Home Blog Page 14

செம்மணியில் தொடர்ந்து சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு  குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 24ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் குழந்தை ஒன்று , நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , புதிதாக மேலும் இரண்டு என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 355 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 341 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை அகழ்வு பணிகளில் ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா–இலங்கை உறவு குறித்து இந்திய  தூதுவர் சந்தோஷ் ஜா  கருத்து

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கூட்டாண்மை என்பது பகிரப்பட்ட விழுமியங்கள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நமது மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்விற்கான பொதுவான இலட்சியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய  தூதுவர் சந்தோஷ் ஜா  தெரிவித்தார்.

கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்று வரும் மலையக கல்வி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நம்பிக்கையின் அடிப்படையில், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வேகமாக மாறிவரும் உலகில் இளைஞர்கள் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறன்களை வளர்க்கவும் இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது  என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தலை நடத்த முழு ஒத்துழைப்பு: தேர்தல் ஆணைக்குழு

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம். தற்போது அமுலில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட  மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு மூன்று அவதானிப்புக்களை முன்வைத்துள்ளோம். அவற்றை செயற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான 25 சதவீத கட்டாய ஒதுக்கீட்டு முறைமைஇதேவையான சட்டரீதியான திருத்த நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிர்வாகத் தயார்படுத்தல்களின் நிலைமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தின் போது வேட்புமனுக்களுக்கான ஒதுக்கீடு மட்டும் மற்றும் – கட்டாய ஆசன ஒதுக்கீடு என்ற அடிப்படையில் பல யோசனைகளை விசேட செயற்குழுவுக்கு முன்வைத்துள்ளோம்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அரசியல் தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்களை முழுமையாக நிராகரிக்கிறோம்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு முரணானது. பொருளாதார பாதிப்புக்கு பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளோம்.அந்தத் தேர்தல்களை நடத்துவதில் எவ்வித சட்ட சிக்கலும் காணப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தை தொடர்ந்து எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்ற சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை விசேட தீர்மானங்களை வழங்கியுள்ளது.

ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று யோசனைகளை செயற்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பாராளுமன்றத்தின் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

வரையறையற்ற சட்டமும் வளைக்கப்படும் ஜனநாயகமும் : விதுரன்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் சர்ச் சைக்குரிய, மனித உரிமைகளை நசுக்கக்கூடிய சட்டக் கருவியாகப் பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கி வருகிறது. 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் நிரந்தரமாக்கப்பட்ட இந்தச் சட்டம், தசாப்தங்களாகத் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை ஆயுதமாகவே பார்க்கப்பட்டது.
ஆயினும், சமகால அரசியல் சூழலில் இச் சட்டத்தின் பாய்ச்சலும் அதன் விளைவுகளும் இனப் பாகுபாடுகளைத் தாண்டி, ஒட்டுமொத்த அரச கட்டமைப்புக் கும், மாற்றுக்கருத்துடையோருக்கும் எதிரான ஒன்றாக விரிவடைந்துள்ளது.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அரங்கேறிய சூடான விவாதங்கள், இச்சட்டம் எவ்வாறு இன்னும் அரசியல் பழிவாங்கல்களுக்கும் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை மீளவும் நிரூபித்துள்ளன.
எழுச்சிப் பாடலைப் பாடியதற்காக சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் கைது செய்யப்பட்ட விவகாரம் பேசுபொருளாகிய இருந்த நிலையில்,  ஈஸ்ரர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான நடவடிக்கை, மற்றும் இவற்றுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் நிலவும் உள்முரண்பாடுகள் எனப் பல பரிமாணங்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் பரப்பை உலுக்கி வருகின்றன.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இளம் பாடகரான சங்கீத்சன், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டக் காலப் பாடல்களை அல்லது அதன் உள்ளடக் கத்தைக் கொண்ட எழுச்சிப் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சாவகச்சேரி நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்பட்ட போது, விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றார் என்ற பாரதூரமான குற்றச்சாட்டைப் பொலிஸார் முன்வைத்தனர்.
எனினும், பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார மற்றும் அமைச்சர் ஆனந்த விஜே பால ஆகியோர் வெளியிட்ட தகவல்களின்படி, அவர் பாடியதற்காகக் கைது செய்யப்படவில்லை, மாறாகப் பாட லின் பொருள் காரணமாகவே கைது செய்யப்பட்டார் என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
இச்சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் உரையாற் றிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இக்கைதை வன்மையாகக் கண்டித்தார். ஒரு அமைப்பையோ அல்லது அதன் தலைவரையோ புகழ்ந்து பாடுவது அல்லது போற்றுவது என்பது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்றும், வன்முறையைத் தூண்டுவது அல்லது ஆபத்தான பயங்கரவாதச் செயலுக்கு நேரடியாக உதவுவது மட்டுமே குற்றமாக வகைப்படுத்தப்பட முடியும் என்றும், போற்று தலை சித்தாந்தக் கருத்தாகப் பார்க்க வேண்டுமே தவிர, பயங்கரவாதமாகப் பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக ளான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன போன்றோர் தங்களது நூல்களிலும் நேர்காணல்களிலும் விடுதலைப் புலிகளின் போர் நுணுக் கங்கள், ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ ஆளுமைகளைப் பாராட்டியுள்ளனர்.
இராணுவ உயர் அதிகாரிகள் பாராட்டும் போது அது குற்றமாகப் பார்க்கப்படாத நிலையில், ஒரு சாமானியத் தமிழ்க் கலைஞர் பாடும் போது அது பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படுவது சட்டத்தின் இரட்டைத் தன்மையைக் காட்டுகிறது.
பாராளுமன்றத்தில் எழுந்த கடுமையான எதிர்ப்பு மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாக, சங்கீத்சனுக்கு ஜனாதிபதியினால் முறைப்படியான தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது தற்காலிக நிம்மதி எனினும், கலைஞர்கள் மீதான இத்தகைய அடக்குமுறை எதிர்காலம் குறித்த அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் மிகச் செல்வாக்கு செலுத்திய, முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஈஸ்ரர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் சதித்திட்டக் குற்றச் சாட்டுகளின் பின்னணியிலேயே இவர் கைது செய்யப் பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் சுரேஷ் சாலேக்கு முதலில் 90 நாட்களும், பின்னர் மேலும் 90 நாட்களும் எனத் தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சுரேஷ் சாலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் அவருக்குரிய அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்னர் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற சட்டம், இன்று நாட்டின் உயர் புலனாய்வு அதிகாரியாக இருந்த ஒருவருக்கு எதிராகவும் திரும்பியிருப்பது காலத்தின் முரண் நகையாகும்.
பயங்கரவாத தடைச்சட்டம் என்பது எத்தகைய ஆபத்தானது, அது ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப எவரையும் விழுங்கக்கூடியது என்பதை சுரேஷ் சாலே யின் விவகாரம் தென்னிலங்கைச் சமூகத்திற்கு உணர்த்தி யிருக்கிறது.
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமவாயம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் உள்நாட்டு அமைப்பு கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தற்போதைய அரசாங்கமும் அதனை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார். ஆனால், இந்த சட்ட ஒழிப்பு என்பது வெறும் கண் துடைப்பு நாடகமாகவே முடியும் என்ற ஐயம் எழுந்துள்ளது.
ஏனெனில், தற்போதைய சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அல்லது அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவு, பழைய சட்டத்தை விடவும் ஆபத்தான பிரிவுகளைக் கொண்டுள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
புதிய சட்ட வரைவில் உள்ள குறைபாடுகளில் முதன்மையானது அதன் தெளிவற்ற வரையறையாகும். பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கான துல்லியமான விளக்கம் தற்போதைய சட்டத்திலும் இல்லை. வரப்போகும் புதிய சட்டத்திலும் இல்லை.
இதனால் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் எவரையும் பயங்கரவாதியாக முத்திரை குத்த முடியும். இது மக்களாட்சி மீதான தாக்குதலாக மாறும் அபாயம் உள்ளது. சிவில் சமூகப் போராட்டங்கள், தொழிற்சங்க வேலைநிறுத்தங்கள், ஊடகவியலாளர்களின் புலனாய்வுக் கட்டுரைகள், கலைஞர்களின் படைப்புகள் போன்றவற்றை அரசுக்கு எதிரான பயங்கரவாதத் தூண்டலாக வியாக்கி யானம் செய்ய புதிய சட்டத்தில் இடமுண்டு.
மேலும், பொலிஸாருக்கும் பாதுகாப்புப் படையி னருக்கும் நீதிமன்ற அனுமதியின்றி எழுந்தமானமாகக் கைது செய்யும் அதிகாரம் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசாங்கம் சர்வதேச தராதரங்களுக்கு இணங்காத, மனித உரிமைகளை நசுக்கக்கூடிய ஒரு சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றத் துடிப்பதை நீதி அமைச்சரின் அவசரக் கூற்றுகள் வெளிப்படுத்துகின்றன.
இலங்கையின் தேசிய மட்டத்திலான இந்தச் சட்டப் போராட்டங்கள் ஒருபுறமிருக்க, தமிழ் மக்களின் முதன்மை அரசியல் சக்தியாக விளங்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் காணப்படும் உள்வீட்டு மோதல்கள் தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒரு வரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையிலான கருத்தியல் மற்றும் அதிகார மோதல் தற் போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுமந்திரன் தரப்பு மிதவாத, இராஜதந்திர அணுகுமுறையையும், சர்வதேச மற்றும் சட்ட ரீதியான தீர்வையும், தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடனான இணக்கத்தையும் முன்னிறுத்துகிறது.
மறுபுறம், சிறிதரன் தரப்பு தீவிர தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும், தரைமட்ட மக்கள் செல்வாக்கையும், சமரசமற்ற உணர்வுபூர்வ அரசியலையும் வலியுறுத்துகிறது.
இந்த இரு துருவ மோதலானது வெறும் தனிநபர் முரண்பாடல்ல. அது தமிழ்த் தேசிய அரசியல் பயணிக்க வேண்டிய பாதை எது என்பதைத் தீர்மானிக்கும் கொள்கை மோதலாகும். சங்கீத்சனின் கைது போன்ற தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வுசார் விடயங்கள் எழும் போது, சிறிதரன் தரப்பு அதனைத் தீவிர அரசியல் பிரசாரப் பொருளாக மாற்றி, தரைமட்ட மக்களின் ஆதரவைத் திரட்ட முயன்றிருந்தது.
மறுபுறம், சுமந்திரன் தரப்பு சர்வதேச சட்ட ரீதியான வழிமுறைகளின் ஊடாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்கொள்ள முனைந்திருந்தது. கட்சிக்குள் நிலவும் இந்த உள்முரண்பாடுகள் காரணமாக, பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான தமிழர்களின் கூட்டுக்குரல் சிதறடிக் கப்படுகிறது.
ஒட்டுமொத்தத் தமிழ் சமூகமும் தங்களுக்கு எதிரான சட்ட அடக்குமுறைகளை எதிர்த்து ஓரணியில் நிற்க வேண்டிய சூழலில், பிரதான தமிழ் கட்சிக்குள் நிலவும் இந்த அதிகாரப் போட்டி அரசாங்கத்திற்குச் சாதகமான சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கிறது.
அதன் விளைவாகவே சட்ட ரீதியாக பிணையில் விடுவிக்கப்பட்ட சங்கீத்சனை தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அழைத்துச் செல்லும் துரதிஷ்ட வசமான நிலைமை காணப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டம் என்பது இலங்கையின் ஜனநாயக அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள ஒரு புற்றுநோய் போன்றதாகும். பாடகர் சங்கீத்சனின் விவகாரம் கலைச் சுதந்திரத்தையும், சுரேஷ் சாலேயின் விவகாரம் அதிகார வர்க்கத்தின் வீழ்ச்சியையும், சுமந்திரன் – சிறிதரன் மோதல் தமிழ் அரசியலின் பலவீனத்தையும் ஒரே புள்ளியில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
அரசாங்கம் இன்னும் இரு மாதங்களில் பழைய சட்டத்தை நீக்கிவிட்டு, அதைவிடக் கொடிய புதிய சட்டத்தைக் கொண்டுவர முற்படுவது பழைய மதுவைப் புதிய மொந்தையில் ஊற்றுவதற்கு ஒப்பானது.
பயங்கரவாதம் என்பதற்கான சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தெளிவான வரையறை உருவாக் கப்படாத வரை, இலங்கையில் கலைஞர்களும், ஊடகவி யலாளர்களும், அரசியல் எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளேயே வாழ்வர்.
எனவே, வெறும் சட்ட மாற்றங்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த அரசியல் சிந்தனையிலும், மனித உரிமை மதிப்பீட்டிலும் தீவிர மாற்றம் ஏற்படாவிடில் இலங்கை சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்ப முடியாது.

தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

தமிழ் மொழி பேசுகின்ற சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளன.

அதற்கமைவாக, இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் முதலாவது உரையாடலொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்றுள்ளது

இதன்போது ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அண்மைக்காலச் செயற்பாடுகள், மற்றும் அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் காலங்கடத்தும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலின்போதும், பின்னர் பாராளுமன்ற தேர்தலின்போதும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் நீடிக்கின்றவற்றை கோடிட்டுக் காண்பித்து கடிதமொன்றையும் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கான வரைவு தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த வரைவு எதிர்வரும் வாரமளவில் இறுதிசெய்யப்பட்டு அடுத்த பாராளுமன்ற காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமாரவைச் சந்திப்பது இலக்காகவுள்ளது.

இதேநேரம், குறித்த கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் உள்ளீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – எர்டோகன்

இஸ்ரேல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது மனிதகுலத்தின் கடமை மற்றும் மனிதகுலத் தின் முன்னணி. வரலாறு மீண்டும் நிகழ அனுமதிக் கப்படக்கூடாது என துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் கடந்த வியாழக்கிழமை(11) தெரிவித்துள்ளார்.
“சிரியா மற்றும் லெபனானுக்கு எதிரான நெதன்யாகு மற்றும் அவரது குற்றவியல் வலையமைப்பின் தாக்குதல் கள், இந்த இரண்டு சகோதர நாடுகளை மட்டுமல்ல, இப்போது உலகையும் அச்சுறுத்தும் ஒரு நிலையை எட்டியுள்ளன. ‘பெரிய இஸ்ரேல்’ என்ற மாயையின் இறுதி நோக்கம் என்ன என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம். இன்ஷா அல்லாஹ், நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.”
எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹிட்லரின் முன்னிலையில் நில விய மௌனமும் செயலற்ற தன்மையும் உலகெங்கிலும் 80 மில்லியன் மக்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. மனநிலை பிறழ்ந்த ஒரு கொடுங்கோலனின் வெறித்தனத்திற்கு ஒட்டுமொத்த மனிதகுலமும் விலை கொடுத்தது. இன்று, அதே தவறு மீண்டும் செய்யப்படுகிறது. காசாவின் கசாப்பு மன்னன் நெதன்யாகு மற்றும் அவரது அமைச்சரவையின் இனப்படுகொலைச் செயல்கள், ஒரு காலத்தில் ஹிட்லரை வரவேற்ற அதே மௌனத்துடனும் பதிலின்மையுடனும் பார்க்கப்படுகின்றன.
ஒரு நெருப்பு வளரும்போது, ​​அது தொடங்கிய பகுதியை மட்டும் எரிப்பதில்லை; அதன் தீப்பொறிகள் உலகம் முழுவதும் பரவுகின்றன என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. ஹோர்முஸ் ஜலசந்தியில் தீர்க்கப்படாத சூழ்நிலைக்காக இன்று ஒட்டுமொத்த உலகமும் விலை கொடுப்பதைப் போலவே, இஸ்ரேலின் சட்டவிரோதச் செயல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால், மனித குலம் முழுவதுமே இந்தப் பிராந்தியத்துடன் சேர்ந்து அதன் விளைவுகளைச் சந்திக்கும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கருத்துரைப்பவர்கள் நீதிமன்றில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள், வெறுமனே ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கி பகிரங்கக் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து, தங்களது சான்றுகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், தங்களின் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சட்டப்பூர்வ வழிகளின் மூலம் நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

“அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும். உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதற்கான காரணங்களை நீதிமன்றமே விளக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி தொடர் உண்ணாவிரதமாகத் ஆரம்பிக்கப்பட்ட தற்போதைய போராட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த இயக்கம் உண்மைகளின் அடிப்படையில் அமையாததால் தற்போது சிதறடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

“தாங்கள் கூறுவது பொய் என்பது அவர்களுக்கே தெரியும். அதனால்தான் அவர்களால் இந்த இயக்கத்தை ஒரே மாதிரியாகத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாமல், தற்போது பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட முயல்கிறார்கள்,” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் முறையாக முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் உட்பட பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட ஒரு சிறிய குழுவினர், தற்போதைய விசாரணைச் செயல்முறைகளின் போது சுரேஷ் சலேவுக்கு நீதி கோருவதாகக் கூறி பிரசாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம்சாட்டினார்.

நீதிமன்றச் செயல்முறைகளுக்கு இடையூறு விளைவித்த பல நபர்களுக்கு எதிராக ‘நீதிமன்ற அவமதிப்பு’ உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஏற்கனவே நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை மற்றும் தாக்குதல்கள் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

பென்-க்விர் மீது இத்தாலி, பிரான்ஸ் விசாரணைகுழு அமைப்பு

காசாவிற்குச் சென்ற ஒரு உதவிப் படகுக் குழுவில் பங்கேற்ற பன்னாட்டு ஆர்வலர் களை, தீவிர வலதுசாரி இஸ்ரேலிய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் தவறாக நடத்தியதாகக் கூறப்படுவது குறித்து, பிரான்ஸ் இதேபோன்ற ஒரு விசாரணையைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இத்தாலி ஒரு விசாரணையை கடந்த வியாழக்கிழமை(11) தொடங்கியுள்ளது. கூறப்படும் இந்தத் தவறான நடத்தைக்காக பென்-க்விர் மீது ஐரோப்பிய ஒன்றி யம் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வரும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது.
இந்தப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றன. அதன் சுமார் 2.1 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மீது இஸ்ரேல் பலமுறை மிகவும் கடுமையான அணுகுமுறையைக் கையாண்டு வந்தாலும், பென்-க்விர் என்பவரின் செயல்களால் இந்த சமீபத்திய சம்பவம் மேலும் மோசமடைந்தது. கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கப்பலுக்கு அந்த அமைச்சர் ஒரு பெரிய இஸ்ரேலியக் கொடியை அசைத்தபடி வந்து, மண்டியிட்டுக் கட்டப்பட்டிருந்த ஆர்வலர்களைக் கேலி செய்து, அவர்களை நீண்ட காலம் சிறையில் அடைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். அவர் அந்த காணொளியையும் இணையத்தில் பதிவிட்டார்.
இந்தச் செயல் பென்-க்விர்க்கு பரவலான சர்வதேச கண்டனத்தையும், உள்நாட்டில் சில விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. “பிரெஞ்சு மற்றும் ஐரோப்பியக் குடிமக்களுக்கு எதிரான அவரது கண்டிக்கத்தக்க செயல்களை” காரணம் காட்டி, பிரான்ஸ் அவருக்கு நாட்டிற்குள் நுழையத் தடை விதித்தது. போலந்தும் அமைச்சருக்குப் பயணத் தடை விதித்தது. அதே நேரத்தில், கடந்த வாரம் அயர்லாந்து, ஃப்ளோட்டிலா விவகாரம் மற்றும் பாலஸ்தீன எதிர்ப்புக் கருத்துக்கள் காரணமாக, பென்-க்விர் மற்றும் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகிய இருவரையும் நாட்டிற்குள் நுழையத் தடை செய்தது.
இந்தப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் மிகவும் அவசியமாகத் தேவைப் படுகின்றன. அதன் சுமார் 2.1 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் இடம்பெயர்ந்துள்ளனர். இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மீது இஸ்ரேல் பலமுறை மிகவும் கடுமையான அணுகுமுறையைக் கையாண்டு வந்தாலும், பென்-க்விர் என்பவரின் செயல்களால் இந்த சமீபத்திய சம்பவம் மேலும் மோசமடைந்தது. கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கப்பலுக்கு அந்த அமைச்சர் ஒரு பெரிய இஸ்ரேலியக் கொடியை அசைத்தபடி வந்து, மண்டியிட்டுக் கட்டப்பட்டிருந்த ஆர்வலர்களைக் கேலி செய்து, அவர்களை நீண்ட காலம் சிறையில் அடைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். அவர் அந்த காணொளியையும் இணையத்தில் பதிவிட்டார்.
இந்தச் செயல் பென்-க்விர்க்கு பரவலான சர்வதேச கண்டனத்தையும், உள்நாட்டில் சில விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. “பிரெஞ்சு மற்றும் ஐரோப்பியக் குடிமக்களுக்கு எதிரான அவரது கண்டிக்கத்தக்க செயல் களை” காரணம் காட்டி, பிரான்ஸ் அவருக்கு நாட்டிற்குள் நுழையத் தடை விதித்தது.
போலந்தும் அமைச்சருக்குப் பயணத் தடை விதித்தது.  அதே நேரத்தில், கடந்த வாரம் அயர்லாந்து, ஃப்ளோட்டிலா விவகாரம் மற்றும் பாலஸ்தீன எதிர்ப்புக் கருத்துக்கள் காரணமாக, பென்-க்விர் மற்றும் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகிய இருவரையும் நாட்டிற்குள் நுழையத் தடை செய்தது.

செம்மணியில் அகழ்வு பணிகள் விஸ்தரிப்பு

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் (14) 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.

அகழ்வின் போது, இன்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.

அவற்றுள் 341 என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

இன்றையதினம் 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன மேலும் 02 என்புக்கூடுகள் வெளிப்பட்டதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார்.

இவற்றில் 04 என்புகள் சிறுவர்களுடையதும், 02 வளர்ந்தவர்களுடையதும், ஒன்று குழந்தையினதும் என கண்டறியபட்டுள்ளன.

இதேவேளை, இன்று முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.

பின்லாந்தில் ஒரு புதிய நேட்டோ ஆர்க்டிக் குழு 

பின்லாந்தில் நேட்டோ ஒரு புதிய ஆர்டிக் குழுமத்தை உருவாக்குகிறது. ஸ்வீடன் இராணுவத்தின் நோர்போட்டன் படைப்பிரிவின் தளமான புடென் நகரில், வடக்கு திசைக்கான புதிய நேட்டோ முன்னணி தரைப்படைகள் (FLF) ஜூன் 6 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளன.
புடெனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு ஸ்வீடன் பட்டாலியன் குழுவும், பின்லாந்தின் ரோவானிமியில் உள்ள ஒரு பன்னாட்டுத் தலைமையகமும் இந்தக் குழுமத்தின் அடிப்படையாக உள்ளன. முறையாக, இந்தப் பிரிவு ஐரோப்பாவின் உச்ச நேசப்படைகளின் தளபதியின் (SACEUR) கீழ் செயல்படுகிறது. 2026 ஆம் ஆண்டில், ஸ்வீடன் இந்த முன்னணி தரைப்படைகளுக்காக சுமார் 600 இராணுவ வீரர்களை ஒதுக்கும், மேலும் இந்த எண்ணிக்கையை 1,200 பேராக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
எதிர்காலத்தில், தற்போதைய பட்டாலியன் குழு ஒரு முழுமையான பிரிகேடாக விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேட்டோ மற்றும் பின்லாந்து அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த புதிய கட்டமைப்பு ஆர்டிக் சூழ்நிலைகளில் செயல் படுவதற்கும், தூர வடக்கின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உண்மையில், இது ரஷ்யாவின் வடமேற்கு எல்லைகளில் கூட்டணியின் மற்றொரு நிரந்தரமாக செயல்படும் இராணுவ அமைப்பை உருவாக்குவதைப் பற்றியது. பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் இணைந்த பிறகு, பால்டிக் கடல் மற்றும் ஆர்டிக் பகுதிகள் அந்த அமைப்பின் இராணுவத் திட்டமிடலின் முக்கிய திசைகளில் ஒன்றாக மாறியுள்ளன.