன நல்லிணக்கம் இவற்றை தற்போதைய ஆட்சியாளர்களிடத்திலிருந்தும் எதிர்பார்க்க முடியாதுள்ளது என்பது வெளிபடையாகிவிட்ட நிலையில், ஆகக்குறைந்தது தமிழர்களின் இருப்பினையாவது பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. அந்த வகையில் தனியாருக்குச் சொந்தமான கின்னியா பாரம்பரியப்பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக விரைந்து செயற்பட வேண்டியுள்ளது. இல்லாது விட்டால் தமிழர்களின் வரலாறு செறிந்த திருமலை மாவட்டம்  பறிபோய் தமிழர்கள் அநாதைகளாகும் நிலைமையே ஏற்படும் ஆபத்துள்ளது.

இனியும் அமைதியாக இருப்பதன் ஊடாக அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதிக்க விளைகின்றார்கள் என்ற கேள்வியே இங்கு எழுகின்றது.

ஜப்பான் 105 போர்விமானங்களை கொள்வனவு செய்கிறது

அமெரிக்காவிடம் இருந்து F35 ரகத்தின் 105 போர் விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய டிரம்ப், தங்களிடம் இருந்து F35 ரகத்தின் 105 போர் விமானங்களை ஜப்பான் வாங்க உள்ளதாக தெரிவித்தார்.

இவற்றை வாங்கும் பட்சத்தில், F-35 ரக போர் விமானங்களை அதிக எண்ணிக்கையில் வைத்திருக்கும் அமெரிக்க நட்பு நாடாக ஜப்பான் இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார். இவ்விமானங்களைக் கொள்வனவு 10 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் கூறப்படுகிறது.

அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும் – கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்

தமிழர்களின் நீண்டகால அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழர்களை அரசாங்கம் ஏமாற்றக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் மற்றும் வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் குறித்த விடயத்தில் அரசாங்கம் எமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியளித்ததன் பிரகாரம் அரசியல் தீர்வும் அதனுடன் கூடிய அபிவிருத்தியும் சமநிலையில் பயணிக்க வேண்டும். வடக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது, ஆனால் வெறுமனே அபிவிருத்தியைக் காட்டி எமது மக்களின் நீண்டகால அரசியல் தீர்வைப் பின்தள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

சமத்துவம் வேண்டி சத்தியாகிரகப் போராட்டம்

வறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆலய முன்றலில் இன்று 28 செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணியளவில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முப்பது வருடங்கள் வரை திருவிழா இடம்பெறாதிருந்த இவ் ஆலயத்தில், கடந்த வருட தேர் திருவிழாவின்போது, பக்தர்கள் எவரும் வடம் பிடிக்க அனுமதிக்கப்படாது JCB இயந்திரம் கொண்டு தேர் இழுக்கப்பட்டமை அனைவரும் அறிந்தது.Varani சமத்துவம் வேண்டி சத்தியாகிரகப் போராட்டம்

இந்நிலையில் இவ்வருட திருவிழாவை நடத்தாது ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த ஆலய உபயகாரர்களும், அடியவர்களும் இணைந்து கடந்தவாரம் போராட்டங்களைத் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டிருந்தனர்.

இதில் அம் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையில், அவர்கள் தமது போராட்டத்தைத் தொடர் சத்தியாக்கிரகமாக ஆலயச் சூழலில் இன்று ஆரம்பித்துள்ளனர்

இப் போராட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு , சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு உபயகாரர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்திய புலனாய்வுப் பிரிவு இலங்கைக்கு வருகை

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகளில் இணைந்துகொள்வதற்கு இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பிற்கு இந்தியாவின் உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையிலேயே இந்திய உள்துறை அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது

குண்டுவெடிப்புகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தங்களிடம் உள்ள தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கு இலங்கை அதிகாரிகள் இணங்கியுள்ளதை தொடர்ந்தே இந்திய உள்துறை அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது என இந்த விவகாரத்துடன் தொடர்புள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைசி மோடி என்ற அதிகாரியின் தலைமையில் இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பை சேர்ந்த குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளார்.

இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களிற்கு இலங்கை குண்டுவெடிப்புகளுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்வார்கள்.

இலங்கையில் குண்டு தாக்குதல்களை வழிநடத்தியவர்களிற்கும் இந்தியர்களிற்கும் இடையில் சில பொதுவான தொடர்புகள் உள்ளமை தெரியவந்துள்ளது என இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் இதனை உறுதி செய்வதற்காக காத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அதிகாரிகளால் கடந்த மாதம் கேரளாவில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் தான் இலங்கை தற்கொலைகுண்டுதாரிகளின் தலைவன் என கருதப்படும் ஜர்கான் ஹாசிமை தான் பின்பற்றிவந்ததாகவும் அவர் போன்ற தாக்குதலொன்றை முன்னெடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பி;ட்டிருந்தார்.

ஜஹ்ரான் தென்னிந்தியாவில் சில இளைஞர்களை தீவிரவாதமயப்படுத்தியிருந்தார் எனவும் அவர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇந்தியா தன்னிடமுள்ள அனைத்து விபரங்களையும் இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளும் என குறிப்பிட்டுள்ள இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர்அமைப்பின் அதிகாரிகள் மடிக்கணிணிகளை ஆராய்ந்தவேளை கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனியல் ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் இந்தியா பகிர்ந்துகொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர்

இராணுவ உடன்படிக்கை இறைமையைப் பாதிக்காது சிறிலங்காவின் அமெரிக்க தூதுவர்

முன்மொழியப்பட்டுள்ள “சோபா’ எனப்படும் படைகளின் நிலை உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப் லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

“சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையயழுத்திடுவதற்கு முன் மொழியப்பட்டுள்ள சோபா உடன்பாடு, இராணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களுடனேயே தொடர்பு டையது. இதனால் இலங்கையின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற் படாது.

இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படவில்லை. இரண்டு நாடுகளும் கலந்துரையாடல்களை நடத்தி வரு கின்றன. இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்தால், அது இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையே இரா ணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு நடக் கும் முறை தொடர்பாக உடன்பாட்டின் உட்பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகள் சிறிலங்காவுக்கு வருகை தருவது தொடர்பாக, சிறிலங்கா அரசு மற்றும் இராணுவத்துடன் கலந்து ரையாடப்படும்.

1995 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் செய்து கொண்ட உடன்பாடு தற்போது காலாவதி ஆகிவிட்டது. அது நவீன காலத்துக்கு ஏற்ப திருத்தப்பட வேண்டியுள்ளது.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், வெளிப்படையாகக் கலந்துரையாடி இணக்கம் காணப்படும். உடன்பாடு விடயத்தில் இரு தரப்புகளுக்கும் சரியான புரிதல் இருந்தால், பிரச்சினைகளைக் குறைக்க முடியும். வெளிப்டைத்தன்மையுடன் உடன் பாட்டை எட்ட முடியும் என்று இரண்டு நாடுகளின் அரசுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன், நெருங்கிய ஒத்துழைப்பைக் கட்டியய ழுப்புவது உள்ளிட்ட பல்வேறு உடன் பாடுகளை செய்திருக்கிறது.இந்த உடன்பாடுகள் ஒருபோதும் அந்த நாடுகளின் இறைமைக்கு அச் சுறுத்தலாகவோ தலையீடுகளைச் செய்வதாகவோ இருந்ததில்லை.

இலங்கை, அமெரிக்க ஆயுதப் படைகளுக்கிடையில் வேறுபாடுகள் உள் ளன. இலங்கைப் படைகளின் செயற் பாடுகள் ஒரு தனி நாட்டுக்குள்ளேயே வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்கப் படைகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன.

 

வீரகேசரி செய்தியாளர் மீது முல்லைத்தீவு காவல்துறை தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பில் செய்தி அறிக்கையிட சென்றிருந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்.முல்லைதீவினை சேர்ந்த குமணன் எனும் ஊடகவியலாளரே முல்லைதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.

அங்கு விகாரதிபதியால் அத்துமீறி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்ற நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.அங்கு ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்ள் மட்டும் பொருத்தப்பட்டுள்ள இரகசிய கண்காணிப்பு கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் இன்று உத்தரவிட்டிருந்தார்.

இலங்கை காவல்துறையினர் இன்று கண்காணிப்பு கமராவை அகற்றவும் பெயர் பலகையினை பொருத்தவும் முற்பட்டமை தொடர்பாக அறிக்கையிட சென்றிருந்த போதே வீரகேசரி பத்திரிகை செய்தியாளரான குமணன் தாக்கப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டுமுள்ளார்.

அதன் பின்னராக அங்கு வந்திருந்த கொக்கிளாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி தூசணத்தினால் திட்டி தாக்கியதாக தெரியவருகின்றது.

குமணனால் வீரகேசரி பத்திரிகையில் அறிக்கையிடப்பட்ட செய்தியின் அடிப்படையிலேயே இன்று ஆலய அறங்காவலர் சபையினால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டிருந்தது.

வடமாகாண ரீதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான அறிக்கையிடலில் குமணன் முதலாமிட பரிசை தட்டிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.