Home Blog Page 1308

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து ஆராய்கிறார் பிரீத்தி பட்டேல்

விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கம் குறித்து ஆய்வு செய்யுமாறு பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலுக்கு பிரித்தானியாவின் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்தாகவும், அவர் அதனை ஆய்வு செய்வதாகவும் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த மெயில் என்ற நாளேடு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளை பிரித்தானியா அரசு 2001 ஆம் ஆண்டு தடை செய்திருந்தது. எனினும் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப்புலிகள் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதால் அதன் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசு பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தது.

விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு சட்டவிரேதமானது என பிரித்தானியா நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

தாம் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்படாகவும் இறுதி முடிவுக்கு காத்திருப்பதாகவும் பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேசத்திடம் நீதி கோரி 14 வது நாளாக யாழில் தொடரும் போராட்டம்- கூட்டமைப்பு ஆதரவு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.
May be an image of 5 people, people sitting and people standing
சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 14வது நாளாக இன்றும் தொடர்கின்றது.
May be an image of 3 people and people sitting
நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
May be an image of 7 people and people sitting
இன்றையதிம் போராட்டத்திற்கு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியார் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் – அதிகாரிகள் எவரும் சந்திக்கவில்லை என குற்றச்சாட்டு

கடந்த 7 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தம்மை, அரச கட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் எவரும் நேரில் சந்திக்க வரவில்லை என வட மாகாண சுகாதார தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும், வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம், 7ஆவது நாளாக இன்றும்  தொடர்கின்றது.

கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு, ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகள் வருகைதந்திருந்த போதிலும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இதுவரை வருகை தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு, அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட சுகாதாரப் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அந்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நிரந்தர நியமனக் கடிதம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் 454 பேர், தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றம் – தமிழர்களின் காணிகளை அபகரிக்க அரசு திட்டம்: எம்.ஏ.சுமந்திரன்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இளந்தலைவர்களை சந்திப்பதற்கு இந்திய தூதுவர் அதிக ஆர்வம் காட்டியமையினால் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், இளையவர்கள், பெண் உறுப்பினர் உள்ளிட்ட அனைவரும் 1 மணிநேரம் உரையாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டோம்.

இதன்போது இளந்தலைவர்கள் அரசியல் நிலைப்பாடு, தற்போது தமிழ் மக்களிடத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக தெரியப்படுத்தினர்.

இதனை செவிமடுத்த இந்திய தூதுவர், அவ்விடயம் தொடர்பாக அவரது நிலைப்பாட்டினை தெரிவித்தார்.

அரசியல் நிலைப்பாட்டில், வழமையான நிலைப்பாட்டினையே இந்தியா கொண்டுள்ளதாகவும் அபிவிருத்தி விடயத்தில் பங்களிப்பினை வழங்குவதிலும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,13 திருத்தத்தில் காணப்படுகின்ற பொலிஸ் காணி அதிகாரங்களை உடனடியாக அமுல்ப்படுத்தினால் சில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க முடியுமென எமது தரப்பினர், தூதுவரிடம் தெரியப்படுத்தினர்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படுவது, பெரும்பான்மை மக்களிடத்தில் தேவையில்லை என்ற கருத்தை பதிவு செய்வதற்கான  அரசாங்கத்தின் சூழ்ச்சியாகவே கருதுகின்றோம்.

ஆகவே, அத்தகைய நிலையேற்படாமல் தடுப்பதற்கு உடனடியாக மாகாண சபைத் தேரர்தலினை நடத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை சர்வதேச நீதிமன்ற பொறிமுறை அவசியம் என்பதை வெளிப்படுத்தி இருந்தோம். பொறுப்புக்கூறல் விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே கொண்டுவர  வேண்டும்.

மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் அதனைப் பாரப்படுத்துவதற்கு ஏதுவாக செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைதான் எங்களது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இந்த சபை சர்வதேச  நீதிமன்றத்தில்  எதனையும் பாரப்படுத்த முடியாது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒவ்வொரு சபைக்கும் சில சில அதிகாரங்கள் இருக்கின்றன.

இந்த மனித உரிமை பேரவைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பாரப்படுத்தும் அதிகாரம் கிடையாது. அந்த அதிகாரம் பாதுகாப்பு சபையிடம் மாத்திரம்தான் இருக்கின்றது.

இதனை பல தடவை மக்களிடம் தெளிவுப்படுத்தினோம். நாங்கள் கூறியது பொறுப்புக்கூறல் விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே கொண்டு வாருங்கள்.

செயலாளர் நாயகத்தின் ஊடாக பாதுகாப்பு சபைக்கு கொண்டுச் சென்று, பொதுச்சபை, பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறே கூறி இருக்கின்றோம்

மேலும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபில் நாங்கள் கேட்டுக்கொண்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொறுப்புக்கூறல் இந்த பேரவையில் இருந்து வெளியே கொண்டு வரும் விடயம் தெட்ட தெளிவாக இருக்கின்றது.

இதேவேளை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்க்கின்றோம்.

ஆவணங்களை அனுராதபுரத்தில் வைத்துவிட்டு, தமிழ் மக்கள் தங்களின் தாயகம் என்று கூறும் நிலத்தை என்னவிதமாக அபகரிக்கலாம் என்ற திட்டங்களை வகுப்பதற்காகத்தான் குறித்த ஆவணங்கள் இரவோடிரவாக மாற்றப்பட்டுள்ளது”  என்றார்.

“பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று நூல்வெளியீடு

வரலாற்றாய்வாளர் அருணா செல்லத்துரையின் “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று   இடம்பெற்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழ்த்துரையை  தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி க. சுவர்ணரயா நிகழ்த்தினார்.
IMG 0210 “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று நூல்வெளியீடு
அதனைத் தொடர்ந்து நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலை சட்டத்தரணி சிற்றம்பலம் வெளியிட்டுவைக்க அதன் முதற்பிரதியை வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வீ.ஜெகசோதிநாதன் பெற்றுக் கொண்டார்.
நூலிற்கான மதிப்பீட்டுரையை புளியங்குளம் ஆசிரியர் வாண்மைவிருத்தி நிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் நிகழ்த்தியதுடன்,பதிலுரையை நூல் ஆசிரியரும், நன்றியுரையை மருத்துவர் செ.மதுரகனும் நிகழ்த்தியிருந்தனர்.
IMG 0208 “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று நூல்வெளியீடு
ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் வன்னி மண்சார்ந்த வரலாற்றாய்வு நூல்களில் இது 9நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: டெல்லி எல்லையில் வீடுகளைக் கட்டும்  விவசாயிகள்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளும் அவர்களது உறவினர்களும் போராட்டக் களத்திற்கு அருகில் செங்கல் கொண்டு வீடுகளை கட்டத் தொடங்கியுள்ளனர்.

இனி வரவுள்ள கோடைக்காலத்தை சமாளிப்பதற்காகவும் இப்போராட்டத்தை நீண்ட காலத்துக்கு நடத்தும் நோக்கிலும், விவசாயிகள் இந்த வீடுகளை கட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லி திக்ரி எல்லையில் கட்டப்படுகிற முதல் செங்கற்கல் வீட்டை பற்றி அதன் உரிமையாளரான ரோஹ்தாஷ் கில், “ வீட்டு ஜன்னலில் பச்சை கிளி பொம்பை ஒன்றை கட்டுவோம். எங்கள் கிராமங்களில் அது பாரம்பரிய பழக்கம். சுமார் 10-12 பேர் சேர்ந்து இரண்டு நாட்களில் இந்த வீட்டைக் கட்டினோம்” என்றார்.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ட்ராக்டர் பேரணி, சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவில் மத்திய அரசு உறுதியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்’ -அருட்தந்தை மா.சத்திவேல்

நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்  என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவித்த அவர்,  “அரசியல் கைதிகள் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கான காரணம் ஒட்டுமொத்த அரசியல் தமிழ்த் தலைமைகளுமே.

சிவில் சமூகங்கள்  பொறுப்பேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதாவது அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் தீர்த்திருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் இதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

தமிழ் அரசியல் தலைமைகளால் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசியல் தலைமைகள் கொரோனாவினைக் காரணம் காட்டுகிறார்களே தவிர, அரசியல் கைதிகளைப் பார்ப்பதனையோ, அன்றாட தேவைகளையோ  கவனிப்பதும் இல்லை.

அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் தான் முன்னொரு காலத்தில் அரசியலை முன் நகர்த்தியவர்கள். இவர்கள் பலமாக இருந்ததனால் தான் பேச்சுவார்த்தை முன்னர் நடந்திருந்தது. இவ்வாறு பலமாக இருந்ததனால் வெவ்வேறு நாடுகளில் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். அந்தளவு ஒரு பலமான சக்தியாக இருந்த அரசியல் கைதிகளை இன்று யாரும் கண்டுகொள்ளாத  நிலையில்தான் அவர்கள் அகதிகளாக இருக்கிறார்கள்.

தற்போது இருக்கும் அரசாங்கம் அரசியல் கைதிகளே இல்லை என கூறுகின்றார்கள் என்றால், அவர்களுக்கான விடுதலையே இனி இல்லை. இந்த அரசியல் கைதிகள் இருக்கும் வரைக்கும் இந்த பயமுறுத்தல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

அண்மையில் பெருந்தோட்டத்துறையில் இடம்பெற்ற ஒரு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவரைக்கூட பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். அப்படியானால் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேல் நீக்கப்படப்போவதும் இல்லை.

அரசியல்  கைதிகளுக்கான விடுதலை நடைபெறப்போவதுமில்லை, அரசியல் கைதிகளோ அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவோ நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அவர்கள் – அரசியல் கைதிகள் – அகதிகள் தான்.  அவர்களுக்கு வீடுமில்லை, அரசியல் கட்சிகளும் இல்லை,  உதவி கேட்க நபர்களும் இல்லை.

வெளிநாட்டில் உள்ள சில அமைப்புக்கள் இவர்களின் வழக்கிற்கு உதவி செய்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் உதவி செய்யலாம். இது வழக்குடன் சம்பந்தப்பட்டதல்ல. இது அரசியலோடு சம்பந்தப்பட்ட விடயம். அந்தவகையில் அரசியல் ரீதியாக இவர்களுக்கு விடுதலை இல்லை என கூறினால், இவர்கள் அரசியல் அகதிகள் தான். நாடற்ற மக்கள்  வேறு நாடுகளில் தங்கியிருப்பதுபோல் இவர்களும் எந்தவொரு அங்கீகாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

அரசியல் கைதிகள் தமது கோரிக்கையை, அரசாங்கத்திடம் வைப்பதா? அரசியல் தலைமைகளிடம் வைப்பதா? சிவில் சமூகத்திடம் வைப்பதா? பொதுமக்களிடம் வைப்பதா? என தெரியாது அரசியல் அகதியாகவும், அரசியல் அநாதைகளாகவும் இருக்கின்றார்கள்” என்றார்.

மியான்மரின் மேலும் பலர் சுட்டுக்கொலை

மியான்மரில்  ஏற்பட்டுள்ள இராணு ஆட்சிக்கு எதிர்ப் தெரிவித்து  மக்கள்,  தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

சனிக்கிழமையன்று  மாண்டலேவில் நடந்த போராட்டத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல்  மியான்மரின் தெற்கு நகரான பியாய் நகரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.  இதேபோல் நேற்று முன் தினம் நடந்த போராட்டத்தில் யாங்கூனில் 3 பேர்  கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேர போராட்டங்களில் காவல்துறையும், இராணுவமும் கடுமையாக மக்களிடம்  நடந்துகொள்கின்றன என்று போராட்டக்காரர்கள் சிலர் கூறியுள்ளனர். சுமார் 2000ம் பேர் வரையில் கைது  செய்துள்ளது காவல்துறை.

இதுபோல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவர் தெகெட்டா டவுன்ஷிப்  பகுதியில் உயிரிழந்ததாகவும் செய்திகள் பரவியுள்ளன. மியான்மருக்கான ஐநா மனித  உரிமைகள் ஆணைய அதிகாரி டாம் ஆண்ட்ரூஸ், ‘இதுவரை போராட்டக்காரர்களில்  70 பேர் கொல்லப்பட்டிருக்கலாம்’ என்று கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்குத் தடை

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர்  நாள் அன்று, இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

தேசிய தௌஹித் ஜமாஆத் என்னும் அமைப்பே, இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து தற்காலிகமாக   இலங்கையில் புர்கா ஆடை, மதரசா பாடசாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த பின்னணியில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் மிக வேகமாக நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, புர்கா ஆடைக்கான தடை விதிக்கும் அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்கு இனி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவேண்டும். விரைவில் இந்த ஆணை அமலுக்கு வரும்  என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இலங்கையில் இயங்கும் மதரசா பாடசாலைகளையும் விரைவில் தடை செய்யவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்த கொணடு வரப்பட்டமைக்கான இலக்குகள் இது வரையில் அடையப்படவில்லை – ஜயநாத் கொலம்பகே

13ஆவது திருத்த சட்டம் கொணடு வரப்பட்டமைக்கான இலக்குகள் இது  வரையில் அடையப்படவில்லை என வெளிவிவகார செயலாளர் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கடந்த கால கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டவுள்ளதோடு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கான அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே 13ஆவது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வன்முறையை நிறுத்துவதற்கும் மாகாணங்களை முன்னேற்ற முடியும் என்றே இந்தியா கருதியது. ஆனால் அது இலக்குகளை அடையவில்லை.

அத்தோடு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது. ஆனால் அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட்டு மாகாண சபைகள் வினைத்திறனாக செயற்படுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

அதே நேரம் தற்போதைய அரசியலமைப்பானது 20 முறைகள் திருத்தப்பட்டு விட்டது. ஆகவே புதிய அரசியலமைப்பொன்று அவசியமற்றது. அந்த அரசியலமைப்பானது கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும்” என்றார்.