Home Blog Page 2363

வைரசை தடுக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்!! சத்தியலிங்கம்!!

கொரோனோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் நலன்சார் நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முன்னாள் வடமாகாண சுகாதாரஅமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் வடமாகாண ஆளுனரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் ஆளுனருக்கு இன்று அனுப்பிவைத்துள்ள செய்திகுறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

கொறோனா வைரஸ் நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவருவது பாராட்டிற்குரியது.
இலங்கையில் நோய் வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே புத்திசாலித்தனமானது. ஏனெனில் கொறோனா வைரஸ் நோய் தாக்கத்தினால் மூச்சுத்திணறல் நிலை ஏற்படுமானால் எமக்குள்ள அவசர சிகிச்சை பிரிகளின் எண்ணிக்கை அங்கு கடமையாற்றும் பயிற்றப்பட்ட சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏனைய வசதிகளை எடுத்து நோக்கினால் நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு நிச்சயமாக விடைதேட முடியாது என்பதே உண்மை.

எனவே மக்கள் நலன்சார்ந்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளிற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது இன்றியமையாததகின்றது.

ஊரடங்கின் அர்த்தம் புரிந்தும் புரியாதவர்களாக
ஊரங்கை மீறுவது கெட்டிக்காரத்தனம் என நினைப்பவர்களும்
ஊரடங்கு வேளைகளில் வெவ்வேறு அத்தியாவசியமற்ற காரனங்களை கூறிக்கொண்டு வீட்டைவிட்டு வெளிவருபவர்களும்
ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பொருட்களை வாங்கும் நோக்கில் முண்டியடித்துக்கொண்டு சுகாதார விதிகளை மீறி ஒன்றுசேரும் செயற்பாடுகள் மக்களும் இந்தநாடும் இன்னும் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய அழிவை புரிந்துகொள்ளவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

எனவே கெளரவ ஆளுநர் அவர்கள் சிலநடைமுறைகளை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என மக்கள் நலன் சார்ந்து கேட்டுக்கொள்கிறேன்.
1. வடக்கு மாகாணம் முழுவதும் சனத்தொகை மற்றும் புவியியல் அமைப்பு சார்ந்து வலயங்களாக பிரிக்கப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு வலயங்களிலும் காணப்படும் தனியார் மற்றும் அரச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும், அ-து அங்கு வாழும் மக்கள் தொகைக்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

3. ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் பொலிசாரின் உதவியுடன் சம்மந்தப்ட்ட வலயங்களில் வாழும் மக்கள் அந்தந்த வலயங்களிலேயே பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

4. அவசர மருத்துவ நிலைகளிலும் ஏனைய அவசர சந்ததர்ப்பங்களிலும் மட்டும் குறிப்பிட்ட வலயங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறான மக்கள் நலன்சார் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதால்
நோய் பரம்பலை குறிப்பிட்ட வலயத்தினுள் கட்டுப்படுத்துவதுடன் தடுப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த முடியும்.

ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் அனாவசியமாக மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்தி நோய்ப்பரம்பலை கட்டுப்படுத்தலாம். கெளரவ ஆளுனர் அவர்கள் மேற்படிவிடயங்களை கவனத்தில் எடுத்து கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறித்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை வவுனியா அரசாங்க அதிபர்

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை என்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துல சேன தெரிவித்தார்.
இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்து கருத்து தெரிவிக்கையில்,
ஊரடங்கு சட்ட காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை விநியோகம் செய்யும் நடவக்கையில் ஈடுபடுபவர்கள் ஊரடங்கு அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சேவையில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய வாகனத்திலே அத்தியாவசிய சேவை என மூன்று மொழிகளிலும் எழுதி சுகாதார வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு அமைவாக பொருட்களை விநியோகிக்க முடியும்.
அத்தோடு சமுர்த்தி பயனாளிகள் ஆறுமாதத்திற்கு பின்னர் செலுத்தக்கூடிய வகையிலே பத்தாயிரம் ரூபாயினை வட்டியின்றிய கடனாக சமூர்த்தி வங்கிகளிள் பெற்றுக்கொள்ள முடியும். வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து கடனை இரண்டு கட்டமாக வழங்குவதற்கு வவுனியா மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சுகாதார திணைக்களத்தின் அறிவுரைக்கு அமைவாக இப்பணங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்ந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நெல் விற்பனை செய்ய தயாராக இருக்கும் விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையோடு தொடர்பு கொண்டு தங்களின் நெல்லினை விற்பனை செய்ய முடியும். அத்தோடு 2020 ஆண்டுக்கான சிறுபோக நெற்பயிர்ச்செய்கைக்கான உர விநியோகத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிறு போகத்தை மேற்கொள்கின்ற விவசாயிகள் வரும் வெள்ளிக்கிழமையிலல் இருந்து உரத்தனை பெற்றுக்கொள்வதற்கு கமநவ திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரனா தொற்று தடுக்கு செயலணியின் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் தொற்று தடுக்கு செயலணியின் தலைவருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா

அதிபர் ஜி.ஏ.என்.விஜயசேன,மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் இராணுவ,பொலிஸ் உயர் அதிகாரிகள்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்,வைத்தியர்கள்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர், உள்ளுராட்சிமன்ற ஆணையாளர்,மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் உட்பட வைத்தியர்கள் என கொரனா தொற்று தடுக்கு செயலணியின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ள நிலையில் அதன்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் இந்த கூட்டம் நடாத்தப்பட்டது.IMG 1401 மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- அரசாங்க அதிபர்

இதன்போது ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்போது மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கையினை முன்னெடுத்தல்ääஅனைத்து மக்களும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,வர்த்தக நிலையங்களுக்கு வரும் மக்கள் குவிந்து நின்று பொருட்களை கொள்வனவுசெய்யாமல் இடைவெளியை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஊடாக முன்னெடுப்பது குறித்து இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

ஊரடங்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள்,மருந்துபொருட்கள் விற்பனை நிலையங்களை மட்டுமே திறப்பது எனவும் ஆடை விற்பனை நிலையங்கள்,நகை விற்பனை நிலையங்கள் உட்பட அத்தியாவசியமல்லாத பொருள்கள் விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள்ääதாதியர்கள் மற்றும் சுகாதார துறையினர் பொருட்கொள்வனவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டு அதற்கான நேரங்களும் வழங்கப்பட்டன.

போக்குவரத்துச்சேவையில் ஈடுபடும் பஸ்களில் 20பேருக்கு மேல் ஏற்றுவதற்கு அனுமதிக்கூடாது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டதுடன் அது தொடர்பில் பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

முககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்படாது என்பதுடன் அவற்றினை சுவாச நோய் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள் அணிவது கட்டாயம் என்பதுடன் தொடர்ச்சியாக ஒரே முககவசத்தினை அணிவது சுகாதாரத்திற்கு கேடு என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்படமாட்டது எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

ஊரடங்கு நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதை முடியுமானவரை தவிர்த்துக்கொள்ளுமாறும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டில் ஒருவர் வெளியில் சென்றால்போதுமானது எனவும் இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார துறையினரின் செயற்பாடுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை அனைத்து தரப்பினரையும் வழங்மாறு கேட்டுக்கொண்டார்.

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதற்கு முன்பாகவும் அதன் பின்னரும் மக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கிகள் தெளிப்பது தொடர்பில் உள்ளுராட்சிமன்றங்களுடன் இணைந்து நடவடிக்கையெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.IMG 1537 1 மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- அரசாங்க அதிபர்

அத்துடன் மக்கள் அதிகளவில் கூடும் பொதுச்சந்தை உள்ள பிரதேசங்களில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் வீதிகளின் கரைகளிலும் திறந்தவெளி இடங்களிலும் விற்பனை கூடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அரசாங்க அதிபரினால் உள்ளுராட்சிமன்ற ஆணையாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் 172 குடும்பங்கள் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் வெளிமாவட்டங்களில் பணிபுரிந்துவிட்டு மட்டக்களப்புக்கு வந்த 865 குடும்பங்கள் உட்பட 1037 குடும்பங்கள் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இதில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 225 குடும்பங்கள் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.பிராந்திய சுகாதார பணிமனையின் ஊடாக இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடும் அமெரிக்கா – தென்கொரியாவிடம் உதவி கேட்டது

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 136 பேர் மரணமடைந்துள்ளதுடன், இதுவரையில் 53,000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்னர்.

இந்த நிலையில் தனக்கு உதவுமாறு அமெரிக்கா தென்கொரியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள தென்கொரியா, கோவிட்-19 வைரஸ் பரிசோதனை உபகரணங்கள், சுயபாதுகாப்பு அங்கிகள் உட்பட பெருமளவான பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்ப் இந்த கோரிக்கையை நேற்று விடுத்ததாகவும், எனவே தாம் உடனடியாக பொருட்களை அனுப்பியுள்ளதாகவும் தொன்கொரிய அதிபர் மூன் ஜேனின் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களே எச்சரிக்கை;நீங்கள் கூட விதிவிலக்கல்ல

அமெரிக்காவில் கரோனாவுக்குப் பலியான முதல் பதின்ம வயது நபர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது என்று லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

லங்காஸ்டரைச் சேர்ந்த பதின்ம வயது நபர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு முன்னமேயே நோய்கள் எதுவும் இருந்ததா, எதிர்ப்புச் சத்துக் குறைவாக இருந்ததா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அந்த பதின்ம வயது சிறுவன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக மேயர் தெரிவித்துள்ளார்.

“நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நபர் வைரஸுக்குப் பலியாகியுள்ளார். ஆகவே இளைஞர்களே எச்சரிக்கை இது உங்களையும் கடுமையாகப் பாதிக்கும். உங்கள் நடத்தை உயிரைக் காப்பாற்றவும் செய்யும், உயிரைப்பறிக்கவும் செய்யும். அந்த உயிர் உங்களுடையதாகக் கூட இருக்கலாம்” என்று மேயர் கார்செட்டி எச்சரித்துள்ளார்.

ஆனால் பலியான அந்த நபர் ஆணா பெண்ணா உள்ளிட்ட அடையாளங்கள் தெரிவிக்கப்படவில்லை.

“கோவிட்-19 வைரஸ் வயது, இனம், வருவாய் ஆகியவை பார்த்து தொற்றுவதில்லை” என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்ட்டி பொதுச் சுகாதார இயக்குநர் பார்பாரா ஃபெரர் தெரிவித்தார்.

வயதானவர்கள், குறிப்பாக நோயுள்ளவர்களையே கரோனா பீடிக்கிறது என்ற அறிவியல் உண்மை ஒருபுறம் இருந்தாலும் இளம் வயதினரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இரண்டேயிரண்டு மைனர்கள் மட்டுமே கரோனாவுக்கு பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

கோவிட்-19 – இத்தாலியில் சிறீலங்கா நபர் மரணம்

கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இத்தாலி மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சிறீலங்கா நபர் ஒருவர் இறந்துள்ளதாக இத்தாலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

70 வயதான இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவில் நேற்று (24) வரை 102 பேர் இந்த நோயால் பாதிக்கபபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பகா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

மோசமடையும் நிலைமைகள் உலகளாவிய ரீதியில் 423,330 பேருக்கு தொற்று 18,906 பேர் சாவு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கிடையே, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலியை இந்த வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது.

இத்தாலியில் இதுவரை 69 ஆயிரத்து 176 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அமெரிக்காவில் 54,916 தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன் 784 சாவடைந்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளிலும் நிலைமை மோசமாகவேயுள்ளது.

இத்தாலிக்கு அடுத்தாக இஸ்பெயினில் 42,058 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 2,991சாவடைந்துள்ளனர்.

ஜெர்மனியில்- 32,991 தொற்று 159 சாவு
பிரான்ஸ் – 22,304 தொற்று 1,100 சாவு
சுவிஸ் – 9,877 தொற்று 132 சாவு
ஐக்கிய இராச்சியம் -8,077 சாவு 422

உலகளாவிய ரீதியில் 423,330 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்,18,906 பேர் சாவடைந்துள்ளனர்.109,146 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

யாழில் தாவடி – சுதுமலை வீதி போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது

யாழில் தாவடி – சுதுமலை வீதி ஊடான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தாவடிக் கிராமம் முழுமையான கண்காணிப்பில் உள்ளது. இதேவேளை இன்று(25) காலை 8.30 மணி முதல் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறவோ அல்லது உள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கிராமசேவகர், பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், பொது சுகாதார அதிகாரி, பொலிசார், இராணுவத்தினர் அங்கு கண்காணி்பபு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து திரும்பி தலைமறைவானவர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி கொரோனா தொற்று சோதனைக்கு முகம் கொடுக்காது தலைமறைவாக இருக்கும் நபர்களுக்கு அரசாங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று(24)  நள்ளிரவு 12 மணிக்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம், அல்லது வைத்தியசாலையில் தங்களை பதிவு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், பதிவு செய்யத் தவறியவர்கள் தொற்று நோய் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் தங்க வைக்கப்படுவார்கள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது மக்கள் கூடும் பகுதிகளில் யாழ். பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, இன்று (25) காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பணி, பொது மக்கள் கூடும் இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்தப் பணியில் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ். பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றது.

இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்களுக்கு கொரோனா

இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.