யாழில் 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடும் கண்காணிப்பில்: அரச அதிபர் தகவல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 192 பேர் அரியாலை தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டவர்களாவர். அத்துடன் 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன.

இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் யாழ். அரச அதிபர் க.மகேன். யாழ்ப்பாணத்தின் முதலாவது கொரோனா தொற்றாளி வசித்த தாவடிம் கிராமத்தில் சுமா 300 குடும்பங்களை உள்ளடக்கிய பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. உள்ளே வெளியே எவரும் நுழையாமல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் விழிப்புணாவு ஆலோசனைகளை பின்பற்றி மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.

யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று மாலை கருத்து தெரிவிக்கும் போதே அவா மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“யாழ். மாவட்டத்தில் மக்கள் தமக்கு தேவையான உதவிகளை தமது பிரதேச செயலாளர் ஊடாக தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். வெதுப்பகப் பொருட்களை விநியோகம் செய்ய நேற்றுக் காலை நடவடிக்கை எடுத்தோம். அதனை மாலையிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் பிரதேச செயலாளர்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவாகளுக்கு உலா உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

மேலும் அனாத்த முகாமைத்துவப் பிரிவு ஊடாக 10 இலட்சம் ரூபா நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது. பிரதமா ஊடாக மாவட்டத்திற்கு 10 இலட்சம் ரூபா வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும், மக்கள் விழிப்பாக இருப்பதுடன், நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.