உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் நேற்று 11பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவால் நேற்று இரவு 10.30 வரை எடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி, வெளியிடப்பட்ட அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 10 ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்கு உட்படாமல் தலைமறைவாகியோருப்போருக்கு அரசாங்கம் இறுதிஎச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகையோர் தொற்று நோய்ப் பரிசோதனைக்குட்படாமலும் தம்மைப் பதிவு செய்யா
மலும் இருந்தால் அவர்கள் தொற்று நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்து சோதனைக்குட்படாது இருப்பவர்கள் இன்று
நள்ளிரவு 12 மணிக்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது வைத்தியசாலையில் தம்மைப்பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் நிச்சயமாக 14 நாள்கள் கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்று அதிக அபாய மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகியன இனங்காணப்பட்டுள்ளன. ஆகவே மறு அறிவித்தல்வரை குறித்த பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
இது குறிதது ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொவிட் 19 கொரோனா வைரஸ் பரவலை கவனத்திற் கொள்ளும் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மிகவும் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ளன.
இம் மூன்று மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட வேலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் கடைகளில் அதிகளவு ஒன்றுகூடியிருந்தமை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பாரிய இடையூறாகும் என சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
எனவே எதிர் வரும் காலங்களில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. சதொச, கீல்ஸ், லாப்ஸ், ஆபிகோ, புட் சிடி, அரலிய, நிபுண மற்றும் ஏனைய மொத்த விற்பனை நிலையங்கள் இப்பணிக்காக இணைத்துக்கொள்ளப்படும்.
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக பசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் செயலணி ஒன்று தாபிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் குறித்த வேறு அதிகாரிகள் இச்செயலணியின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.
இதற்குப் பின்னர் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், எரிவாயு, ஏனைய சேவைகளை தடையின்றியும் தொடர்ச்சியாகவும் மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை (25) முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
லொறி, வேன், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கில் உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதற்கு பயன்படுத்திகொள்ளும் அனைத்து வழங்கள் வாகனங்களுக்கும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வீதிகளில் பயணம் செய்ய அனுமதி உள்ளது.
ஈழத்து தமிழ் அரசியல் என்பதை இன்றைய அரசியல் செயல்பாட்டு சூழலுடன் மட்டும் ஒப்பிட்டு நோக்க முடியாது. இதனை கடந்தகால அரசியல் சூழலுடன் இணைத்தே சிந்திக்க வேண்டும். உலகத்திலுள்ள பல நாடுகள் குறுகிய காலத்துள் சனநாயக முறையில் அல்லது வேறு ஆட்சியமைப்பு வகையில் தம்மை வலுவான நாடுகளாக கட்டியெழுப்பியுள்ளன.
இதனால் ஈழத்திலிருந்து தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர், முஸ்லிம்கள் கூட ஏனைய முன்னேறிய நாடுகளுக்கு படையெடுக்கின்றார்கள். இலங்கையில் அரசியல் செய்பவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு கடைசி காலத்தில் தொடர்ந்து தங்களது அரசியலை செய்கின்றார்கள் என்று சொல்லலாம். இதற்கு காரணம் வெளிநாடுகளில் வசதியாக வாழலாம் என்பதால் என்று மட்டும் சொல்ல முடியாது. நிம்மதியாக வாழலாம் என்ற கருத்தும் இருக்கலாம்.
இந்த நிலை இலங்கை அரசியல்வாதிகளுக்கு சாதகமான நிலையை தோற்றுவிக்கின்றது என்று உறுதியாக கூறலாம். அதாவது குறித்த தொகுதியினர் மட்டுமே இன்று அரசியல் செய்கின்றார்கள். அவர்களை மீறி புதியவர்கள் அரசியலுக்குள் புகுவது முடியாத காரியம் என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அதற்கும் மேலாக அரசியல் என்பது குறிப்பிட்ட மக்களின் பிள்ளைகள், சொந்தக்காரர்கள் தவிர ஏனையோருக்கு ஆபத்தானாது என்றும் ஒருநிலை உண்டு.
அத்துடன் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எதனையும் துணிந்து சொல்லும் எண்ணமும் அரசியல்வாதிகளிடம் குடிகொண்டு விட்டது. இதனை வைத்து பார்க்கும் போது தனிப்பட்ட நபரின் வெற்றியா அல்லது மக்களுக்கு வெற்றியா என்ற கேள்வி மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் முன்னிறுத்தப்பட வேண்டியது.
இன்றைய உலக அரசியல் சூழல் இன அடிப்படையில் கட்டமைப்பதாக சொல்ல முடியாது. தனித்த நாடுகள் மட்டத்திலும் சரி, உலக நாடுகள் மட்டத்திலும் சரி அரசியல் என்பது மத அடிப்படை சார்ந்ததாகவே முனைப்பு பெறுகின்றது என்று சொல்ல முடியும். இலங்கையில் பௌத்தம் வலுவாக இருப்பதால் அது சார்ந்து அடக்குமுறை எழுகின்றது.
பௌத்த மதத்தின் இந்த வலுவான நிலை சைவத் தமிழர்களை மட்டுமே குறிவைப்பதாக தோன்றும். ஆனால் அந்த நிலை இன்று மாறி வருகின்றது. தமிழ் மக்கள் சிங்களவருடன் மோதுவது போல தெரியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது உண்மை அல்ல. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து குழந்தைப் பிள்ளையை கடிக்கும் நிலை போல சைவத் தமிழர்கள் தாக்கப்படும் போது அதனுடன் இணைந்த ஏனைய மதத்தினரான முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்பவர்களும் தாக்கப்படுவர்.
உண்மையில் சைவத் தமிழர்கள் பரிதாபத்துக்குரிய மக்கள். காரணம் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மத அடிப்படையில் வலுவான பிணைப்புள்ளவர்கள். அவர்களுக்கென்று அமைப்புகள் கொண்டவர்கள்.
ஆனால் சைவர்கள் அவர்களுக்கென்று குரல் கொடுக்க வலுவான அமைப்புகள் அற்றவர்கள். காலம் முழுவதும் கோவில் கட்டுகின்றோம் என்று பணம் வசூலிப்பவர்களையும், சாமியார்கள் என்று தங்களை கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லுபவர்களையும், சாமியிடம் இவர்களின் செய்திகளை சொல்ல ஊதியமாக அருச்சனை செய்யப் பணம் வாங்குவபவர்களையும், அந்தப் பணத்தில் பங்கு கேட்கும் கோயில் நிர்வாகங்களையும் நம்பி வாழ்பவர்கள். இறைவனை கும்பிட்டு விட்டு உண்டியலில் காசு போட்டு இறைவன் எங்களை வாழவைக்கிறான் என்று முழுமையாக நம்புபவர்கள். இவர்களை சுலபமாக ஏமாற்றலாம்.
எனவே உலகில் வலுவான மதங்கள் என்ற நிலையை கிறிஸ்தவமும், இஸ்லாமுமே பிடித்துக் கொள்கின்றது. அவை இரண்டும் எதிர்த்து மோதும் வல்லமை கொண்டவை. அதே போன்று பெளத்தம் உள்ள நாடுகளில் பெளத்த அடக்குமுறை நடந்தபடிதான் உள்ளது. எனவே தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டதும் இலங்கையில் நடக்கக் கூடிய அடுத்த போர் இஸ்லாம், கிறிஸ்தவம் சார்ந்ததாக இருக்கும் என்பது ஏற்கனவே காட்டப்பட்டு விட்டது. அதே வேளை பௌத்த சிங்களம் எந்தக் கவலையும் இல்லாது இதனை பார்த்துக் கொண்டிருக்கும் என்பதே சரியானது. காரணம் முஸ்லிம்கள், தமிழர்கள், அதேபோல் தமிழர்கள் வாழும் பகுதிகளை பாதிப்பு பகுதியாக தெரிவு செய்தால் அப்போதும் தமிழர்களே பாதிக்கப்படுவர்.
தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து நோக்கினால் அரசியல் விழிப்புணர்வு குறைந்த அல்லது விழிப்புணர்வு அற்ற மக்களாகவே வாழ்கின்றனர் என்று சொல்ல முடியும். அரசியல் என்பது தனித்து அரசியல்வாதிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரித்தானது. தமிழர்களிடம் அது இல்லை. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பது வெறும் பேச்சாய் எம்முன் சொல்லப்படுகின்றது. படிக்கும் மாணவர்கள் கூட பண்பற்றவர்களாகவே உள்ளனர்.
கொலை, கொள்ளை, வீதி விபத்து, போதை, சாதி என்பன மக்களை வருத்துகிறது. சமூதாயத்தை சீர்படுத்த வேண்டிய கல்விச் சமூகம் அந்த மக்கள் சீரழிவதை வேடிக்கை பார்க்கின்றது. யாரையும் நாங்கள் பகைக்க வேண்டாம் என்று இவற்றை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றது அரசியல் தலைமைகள். சிங்கள அரசு தான் மக்களை கட்டுப்படுத்துகின்றது.
அரசு தானே கட்டுப்படுத்த வேண்டுமென்பது சரி. ஆனால் சட்டம் ஒழுங்குகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாட்டில் நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டியது யார் பொறுப்பு? எமக்குள் ஒற்றுமை, புரிந்துணர்வு வேண்டாமா?. இதனை மக்களுக்கு எடுத்து சொல்லக் கூடாதா? அரசியல் என்பது மக்களுக்கு உரிமை பெற்றுத் தருவோம் என்று சொல்வதுதானா? என்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டும். இதுவும் அரசியலுடன் சேர்ந்ததுதான்.
நான் சிறுவயதாக இருக்கும் காலத்தில் நடந்த கோவில் திருவிழாக்கள் எனக்கு ஞாபகமிருக்கின்றது. திருவிழாக் காலங்களில் அங்குள்ள இடங்கள் கடைகளால் நிரம்பும். பல்வகை பொருட்களால் அந்தக் கடைகள் நிரம்பியிருக்கும். கடலை, கச்சான், சோழப்பொரி, இனிப்புப் பண்டங்கள், குளிர்கழி இப்படி இன்னும் சொல்லலாம். அதுபோல கோவிலுக்கு தேவையான பொருட்கள் விற்கும் ஒரு சிலகடைகளும் இருக்கும்.
ஆனால் கோவிலுக்கான பொருட்கள் விற்கும் கடையிலும் பார்க்க ஏனைய கடைகளிலே கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தேவைப்படும் காலத்தில் அவர்கள் சரியாக வியாபாரம் செய்ய தவற மாட்டார்கள். ஏனென்றால் இக்காலத்தை விட்டால் அவர்களுக்கு வருமானமும் இல்லை. வாழ்க்கையும் இல்லை. எனவே எதனை எப்போது செய்ய வேண்டுமோ அதனை அப்போதே செய்ய வேண்டும்.
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” யாருக்கும் பழக்கம் மாறாது. இன்றைய அரசியல் தலைவர்கள் பலர் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார்கள். எங்களால் முடியாது என்றால் அடுத்தவர்களை அனுமதிக்க வேண்டும் அதுவும் நடப்பதாக தெரியவில்லை. இந்த அரசியல் தலைவர்கள் அன்றே தமிழர்களுக்கு தனி உரிமை, தமிழருக்கு விடுதலை, தமிழருக்கு தனிநாடு என்று முழங்கியவர்கள்.
எனவே தலைவர்களின் வல்லமையை தமிழர்கள் அறிவார்கள். தமிழர்களின் இயல்பை அரசியல் தலைவர்கள் அறிவார்கள். இளைய சமுதாயம்கூட தமிழ் மக்களின் எதிர்காலத்தை சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே அரசியல் கூட்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா என்பது மக்களுக்கே தெரிந்த ஒன்று.
தேர்தலுக்கான தமிழ் அரசியல் கூட்டுகளும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும்-பகுதி1
கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படடது.
இந்நிலையில் வவுனுpயா நகர்ப்பகுதியில் மக்கள் அதிகளவில் வருகை தந்து பொருட்கொள்வனவில் இடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.
நகர்ப்பகுதியில் பல்பொருள் விற்பனை நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் வேறு பொருட்கொள்வனவு தேவையுடையோரை கருத்தில் கொண்டு விவசாய பொருட்களை விறப்னை சயெ;யும் கடைகள், பழக்கடைகள் என்பவவும் திறக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக மக்கள் நொசல் அதிகமானமையினால் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு மக்களை சீர்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கப்பட்டது.
எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன் பலபொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.
அதிகளவான வெயில் வவுனியா மாவட்டத்தில் பதிவாகி வருகின்ற நிலையிலும் மக்கள் வெப்பத்தினையுமு; பொருட்படுத்தாது பொருட்கொள்வனவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரனா வைரசின் தாக்கம் காரணமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் பெருமளவில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டதை காணமுடிந்தது.
இதன்போது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்ப படையினர் மக்களை ஒன்றுகூடுவதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இன்று காலை 6.00மணி தொடக்கம் ஊரடங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தளர்த்தப்பட்டுள்ள தொடர்ந்து மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் காணமுடிந்தது.
பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் இடைவெளியிடவேண்டும் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கவேண்டும் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்த நிலையில் மக்கள் ஒன்றுகூடும் பொதுச்சந்தை போன்ற பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மக்களை அறிவுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
அதேபோன்று பொதுமக்களும் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
இயந்திரங்களில் பணம்பெறும் இடங்கள்,பல்பொருள் அங்காடிகள்,மருந்துபொருட்கள் விற்பனை நிலையங்களில் அதிகளவான மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை காணமுடிந்தது.
சில பகுதிகளில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டோர் முண்டியடித்துக்கொண்டு சென்றதன் காரணமாக அப்பகுதியில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டன.
நேற்று பிற்பகல் 2.00மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் யப்பானில் இடம்பெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2021 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அனைத்துலக ஒலிம்பிக் சபை தெரிவித்துள்ளது.
கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஈரான் உட்பட பல நாடுகள் தாம் இந்த போட்டியில் பங்கொடுக்கப்போவதில்லை என அறிவித்த பின்னர் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன் விளைவுகளை நாம் தற்போது கணிப்பிட முடியாது, ஆனால் ஜூலை 24 ஆம் நாள் திட்டமிட்டபடி போட்டிகள் ஆரம்பமாகாது, கொரோனா வைரசின் தாக்கத்தால் பல நாடுகள் இதில் பங்குபற்ற மறுத்துவருகின்றன என சபை மேலும் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை முற்றாக முடங்க வைத்து வேகமாக பரவிவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயினால் இதுவரையில் 16,500 பேர் பலியா-கியுள்ளதுடன், 379,000 பேர் தொற்றுநோய்க்கு உட்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 101,000 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நோயின் தாக்கம் ஐரோப்பாவிலேயே தற்போது அதிகரித்து வருவதால் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் முற்றாக முடங்கும் நிலைக்கு வந்துள்ளன.
இந்த நோயை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் அதிக வேகம் காண்பிக்கவேண்டும் என நேற்று (23) உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக இந்த நோய் பரவுவதாகவும் அது எச்சரித்திருந்தது.
இதனிடையே, இத்தாலியில் இந்த நோயின் தாக்கம் தணிய ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை 793 பேர் மரணமடைந்த போதும், ஞாயிற்றுக்கிழமை 657 பேரும், நேற்று 602 பேருமே அங்கு மரணமடைந்துள்ளனர்.
இதுவரையில் அங்கு 6,077 பேர் மரணமடைந்துள்ளதுடன், 63,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகாரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள், மீனவர்கள், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ சாரதிகள், நடைபாதை வியாபாரிகள், சிறுவியாபாரிகள், சிறு உற்பத்தியாளர்கள், சுயதொழில் முனைவோர் என்போர் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் பல குடும்பங்களில் உணவுத்தட்டுபாடு நிலவுகின்றது. இவர்களுக்கான அத்தியவசிய உணவுக்கான ஏற்பாட்டை அரசு முன்னெடுக்க வேண்டுமென ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் தெரிக்கப்பட்டுள்ளதாவது,
அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கு,
கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எமது நன்றிகள். எனினும், நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு நடைமுறையான தின உழைப்பையும், வருவாயையும் நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை தேவையான உணவை பெற்றுக் கொள்வதில் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்க உள்ளார்கள்.
குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள், மீனவர்கள், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ சாரதிகள், நடைபாதை வியாபாரிகள், சிறுவியாபாரிகள், சிறு உற்பத்தியாளர்கள், சுயதொழில் முனைவோர் என்போர் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.
இதுவரையிலான உலக அனுபவம், கொவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து மீள எமக்கு அதிக காலம் தேவைப்படும் என்பதை உணர்த்தி இருக்கின்றது. எனவே, ஊரடங்கு நடைமுறையும் நீண்ட காலத்திற்கு தொடர போவது திண்ணம்.
இந்நிலைமையை எதிர்கொள்ள அரசு மக்களுக்கு பொதுவான உணவு நடைமுறையை அறிமுகப்படுத்தி செயற்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகளுடனான போரின் பின்னர், வன்னி மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருந்த காலப்பகுதியில் தொண்டு நிறுவனங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட போசாக்கு உணவு வழங்கலை இதற்கு அனுபவமாக பயன்படுத்த முடியும்.
எனவே, பொதுவான போசாக்கு உணவு பழக்கமொன்றை அறிமுகப்படுத்தி அதனை நாளாந்த உழைப்பை நம்பியிருக்கும் மக்களுக்கு மாத்திரமாவது இலவசமாக வழங்க வேண்டும் என சமூக பொறுப்பு வாய்ந்த கட்சியினர் என்ற வகையில் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
பொதுவான போசாக்குணவை அறிமுகப்படுத்துவதானது நெருக்கடியான காலகட்டத்தில் உணவுக்காக ஏற்படும் பொது செலவீனத்தையும், நெருக்கடியையும் தவிர்க்க உதவும்.
மேலும், நெருக்கடி சூழலை எதிர்கொள்ள வேண்டிய காலத்தை பொருத்து வீட்டிலிருந்தே பாதுகாப்பான முறையில் தேசிய பொருளாதாரத்துக்கு மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக எமது உழைப்பு படை வீட்டில் முடங்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்தே எமது அத்தியாவசிய சுய தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், நெருக்கடியான சூழலில் சர்வதேச சந்தைக்கு தேவைப்படக் கூடிய பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய வகையிலும் விரைவு திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக பாதுகாப்பு படைபிரிவினருக்கு மேலதிகமாக நடவமாடும் செயலணி ஒன்றையும் உருவாக்கி செயல்பட வேண்டும் என்பதையும் நாம் முன்மொழிகின்றோம்.
இதற்கான தேர்தல் மற்றும் பிற பொதுநிகழ்வுகளுக்காக ஒதுக்கிய நிதிகளையும், நாட்டில் தேவைக்கு அதிகமான செல்வம் சேர்த்து வைத்துள்ளவர்களின் நிதியையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
நெருக்கடியான காலக்கட்டமொன்றில் மக்களை கட்டுப்பாடான பொதுவான கூட்டு வாழ்வு முறைக்கு பழக்கப்படுத்துவதானது, கொவிட் – 19 சவாலை மாத்திரமின்றி எம் நாடு சுதந்திரத்துக்கு பின்னர் சந்தித்துவரும் முரண்பாடுகளுக்கு தீர்வை தரும் பிரவேசமாகவும் அமையும் என்ற இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு சனாதிபதியிடம் ஈழவர் சனநாயக முன்னணியினராகிய நாம் இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 192 பேர் அரியாலை தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டவர்களாவர். அத்துடன் 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன.
இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் யாழ். அரச அதிபர் க.மகேன். யாழ்ப்பாணத்தின் முதலாவது கொரோனா தொற்றாளி வசித்த தாவடிம் கிராமத்தில் சுமா 300 குடும்பங்களை உள்ளடக்கிய பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. உள்ளே வெளியே எவரும் நுழையாமல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் விழிப்புணாவு ஆலோசனைகளை பின்பற்றி மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.
யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று மாலை கருத்து தெரிவிக்கும் போதே அவா மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –
“யாழ். மாவட்டத்தில் மக்கள் தமக்கு தேவையான உதவிகளை தமது பிரதேச செயலாளர் ஊடாக தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். வெதுப்பகப் பொருட்களை விநியோகம் செய்ய நேற்றுக் காலை நடவடிக்கை எடுத்தோம். அதனை மாலையிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் பிரதேச செயலாளர்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவாகளுக்கு உலா உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
மேலும் அனாத்த முகாமைத்துவப் பிரிவு ஊடாக 10 இலட்சம் ரூபா நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது. பிரதமா ஊடாக மாவட்டத்திற்கு 10 இலட்சம் ரூபா வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும், மக்கள் விழிப்பாக இருப்பதுடன், நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.