Home Blog Page 2364

ஊரடங்குச் சட்ட காலத்தில் நாடு முழுவதும் 3000 பேர் கைது!

ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினை மீறுவொர் மீது கடுமையான நட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேயிலை கொழுந்து, உரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஊரடங்கு சட்டம் தாக்கம் செலுத்தாது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு காவல்துறையினரால் தடை ஏற்படுத்தப்பட்டால் 119 அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 011 2 44 44 80 மற்றும் 011 2 44 44 81 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது தொடர்பில் தகவல் வழங்க முடியும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தகவல் வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டத்தின்போது இவற்றிற்கு வழங்கப்படவுள்ள அனுமதி!

கொழும்பு உள்பட வெளிமாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றி வரவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

அதிலும் குறிப்பாக இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்து வருகின்றது.

ஸ்ரீலங்காவிலும் தற்போதுவரை 102 கெரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்

இதேவேளை கொழும்பு உள்பட வெளிமாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றி வரவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சாரதி மற்றும் உதவியாளரின் பெயர்களைப் பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார்.

மேலும் வாகனத்தின் சாரதி, உதவியாளரது பெயர், தேசிய அடையாள அட்டை, வாகன இலக்கம், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு எடுத்து வருகின்ற பொருள்கள் ஆகிய விவரத்துடன் உரிய பிரதேச செயலரது பரிந்துரையைப் பெற்று அலுவலக நாள்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை மாவட்டச் செயலகத்தின் பரிந்துரையைப் பெற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணம் இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் – என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கொரொனோ வைரஸ்தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.அந்தவகையில் வவுனியா நகரசபை,மற்றும் சுகாதாரபிரிவினர், விசேடஅதிரடி படையினரின் ஏற்பாட்டில் வவுனியா புதியபேருந்து நிலையம், மற்றும் வங்கிகளின் தன்னியக்க இயந்திரங்கள்,பழைய பேருந்துநிலையம் மற்றும் நகரின்முக்கிய பகுதிகிளில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நகரசபையின் தீயணைப்பு வாகனங்களால் பொது இடங்கள் நீர்பாய்ச்சி தூய்மையாக்கப்பட்டு மருந்துகள் விசிறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.IMG 20200324 164451 வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.IMG 20200324 163729 வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.IMG 20200324 163428 வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.IMG 20200324 163526 வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று – மூன்றாம் இடத்தில் அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (24) வரை அங்கு 600 பேர் பலியாகியுள்ளதுடன், 49,768 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் அமெரிக்கா உள்ளது. அங்கு மரணமடையும் விகிதம் 1.2 ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே இத்தாலியில் இறப்பு விகிதம் இன்று மறுபடியும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 743 பேர் இறந்துள்ளனர். இதுவரையில் 6,820 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,176 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் முதல் COVID-19 தடுப்பூசி பரிசோதனை

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் COVID-19 வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை சீனா இன்று (2020 மார்ச் 24) பரிசோதனை செய்துள்ளது.

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் தன்னார்வலரான வயதான லி ஜிஜி(36) என்பவருக்கு முதல் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டது .

108 தன்னார்வலர்களின் முதல் தொகுதி செவ்வாயன்று வுஹானுக்கு வந்தது. இவர்கள் அனைவரும் தடுப்பூசிக்குப் பிறகு 14 நாள் தனிமைப்படுத்தலின் கீழ் இருப்பார்கள்.

இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிரதமர் மோடி

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று(24) இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அதில் நாடு முழுவதிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் 500 பேரையும் தாண்டி விட்டது.

கடந்த ஞாயிறு நாட்டு மக்களால் ஒருநாள் மக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வெற்றியளித்ததைத் தொடர்ந்து இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைமுறைக்கு வரும் ஊரடங்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும். இந்த நடைமுறைக்கு ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி தனது உரையில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கொரோனா அச்சத்தில் chloroquine phosphate மாத்திரை உட்கொண்டவர் மரணம்;மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில்

அமெரிக்க அரிசோனா மாநிலத்தில் கொரோன அச்சம் காரணமாக chloroquine phosphate மாத்திரையை மருந்தாக பயன்டுத்திய 60 வயது நபர் மரணமடைந்ததுடன் மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இவர்கள் பயன்படுத்திய மாத்திரைகள் மனித மருத்துவ பயன்பாட்டிற்கானவை அல்ல என்றும் மீன்தொட்டிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப் படுபவை எனவும் வைத்தியசாலை ( Hospital system Banner Health) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மலேரியா நோய் தடுப்புக்கு பயன்படுத்தப்படும் chloroquine phosphate மாத்திரைகளை பயன்படுத்தலாம் என அண்மையில் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டதை தாம் அறிந்திருந்தாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

தாங்கள் இந்த மாத்திரைகளை உட்கொண்டு 30 நிமிட நேரத்துள் தங்கள் அதன் தாக்கத்தை உணரத்தொடங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மலேரியா தடுப்புக்கான chloroquine phosphate மாத்திரைகளை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்துவது தெடர்பில் இன்னும் தீர்க்கமான சோதனை முடிவுகள் வெளிவராத நிலையில் அதனை பயன்படுத்தும்படி சிபாரிசு செய்வது முறையானதல்ல என்கின்றனர்
பல ஆய்வாளர்கள்.

இளையவருக்கு வாழும் வாயப்பை வழங்கி மரணத்தை தழுவிய இத்தாலியப் பாதிரியார்

இத்தாலியில் சுகாதாரத்துறையால் கையாளும் நிலையை கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை கடந்துள்ள நிலையில் புதிய கடும் சுகவீனமடையும் புதிய நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் வழங்கி அவர்களை காப்பாற்ற முயல்வது முடியாமல் ஆகியுள்ளது.

இந்நிலையில் இத்தாலியின் தலைமைப் பாதிரியார்களில் ஒருவர் 72 வயது நிரம்பிய ஜுசுப்பி பெரடரெல்லி அவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றிக்கு உள்ளாகி கடுமையான நிலையை ஏய்தினார். இவரைக் காப்பாற்றவென இவரது மக்கள் தங்கள் பணத்தில் ஒரு செயற்கை சுவாசம் வழங்கும் இயந்திரத்தை கொள்வனவு செய்து இவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த பாதிரியார் அதனை முகம் தெரியாத இளையவர் ஒருவரின் உயிரை காப்பாற்ற வழங்கி தனது உயிரை மாய்த்துள்ளார். இதுவரை 50க்கு மேற்ப்பட்ட கத்தோலிக்க பாதிரிகள் இத்தாலியில் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

இத்தாலி சீனாவிற்கு அடுத்து 64 ஆயிரம் நோய்த் தொற்றாளர்களையும் சீனாவை விட இரட்டிப்பாக 6 ஆயிரத்து 400 இறப்புக்களையும் இதுவரை பதிவு செய்துள்ளது. அதேவேளை நோய்த் தொற்றாளர்களிலும் இறப்புக்களிலும் பெரும் எண்ணிக்கையில் சுகாதாரத்துறை பணியாளர்களும் அடங்குவர் என்பதே இத்தாலியின் துன்பியல் நிலை. இவர்களுக்காக மரணித்துப் போன பாதிரியார் கடந்த வாரம் செவ்வாய் விசேட பிராத்தனைகளை வேறு மேற்கொண்டிருந்தார்.

Nehru Gunaratnam

இலங்கையில் 97 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் நேற்று 11பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவால் நேற்று இரவு 10.30 வரை எடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி, வெளியிடப்பட்ட அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.