Home Blog Page 2381

ஈராக்கில் 3 தளங்களில் இருந்து அமெரிக்கா வெளியேற்றம்

ஈராக்கின் இராணுவத் தளங்களிலிருந்து எதிர்வரும் வாரங்களில் அமெரிக்க இராணுவத்தினர் வௌியேறவுள்ளனர்.

Al-Qaim இராணுவத்தளம் உள்ளிட்ட 3 தளங்களிலிருந்து அவர்கள் வௌியேறவுள்ளனர்.

ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் 8 தளங்களின் 3 தளங்களிலிருந்து வௌியேறும் இந்த நடவடிக்கையானது, அந்தநாட்டிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைக்கும் சமிக்ஞையாக நோக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் மற்றும் ஈராக்கிய அரசாங்கத்துடனான பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே அமெரிக்க இராணுவத்தின் இந்த வௌியேறுகை அமைந்துள்ளது.

தேர்தலை பிற்போடுங்கள்;தேரர் வேண்டுகோள்

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுதும் பரவும் கொரோனா வைரஸால் மக்கள் பாரிய அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இந்த கொரோனா கொடுமை,பெரும் கொடை என அரசாங்கம் நினைக்கிறது – மனோ

அரசாங்கம் கொரோனா கொடுமையை பயன்படுத்தி, எதிர்கட்சிகளை வீட்டுக்குள் முடக்கி வைத்து விட்டு, தேர்தலை நடத்தி அரசியல் இலாபம் பெற முயல்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் இரகசிய திட்டம் இதுவாகும். நாளுக்கு நாள் அரசாங்கத்தின் செல்வாக்கும், சொல்வாக்கும் நாட்டுக்குள் படு வீழ்ச்சியை நோக்கி செல்வதால், அரசாங்கமும், அதன் இரகசிய நண்பர்களும் கொரோனா கொடுமைக்குள்ளேயும் தேர்தலை நடத்த முனைகிறார்கள்.

இன்றைய நிலைமையில் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டால், இலட்சக்கணக்கான மக்கள் மிகப்பெரும் சுகாதார ஆபத்துகளை எதிர்நோக்க வேண்டி வரும். ஆகவே தேர்தலை பின் போட்டு விட்டு, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து, நாட்டை காக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, தமிழ் முற்போக்கு கூட்டனி கோருகிறது என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி தனது டுவீட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், அரசியல் இலாபம் பெரும் நோக்கில் செயற்பட வேண்டாம் என, “தேசிய வீரர்கள்” என்று கூறி பதவிக்கு வந்த இந்த பிற்போக்கு அரசாங்கத்துக்கு நாம் கூறிவைக்க விரும்புகிறோம்.

சில தனியார் மற்றும் அரசாங்க தொலைகாட்சிகளை பயன்படுத்தி, தமது அணியினரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வைப்பது. அதேவேளை எதிரணியினரை கொரோனா ஆபத்தை காட்டி வீட்டுக்குள் முடக்கி வைப்பது. இதுதான் இந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் திட்டம்.

ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள்ளேயே, பசுத்தோல் போர்த்திய நரியான இந்த அரசாங்கத்தின் சாயம் வெளுத்து உண்மை சொரூபம் தெரிய ஆரம்பித்து விட்டது. வாக்களித்த சிங்கள மக்களே இன்று அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவர்கள், செய்தவைகள் என்று எதுவும் சொல்லிக்கொள்ள கிடையாது. எமது ஆட்சியின் மக்கள் நல திட்டங்களை நிறுத்தியதுதான், இந்த அரசாங்கம் செய்த ஒரே வேலை.

எனவே இன்று இந்த கொரோனா கொடுமை, தனக்கு கிடைத்த பெரும் கொடை என இந்த அரசாங்கம் நினைக்கிறது. இதை பயன்படுத்தி, மக்களுக்கு உண்மையை எடுத்து கூறி இந்த அரசாங்கத்தின் உண்மை சொரூபத்தை மேலும் எடுத்து கூறும் சந்தர்ப்பத்தை, எதிர்கட்சிகளுக்கு வழங்காமல் இருக்க அரசாங்கம் விரும்புகிறது. கொரோனா மூலம் எதிர்கட்சிகளை வீட்டுக்குள் முடக்க அரசு நினைக்கிறது. அதன் பின் உடனடியாக தேர்தலை நடத்தவே அரசாங்கம் விரும்புகிறது.

இந்த இரகசிய அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி வைத்து விட்டு, உடனடியாக தேர்தலை பின் போட்டு, கொரோனா கொடுமையில் இருந்து, நாட்டை காக்க, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று சிந்திக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாம் கோருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

170 பேர் தனிமைப்படுத்தலை தவிர்த்துள்ளனர்

இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வந்த 170 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை தவிர்த்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பரவும் கொரோனா வைரஸ்! தென்னிலங்கையில் குவிந்த வெளிநாட்டவர்களால் குழப்பம்

தென்னிலங்கையில் குவிந்த பெருமளவு வெளிநாட்டவர்களால் மக்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலி கோட்டையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காண முடிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணிகள் எனத் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் குறித்து பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சுற்றுலா பயணிகள் எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நடமாடுவது குறித்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரவமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச திணைக்களங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை

சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை அடிப்படையாகக்கொண்ட இந்த விடுமுறை நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் கொழும்பில் இருந்து வேட்பாளர்களை நிறுத்துவதாக குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உட்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தினை மாத்திரமே அடிப்படையாக கொண்டு செயற்படுவதுடன் வன்னி தொகுதியை புறந்தள்ளி கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதியில் நிறுத்தியுள்ளதாக அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வன்னி தேர்தல் தொகுதியில் வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு எனக்கு மத்தியகுழுவால் வழங்கப்பட்டது. அருந்தவபாலனும் அதற்கு உடன்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் பலருடன் கதைத்தபோதும் யாரும் கட்சியில் இணைந்து போட்டியிட முன்வரவில்லை.

எனினும் நான் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நல்ல வேட்பாளர்களை தெரிவு செய்திருந்தேன். அதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்திலும் சந்திரகுமார் கண்ணனை வேட்பாளராக தெரிவு செய்த போது வன்னியின் முதன்மை வேட்பாளர் மற்றும் எமது கூட்டின் செயலாளர் என்ற வகையில் சிவசக்தி ஆனந்தனுடனும் உரையாடியிருந்தேன்.

அவர் சிறந்த ஒருவரை தெரிவு செய்துள்ளீர்கள் அழைத்து வாருங்கள் என தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் நான் அவருக்கு வேட்பாளராக போட்டியிடுவதற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தேன்.

எனினும் இன்று வெளியில் நடமாட முடியாத வகையில் தமிழ் மக்கள் கூட்டணியினர் செய்துவிட்டனர். கண்ணன் என்பவரை தெருவில் நான் விட்டுவிட்டதாக மற்றவர் கூறும் அளவிற்கு நடந்து விட்டனர். எனினும் நான் விக்னேஸ்வரனை மதிக்கின்றேன்.

எனினும் அவருடன் கூட இருப்பவர்கள் சிலர் தாங்கள் தான் விக்னேஸ்வரனின் கட்சிக்கு அடுத்த தலைவர் என்ற நிலையில் கனவு கண்டு செயற்பட்டு வருகின்றனர்.

அக்கட்சியில் மத்தியகுழு என்பது போலியாக உள்ளதே தவிர அங்கு எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லை. இந்நிலையில் நான் தொடர்ந்தும் தமிழ் மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்க விரும்பவில்லை.

இதன் காரணமாக வவுனியா மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்தும் உறுப்புறுமையில் இருந்தும் விலகிக்கொள்கின்றேன்.

அதுமாத்திரமின்றி எமது அரசியல் நிலைப்பாடுகள் இவ்வாறுதான் செல்கின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிகராக மாற்றுத்தலைமையாக உருவாக எண்ணியவர்களும் அந்த சிந்தனையுடன் சென்றவர்களும் இவ்வாறான நிலையில் காணப்படுகின்றமையை எண்ணி வெட்கப்படுகின்றேன்.

எமது அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரே விதமானவர்களாகவே இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்து தலைமையை எண்ணி நாம் செல்வது மடமைத்தனம். கிழக்கு மாகாணம் போல் வன்னியிலும் ஒரு தலைமை உருவாகுமாக இருந்தால் அதில் இணைந்து பயணிப்பேன்.

விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் நிகழ்வு நடந்தபோது வவுனியாவில் இருந்து 13 பேரூந்துகளில் மக்களை கொண்டு சென்றிருந்தோம். அன்று நாம் அவர்களை கொண்டு சென்றிருக்காவிட்டால் சொற்பமானவர்களே இருந்திருப்பார்கள். நாம் மக்களை கொண்டு சென்றமையினாலேயே அங்கு மக்கள் திரளாக காணப்பட்டது.

எழுக தமிழ் நிகழ்வு நடந்ததன் பின்னர் இடம்பெற்ற விருந்துபசாரத்திற்கு சென்றபோது அங்கு யாழ்ப்பாணத்தை தவிர வேறு ஒரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அந்த பேரவையில் இருக்கவில்லை.

அப்போதே நான் அவர்களிடம் கேட்டேன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவை சேர்ந்த ஒருவரும் இல்லாத நிலை காணப்படுகின்றது ஏன் அங்கு தமிழர்கள் இல்லையா என கேட்டேன். இவ்வாறான நிலைதான் அந்த கட்சிக்குள் காணப்படுகின்றது.

விக்னேஸ்வரனும் ஏனைய நான்கு மாவட்டங்கள் தொடர்பில் சிந்திப்பதற்கு தயாராக இல்லை. வன்னியில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றக்கூடிய நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ள போதிலும் கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட வைத்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியானது இன்று ஒரு ஆசனத்தினைகூட பெற முடியாத அளவிற்கு உள்ளாகியுள்ளது என தெரிவித்தார்.<

தமிழ் மக்கள் கூட்டணியில் இருந்து விலகவுள்ள எஸ்.சிறிதரன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணியினர் வன்னித் தொகுதிக்கு வன்னியை சேர்ந்தவர்களை நியமிக்காது, கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதிக்கு நியமித்துள்ளனர் இந்த நிலையை அடுத்து தான் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

இன்று(16) மாலை வவுனியாவில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினரின் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. பலருடன் பேசியும் எவரும் கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்வரவில்லை. இருந்தும் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு சென்று நல்ல வேட்பாளர்களை தெரிவு செய்திருந்தேன்.

வவுனியா மாவட்டத்தில் சந்திரகுமார் கண்ணனை தெரிவு செய்து, எமது கூட்டமைப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தனுக்கு தகவல் அளித்தேன். அவரும் சிறந்த ஒரு தெரிவு எனக்கூறி அழைத்து வரும்படி கூறினார். இதனால் அவருக்கு தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பான உத்தரவாதத்தையும் நான் வழங்கியிருந்தேன்.

ஆனால் இன்று கொழும்பிலுள்ள ஒருவரை வன்னி தேர்தல் தொகுதிக்கு நியமித்துள்ளனர். இதனால் கண்ணனை நான் கைவிட்டதாக மற்றவர்கள் கூறும் அளவிற்கு உள்ளது. விக்னேஸ்வரனை நான் மதிக்கின்றேன். அவருடன் செயற்படும் சிலரின் செயலால் மத்திய குழு போலியாக உள்ளது போல் இருக்கின்றது.

இந்நிலையில் நான் தொடர்ந்தும் தமிழ் மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்க விரும்பவில்லை. இதன் காரணமாக வவுனியா மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்கின்றேன்.

எமது அரசியல் நிலைப்பாடுகள் ஒரே மாததிரியானவையாகவே காணப்படுகின்றன. அத்துடன்அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரே விதமானவர்களாகவே இருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்து தலைமையை எண்ணி நாம் செல்வது சாத்தியமில்லை. கிழக்கு மாகாணம் போல வன்னியிலும் ஒரு தலைமை உருவாகுமாக இருந்தால் அதில் இணைந்து பயணிப்பேன்.

விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்விற்கு 13 பேருந்துகளில் வன்னியிலிருந்து மக்களை அழைத்துச் சென்றிருந்தோம். நிகழ்வின் பின்னர் நடைபெற்ற விருந்துபசாரத்திலும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர எவரும் கலந்து கொள்ளவில்லை. விக்னேஸ்வரன் ஏனைய நான்கு மாவட்டங்கள் தொடர்பாக சிந்திப்பதற்கு தயாராக இல்லை.

வன்னியில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றக்கூடிய நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்த போதும், கொழும்பிலிருந்து வேட்பாளரை நியமித்தமையானது, தமிழ் மக்கள் கூட்டணி வன்னித் தேர்தல் தொகுதியில் ஒரு ஆசனத்தைக்கூட கைப்பற்ற முடியாத நிலைக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

நீதிமன்றங்களினதும் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை ஏப்ரல் மாதம் 1 ஆம் வாரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவசர வழக்குகள் மாத்திரம் விசாரணைக்கு எடுத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எமது பாரம்பரிய நிலத்தை நாம் ஏன் இழக்க வேண்டும்?தமது நிலங்களுக்காக போராடும் தமிழ் பெண்கள்

பாடசாலை ஆசிரியையான சந்திரலீலா ஜெசிந்தனின் குடும்பம் போரின் இறுதி நாட்களில் வீட்டில் இருந்து சிறீலங்கா படையிரால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அதன் பின்னர் கடந்த பத்து வருடமாக அவர்களின் நிலத்தில் சிறீலங்கா படையினர் தங்கியுள்ளனர்.

கடந்த 3 வருடங்களாக திருமதி ஜெசிந்தனுடன் இணைந்து பல டசின் பெண்கள் கேப்பாபிலவில் உள்ள தமது பாரம்பரிய நிலங்களை மீட்பதற்கான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிறீலங்காவின் வரலாற்றில் இது மிக நீண்ட போராட்டமாகும்.

இந்த போராட்டத்தில் பங்கெடுக்க ஆண்களுக்கு விரும்பம் இருந்தாலும் படையினரின் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.  ஆனால் நாங்கள் பெண்கள் இது எமது நிலம், அதுவே எங்களின் பாதுகாப்பு, இது எங்களின் உரிமை எனவே நாம் அதற்காக போராடாது விட்டால் யார் போராடுவார்கள் என 43 வயதான திருமதி ஜெசிந்தன் தெரிவித்துள்ளார்.

நாம் போரில் எல்லாவற்றையும் இழந்து விட்டோம், ஏன் நாம் பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தையும் இழக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிறீலங்காவில் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்ற போரில் பல பத்தாயிரம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

பல மக்கள் தமது நிலங்களை மீளப் பெற்ற போதும், கேப்பாபிலவில் உள்ள 350 ஏக்கர் நிலம் தற்போதும் படையினர் வசம் உள்ளதாக நில உரிமைக்கான மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் காணிகள் அனைத்தும் மீண்டும் ஒப்படைக்கப்படும் என சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அதனை நிறைவேற்றவில்லை.434734f2ddf8461cb909a6343295a4ca 18 எமது பாரம்பரிய நிலத்தை நாம் ஏன் இழக்க வேண்டும்?தமது நிலங்களுக்காக போராடும் தமிழ் பெண்கள்

85 விகிதமான நிலங்களை கையளித்துள்ளதாகவும், மீதமுள்ள நிலங்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு போரின் போது தனது நிலத்தில் இருந்து வெளியேறிய செல்லம்மா சிங்கரட்ணம்(87) நிலத்தை மீட்பதற்காக உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று வருடங்கள் இடம் பெயர்ந்தோர் முகாமில் இருந்த பின்னர் அவரின் குடும்பம் வீட்டுக்கு திரும்பிய போது அவரினதும், அவரின் மகளினதும் வீடுகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தன.

போராட்டத்தின் பின்னர் இராணுவம் வீட்டை கையளிக்க முன்வந்தது, ஆனால் அவரின் வீடு பலத்த சேதமடைந்துள்ளது. வீட்டை திருத்துவதற்கு எம்மிடம் பணமில்லை என தனது வீட்டுக்கு வெளியில் அமர்திருந்தவாறு அவர் தெரிவித்தார்.

சிறீலங்காவில் காணப்படும் ஊழல்கள், இயங்காத நீதித்துறை, வெளிப்படையற்ற தன்மை, பொறுப்புக் கூறலற்ற தன்மை என்பன நில உரிமையாளர்களின் நிலையை மோசமாக்கி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போரின் போது சிறுபான்மை தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் இருந்து பல தடவைகள் துரத்தப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் நிலங்களைக் கைப்பற்றிய படையினர் அங்கு முகாம்களையும், உயர் பாதுகாப்பு வலையங்களையும் அமைத்து அதனை மீண்டும் வழங்க மறுக்கின்றனர்.c0578d466e08450490c61d9cd03dda36 18 எமது பாரம்பரிய நிலத்தை நாம் ஏன் இழக்க வேண்டும்?தமது நிலங்களுக்காக போராடும் தமிழ் பெண்கள்

காணிகள் வழங்கப்பட்டாலும் அதனை துப்பரவு செய்வதற்கான உதவிகள் வழங்கப்படுவதில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2018ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சில நிலங்களை படையினர் விவசாயத்திற்கும், சுற்றுலாத் துறைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். போரின் போது பல பத்தாயிரம் தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்களை மீளக்குடியமர்த்தும் பணிகளை ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு 2011 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தது. அதன் பயனாக 8,529 மக்கள் மீண்டும் திரும்பியதாக அதன் வதிவிடப் பிரதிநிதி மெனிக் அமரசிங்கா தெரிவித்துள்ளார்.

மேலும் 100,000 தமிழ் மக்கள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். ஆனால் திரும்பியவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு காணிகள் இல்லை. 30,000 தமிழ் மக்கள் தற்போதும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் தான் வாழ்கின்றனர். அவர்கள் தமது வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள்.

நிலங்களை கையகப்படுத்துவது அமைதியை உருவாக்காது, அது வன்முறையானது. மக்களின் உரிமைகளை வழங்க வேண்டும், அவர்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டும் என கொழும்பைத் தளமாகக் கொண்ட மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.

நிலமே சிறீலங்காவில் உள்ள மக்களின் சொத்தும், அடையாளமும் என மையத்தின் ஆய்வாளர் பவானி பொன்சேகா தெரிவித்துள்ளார். நிலங்களை மீள ஒப்படைப்பதே நீண்ட காலத்தில் அமைதியை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துளார்.

நாடு திரும்பும் மக்களுக்கு சிறிய அளவிலான நிலங்களை வழங்குவதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்யுள்ளது.

1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 100 தமிழ் மக்கள் கடந்த ஆண்டு இரணைதீவில் மீண்டும் குடியேறியுள்ளனர். இதுவரை காலமும் அவர்கள் அங்கு மீன்பிடிப்பதற்கும் தேங்காய்கள் பறிப்பதற்குமே சென்று வந்தனர். 2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் அவர்கள் அங்கு சென்ற போதும், கேந்திர முக்கியத்துவமான பகுதி எனக் கூறி சிறீலங்கா கடற்படையினர் அவர்களை அனுமதிக்கவில்லை.a89f330c25bc478b9d266ee324372036 18 எமது பாரம்பரிய நிலத்தை நாம் ஏன் இழக்க வேண்டும்?தமது நிலங்களுக்காக போராடும் தமிழ் பெண்கள்

பெருமளவான மனுக்கள் சமர்ப்பித்து, பெண்கள் குறிப்பாக கணவரை இழந்த பெண்கள் தமது வாழ்வாதாரமே இந்த நிலம் தான் என தெரிவித்து 2018ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒரு வருட போராட்டத்தின் பின்னரே தமது நிலங்களை மீண்டும் பெற்றுள்ளனர். அங்குள்ள கத்தோலிக்க தேவாலயம் அதற்கான உதவிகளை வழங்கியிருந்தது. எனினும் கடற்படையினர் சிறிய அளவிலான நிலப்பகுதியை தற்போதும் தம்வசம் வைத்துள்ளனர்.

ஆனாலும் அதனையும் மீட்பதற்காக தாம் போராடி வருவதாக போராட்டத்தை வழிநடத்தும் மரியா ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

ஆனால் கேப்பாபிலவில் போராட்டம் மேற்கொண்டு வரும் திருமதி ஜெசிந்தனை சிறீலங்கா படையினர் பல தடவைகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரின் கணவர் இறந்த மறுநாளும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தனக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாகவும், தனது வீட்டில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கணவரை இழந்த நான் இராணுவத்தை எதிர்த்து போராடுவது கடினமானது, ஆனால் எமக்கு இந்த நிலம் மட்டுமே உள்ளது. எனவே அதனை பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி: அல்ஜசீரா