Home Blog Page 16

கனிய மணல் அகழ்வாராய்ச்சி விவகாரம்:காலநிலை மற்றும் பொருளாதார நீதிக்கான கூட்டிணைவு கேள்வி

எமது கடற்கரையின் சுமார் 75 சதவீதமான பகுதியை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகெங்கிலும் உள்ள அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இலங்கைக்கு அகழ்வாராய்ச்சி என்பது உரு பொருத்தமான திட்டமா என்பது பற்றி அரசாங்கம் மக்களுடன் கலந்துரையாடியதா? இதன்விளைவாக ஏற்படப்போகும் சமூக வாழ்வாதாரங்கள் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களுக்கான சேதத்தை அரசாங்கம் மதிப்பிட்டதா? என காலநிலை மற்றும் பொருளாதார நீதிக்கான கூட்டிணைவு கேள்வி எழுப்பியுள்ளது.

 இதுகுறித்து அக்கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

எமது நாட்டிலுள்ள கடல்கள் மற்றும் கடற்கரைகள் குறித்து இலங்கையர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். வர்க்க, வருமான வேறுபாடுகளைக் கடந்து எம்மில் பலர் கடற்கரைக்குச் செல்வதை விரும்புகிறோம். எம்மைப் பொறுத்தவரை, எமது நாட்டைச் சுற்றியுள்ள கடல் என்பது சகலரும் இலவசமாக அணுகக்ககூடிய ஒரு பொதுச்சொத்தாகும். எமது கடல்களும் கடற்கரைகளும் உள்நாட்டு மீனவர்கள், விவசாயிகள் முதல் அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும் ஒரு முக்கிய துறையான சுற்றுலாத்துறை வரை வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்பக்கூடிய பரந்துபட்ட சூழலியல் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இப்போது இந்த நிலை மாற்றமடையப்போகிறது.

எமது கடற்கரையின் சுமார் 75 சதவீதமான பகுதியை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகெங்கிலும் உள்ள அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருப்பதாக வெளியாகியிவரும் அறிக்கைகள் குறித்து நாம் மிகுந்த கவலையடைகிறோம். எமது கடற்கரைகள் பொதுப்பயன்பாட்டுக்காகவோ அல்லது பாதுகாப்புக்காகவோ அன்றி, அகழ்வாராய்ச்சி நிறுவனங்கள் எமது வளங்களை சூறையாடுவதற்கும், மாசுபடுத்துவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. எமது கடல் மணலில் உள்ள கனிமங்கள் உறிஞ்சப்படும்.

இலங்கையின் கடல்களும் கடற்கரைகளும் கரைகளில் தமது கூடுகளைக் கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான மைல்கள் நீந்திவரும் சில ஆமை இனங்கள் போன்ற அழியும் அபாயத்திலுள்ள உயிரினங்களின் வாழ்விடங்களாகவும் காணப்படுகின்றன. வனவிலங்குகளின் இந்த புலம்பெயர்வு முறைகளை நாம் தனித்துவமான சுற்றுலாத்துறை ஈர்ப்புக்குரிய விடயங்களாக பிரசாரம் செய்கிறோம். இருப்பினும் தற்போதைய இலாபவெறி இந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது.

எமது நாட்டில் பலர் தமது வாழ்வாதாரத்துக்காக ஏரிகள் மற்றும் கடலில் உள்ள மீன்பிடித்தளங்கள் உள்ளிட்ட கரையோர சுற்றுச்சூழல் கட்டமைப்புக்களையே பெரிதும் நம்பியுள்ளனர். அவை பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புக்களை வழங்குகின்றன. அவ்வாறிருக்கையில் கரையோரப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படும்போது கரையோர மீன்பிடித்தொழில் பாதிப்புக்குள்ளாகும். அதுமாத்திரமன்றி நிலத்தடி நீரை பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதிலும் தாக்கங்கள் ஏற்படும்.

எனவே இந்த அகழ்வாராய்ச்சி தொடங்கினால் எமது கடற்கரையை மீட்டெடுப்பதற்குக் குறைந்தபட்சம் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் தேவைப்படும். அதற்காக ஏற்படக்கூடிய செலவினங்களை அரசாங்கமும், மக்களும் ஏற்கவேண்டியிருக்கும். இருப்பினும் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் தனியார் நிறுவனங்கள் இந்த ‘மறுவாழ்வு’ செயன்முறைக்கு எவ்வகையிலும் பங்களிப்புச் செய்யாது.

இலங்கை வர்த்தக சம்மேளனம் எதிர்வரும் 17 ஆம் திகதி மினரல் டெக்னோலொஜி அவுஸ்திரேலியா நிறுவனத்துடன் இணைந்து கனிம மணல் தொழில்நுட்ப மாநாட்டை நடாத்துகிறது. ஆனால் இலங்கைக்கு அகழ்வாராய்ச்சி என்பது உரு பொருத்தமான திட்டமா என்பது பற்றி அரசாங்கம் மக்களுடன் கலந்துரையாடியதா? இதன்விளைவாக ஏற்படப்போகும் சமூக வாழ்வாதாரங்கள் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களுக்கான சேதத்தை அரசாங்கம் மதிப்பிட்டதா? இதனால் ஏற்படக்கூடிய அந்நியச்செலாவணி இழப்பை அரசாங்கம் மதிப்பீடு செய்ததா?

Beaches & Islands

 

மீளமுடியாத சேதம் ஏற்படுத்துவதற்கு முன்பதாக நாம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும். எமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக பொதுச்சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை எமக்கு உண்டு என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்லோயா படுகொலையின் 70வது ஆண்டு நினைவேந்தல்

கல்லோயா படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது வியாழக்கிழமை (11) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பா ட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வினை தொடங்கி வைத்து அவர் உரையாற்றுகையில், தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட் ட இன அழிப்பானது 70 ஆண்டுகளுக்கு முன்னரே இனவாத ஆட்சியாளர்கள் தொடங்கி விட்டார்கள்.

இதுவே தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட முதலாவது இனப்படு கொலையாகும். இக் கொலச் சம்பவங்கள் தொடர்ச்சியாக 5 நாட்கள் வரை நீடித்த நிலையில் 150 மேற்பட் டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இச் சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட ப்பட்ட வகையில் அப்போதைய ஆட்சியா ளர்களால் நடத்தப்பட்டவையாகும்.

அதனுடைய தொடர்ச்சி யாக தமிழ் மக்களது நிலம்,வளம்,பண்பாடு,கலை,காலாச்சாரமென அனைத்தும் சட்டங்கள் மூலமாக இன்றளவும் கபலிகரம் செய்யப்பட்டு வருகின்றது.

சட்டத்துக்கு புறம்பாக காடையர்களை வைத்து   செய்யப் பட்ட சட்டத்துக்குப் புறம்பான சுத்திகரிக்கப்பட்ட இன அழிப்பானது சட்ட பூர்வமான அங்கிகாரங்களுடன் இந்த இனவாத ஆட்சியாளர்கள் மூலம் இன்றளவும் தொடர்ந்து  செயற்படுத்தப்பட்டு வருகினறது என்பதுதான் உண்மை இதனை நாங்கள் இனவாதத்தின் பரினாம வளர்ச்சியாக பார்க்கின்றோம் என கூறினார்.

நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்  பா.அரியநேந் திரன், முன்னால் மாநகரசபை மேஜர் சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து கானாமலாக் கப்பட்டோர் சங்க தலைவி  அமலநாயகி, மட்டக்களப்பு மாவட்ட கால் நடை கூட்டுறவு சம்மேளத்தின் தலைவர் நேமீஸ்வரன், அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த அருட்பணி ரூபன்அடிகளார், ஓய்வுபெற்ற அதிபர் தங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள், பண்ணையாளர்கள்,பொதுமக்கலென பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு பிணை

கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சாவகச்சேரி- நாவற்குழி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் சொல்லிசையை அவர் பகிர்ந்திருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் கடந்த 2ஆம் திகதி அவரை கைது செய்து விசாரணைகளின் பின், மறுநாள் 03ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

இதன்படி, அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை நேற்றைய தினம் (11) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறான நிலையில் சங்கீத்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லாது, தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120இன் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் காவல்துறையினருக்கு பணித்திருந்தார்.

அதனை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து அவர் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால், பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

ஆனாலும் மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.

தமிழர்களின் குருந்தூர் மலையில் இந்து ஆலயம் இருந்தமைக்கான சாட்சியம் இல்லை என அறிவிப்பு

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில்  இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை  என்று பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க  அறிவித்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு தேசிய மரபுரிமைகள் பிரிவின் ஊடாக, பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பின் பிரதி சாக்கிய புத்திர தர்ம அமைப்பின் பிரதி செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும்” என்றும், “அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1940 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் பிரகாரம், தொல்பொருள் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஏதேனும் ஒரு புதிய கட்டடத்தையோ அல்லது நிர்மாணத்தையோ மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது 34 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானும் சுரேஷ் சலேவும் விடுவிக்கப்படக்கூடாது வலியுறுத்தல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் விடுவிக்கப்பட கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் தெரிவித்துள்ளார்.

இன்று (12) பாராளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை வெளிவருவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஸ் சலே ஆகியோர் விடுவிக்கப்பட்டால் உண்மையை வெளிப்படுத்த முடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

சொல்லிசை பாடகரை இன்று (12) வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞன் பகிர்ந்திருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த 2ஆம் திகதி இளைஞனை கைது செய்து விசாரணைகளின் பின், மறுநாள் 03ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , இளைஞனை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில்,  இளைஞனை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் , உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளை நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறான நிலையில்  இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லாது , தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120இன் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு பணித்திருந்தார்.

அதனை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து இளைஞன் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால், பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

ஆனாலும் மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் , இளைஞனை இன்றைய தினம்  பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி  காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ‘கொமோண்டோ ‘ பங்களா முன்பாக இன்று அமைதி வழியில போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கு பலாலியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில்  அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில்  இன்றைய தினம் போராட்டத்தை முன்னடுத்தனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை(15) யாழ்ப்பாண அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதன்போது வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம்,  வலி.காமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ்,  பருத்தித்துறை துறை நகர சபையின் தவிசாளர் டக்ளஸ் போல் மற்றும் பொதுமக்கள் காணி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா இலங்கையில்…

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் கன்பெரா  போர்க்கப்பல் இன்று (12) வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அமெரிக்காவுடனான போர் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை: ஈரான்

அமெரிக்காவுடன் எவ்விதமான விசேட போர் ஒப்பந்தமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதேநேரம், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்த பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையே விசேட உடன்பாடுகள் எட்டப்பட்டு வருவதாகப் பரவிய தகவல்களுக்கு ஈரான் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் உடன்படிக்கை வரைபுகள் குறித்து ஈரானிய உயர் மட்டப் பாதுகாப்பு கவுன்சில் இன்னும் எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய நலன்களைப் பாதுகாக்கும் முடிவுகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இப்பகுதியில் நிலவும் கடுமையான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், சர்வதேச வர்த்தகத்திற்கும் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கும் மிக முக்கியமாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப்பாதையில் எந்தவொரு தடங்கலும் ஏற்படவில்லை. உலக நாடுகளின் வணிகக் கப்பல்கள் மற்றும் பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள் வழக்கம் போல் அந்தப் பாதையைப் பயன்படுத்திப் பயணித்து வருகின்றன.

இருப்பினும், அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக, இப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச கடற்படைக் கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு விவகார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதில் தாமதம்: சபாநாயகரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடிதம்

உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலவும் நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கவனம் செலுத்தி, அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கக் கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்  கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று (12) பாராளுமன்றத்தில் வைத்து இக்கடிதம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் தலைவர் என்ற ரீதியில், இக்கருத்துகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று, நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாக்குமாறு கோரியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இக்கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

01%20(1) நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதில் தாமதம்: சபாநாயகரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடிதம்